Published:Updated:

அசல் போல இருக்கும் அசத்தலாவும் இருக்கும்!

மாடல் மேக்கிங் மேஜிக்

##~##

ருவரைக் கிண்டலடிக்க 'டம்மி பீஸ்’ என அழைப்பது வழக்கம். ஆனால்,  சென்னையில் 'டம்மி பீஸ்’ செய்வது சக்கை போடு போடும் ஒரு  பிசினஸ் என்பது தெரியுமா?’ ஒன்றைப் போல அப்படியே இன்னொன்றை உருவாக்கும் ஜோசப் பாபினைச் சந்தித்தேன்.

 ''முன்னாடி எல்லாம் 'மினியேச்சர்’னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டுப் போயிடுவாங்க. ஆனால், இப்போ இந்தத் துறை ரொம்பத் தூரம்  முன்னேறி வந்திருச்சு. அதிகமா செலவு பிடிக்கிற சினிமா செட்டுகளை முதல்ல சின்ன சைஸ்ல செஞ்சு பார்த்து, அதுல தேவையான திருத்தங்கள் செய்து பிறகு பெருசா செட்போடு வாங்க. தேவையில்லாத செலவுகள், டைம் வேஸ்ட் ஆகாம இருக்கிறதுக்கு இந்த மினியேச் சர் கான்செப்ட் உதவி செய்யும். ஆனால், 'மாடல் மேக்கிங்’ங்கிறது வேற ஸ்டைல். ஒரு பொருளை அப்படியே அச்சு அசலா சின்னதாவோ, பெருசாவோ செய்யறதுதான் மாடல் மேக்கிங். சாதாரண பேனாவை மெகா சைஸ்ல ஆள் உயரத்துக்குவைக்கிறதும், பிரமாண்டமான கப்பலை நம்ம வீட்டு வராண்டா சைஸுக்குச் செஞ்சுவைக்கிறதும்தான் மாடல் மேக்கிங். பார்க் கிறதுக்கு அசல் போலவே இருக்கும். பார்க்கிறவங்க மனசுல ஈஸியா ரீச் ஆகும். அதனால விளம்பரத் துறையில இந்த மாடல் மேக்கிங்குக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ்.

அசல் போல இருக்கும் அசத்தலாவும் இருக்கும்!

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்காக நான்உருவாக் கின ஆளுயர சிங்கம் சிலை, ஒரு கையடக்க கேமராவை மெகா சைஸ்ல வெச்சது ரெண்டுமே மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆச்சு.  வெட்டப்பட்ட மரம் மாதிரி ஒரு மாடல் செஞ்சேன்.  அதையே கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அதில் கழுத்து  வெட்டப்பட்ட மனித உடல் தெரியும். 'மரங் களை வெட்டுவது மனிதர்களை வெட்டுவதற்கு சமம். வனங்கள் நம் வளங்கள்’ங்கிற கான்செப்ட்டுக்காக நாங்க உருவாக்கின மாடல் இது. இந்த மாதிரி புதுப் புது ஐடியாக்களுக்கு இங்கே நல்ல வரவேற்பு இருக்கு.

அசல் போல இருக்கும் அசத்தலாவும் இருக்கும்!

பெரும்பாலும் வணிக நிறுவனங்கள் தங்களோட ஷோ ரூம்களை அலங்கரிக்க நிறைய மாடல்களை கேட்டு வாங்குறாங்க. இதைத் தவிர சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு சார்ந்த கண்காட்சிகள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் நடத்துறவங்களும் இதைப் பற்றி ஆர்வமா விசாரிக்கிறாங்க.

அசல் போல இருக்கும் அசத்தலாவும் இருக்கும்!

இந்த மாடல்களை படம் பிடிக்கிறதுக்காகவே பிரபல போட்டோகிராஃபர் சரத் ஹக்சரிடம் ஒப்பந்தம் போட்டு இருக்கோம். மாடலை அச்சு அசலா கொண்டுவர்றது மட்டுமே எங்க வேலை கிடையாது. அதை எங்க வாடிக்கையாளர்கள், மக்கள்கிட்ட போட்டோ, வீடியோனு விஷ§வல் மூலமா கொண்டுபோய் சேர்ப்போம். சினிமா, விளம்பரங்கள்தான் இந்த மாடல் மேக்கிங் ஸ்கோர் பண்ற இடம். சாதாரண தெர்மாக்கோல் அட்டைகளை   வெச்சு செய்யறது மட்டுமில்லாம; வருஷக் கணக்கில் நீடிச்சு நிக்கிற மாதிரியும் மாடல்கள் உருவாக்குறோம். சென்னையில் இந்த மாடல் மேக்கிங்கில் நிறைய வேலைவாய்ப்பு இருந்தாலும் செய்யறதுக்கு ஆட்கள் ரொம்பவே குறைவாவே இருக்காங்க. ஆர்வத்தோட உள்ள இளைஞர்கள் வந்தா அவங்களுக்கு நல்லஎதிர் காலம் உண்டு!'' என்கிறார் நம்பிக்கையான வார்த்தைகளில்.

- நீரை மகேந்திரன்
படம்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு