Published:Updated:

WB:மிக பலத்த பாதுகாப்புடன் இறுதி கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா, மே 09, 2011

மாவோயிஸ்ட் பாதிப்புள்ள 14 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ##~~##

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை ஆறாவது மற்றும் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

14 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் இந்த இறுதிக்கட்ட தேர்தலில் 26.57 லட்சம் பேர் தகுதியுள்ள வாக்காளர்களாவர்.  இவர்களில் ஆண்கள் 13.69 லட்சம் பேர். பெண்கள் 12.87 லட்சம் பேர்.

மொத்தம் 97 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.  இவர்களில் பிஜேபி வேட்பாளர்கள் 14 பேர்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் 11 பேர்.  சுயேச்சை வேட்பாளர்கள் 18 பேர். இதர கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 53 பேர். 

மொத்த பெண் வேட்பாளர்கள் 7 பேர். பலராம்பூர் மற்றும் ஜோய்பூர் ஆகிய இருதொகுதிகளிலும் அதிகபட்சமாக தலா 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கர்பேட்டா தொகுதிகளில் குறைந்தபட்சமாக 3 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். ராணிபந்த் தொகுதியில் 2 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இந்த இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 4513 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 3534 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பந்துவான் தொகுதிதான் மிகப்பெரிய தொகுதியாகும். இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.23 லட்சம் பேர். மிகச்சிறிய சட்டப்பேரவை தொகுதி நயக்ராம். வாக்காளர்களின் எண்ணிக்கை 1.74 லட்சம் பேர்.