Published:Updated:

வலையோசை : ஓலைக்கணக்கன்

வலையோசை : ஓலைக்கணக்கன்

வலையோசை : ஓலைக்கணக்கன்

தெரு நாய்!

##~##

உலகில் எந்தப் பசுவும் மற்ற உயிரைக் கொன்று உண்ணாது. எந்தச் சிங்கமும் புலால் உணவைத் தவிர்க்காது. படைக்கப்பட்டபோது அவை கொண்ட நெறிகள், காலம் மாறினாலும் இன்னும் அப்படியேத்தான் உள்ளன. ஆனால் மனிதனுக்கு, காலம் மாற மாற பரிமாண வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வியல் நெறிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறான். இவ்வாறு நெறிகளில் மனிதனால் மாசுபட்டவைதான் நாய்கள். ஒரு மனிதனை நாம் இகழ அதிகம் உபயோகிக்கும் இந்தச் சொல், இகழ் சொல்லாக எதனால் உருமாறியது என்று இன்றுவரை தெரியவில்லை. ஏன் யாருமே பூனை, நரி என்று மற்றவரை இகழ்வது இல்லை.

உலகின் முதல் கூலிப் படையான வேட்டை நாய்கள் உருவாகிய பின்தான், தன் தேவைக்காக ஓர் உயிரின் உதவிகொண்டு ஓர் உயிரைப் பறிக்கலாம் என்ற எண்ணம் மனிதனுக்கு உதித்திருக்க வேண்டும். இப்படி மனித இனத்திலும் தன்னுடைய முத்திரையைப் பதித்த நாய்கள், நம் வாழ்வின் ஒரு பகுதியாக ஒன்றிவிட்டன. தொடர்ந்து ஜெயிக்கும் இந்திய கிரிக்கெட் அணி எப்படி சாத்தியம் இல்லையோ அதேபோல தெரு நாய்கள் இல்லாத இந்தியாவும் சாத்தியம் அல்ல. மனித உயிரைப் பற்றி பெரிதும் வருந்தாத அரசியல்வாதிகள் ஆளும் நாடு, நாய்களைப் பற்றியா கவலைப்படப்

வலையோசை : ஓலைக்கணக்கன்

போகிறது? அதனால் இந்தியாவின் இரவுத் தெருக்களைப் பதிவு செய்யும்போது ஒளியாக மங்கிய தெரு விளக்கும் ஒலியாகத் தெரு நாயின் ஊளையும்தான் பதிவு செய்யப்படுகிறது.

மனிதனுக்கும் நாய்க்கும் ஒரு பொதுவான குணாதிசயம் உண்டு. பெரும்பாலும் இருவரும் தம் சூழ்நிலைகளை கணக்கு செய்த பின்தான் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்.  பகலில் அலுவலகத்தில் மேலாளரிடம் வாலாட்டும் மனிதன், இரவில் வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் குரைப்பதைப் போல, நாய்களும் தன்னுடைய காலை உரசிச் செல்லும் இரு சக்கர வாகனத்தைக் கண்டு பதுங்கி, இரவில் அதனை எந்தத் தொந்தரவும் செய்யாமல் போவோரைக் கண்டு குரைக்கும். தெரு நாய்களின் எண்ணிக்கையை ஏன் குறைக்க வேண்டும்? அவையும் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே என்பவர்களுக்கு ஒரு பந்தயம். பந்தயத்தின் விதிமுறைகள் பின் வருமாறு... இரு கைகளிலும் ஐந்து கிலோ எடை உள்ள பைகளை வைத்துக்கொண்டு அதிகாலை 3 மணிக்கு மந்தவெளி பொது மைதானத்தில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரை இரு நாய்களோடு ஓடி, ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும். அவ்வளவே. உண்மையாகவே முயற்சி செய்ய விழைபவர்கள் தயவுசெய்து ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கொள்ளவும். ஏனெனில் சிறு கீறல்களை எளிதாகத் தவிர்க்க அது உதவும்.

'மனிதனின் பராமரிப்பு இல்லாமல், மனிதனால் உருவாக்கப்பட்ட ஊர்களில் எப்படி நாய்களால் வாழ இயலும்?’ என்று மக்களிடம் அக்கறை உள்ள அரசாங்கம், மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் அரசாங்கம் நாட்டின் நிர்வாகத்தை ஏற்கிறதோ, அதுவரை தெரு நாய்கள் உருவாகிக்கொண்டேதான் இருக்கும். என் போன்ற ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத ஓட்டப் பந்தய வீரர்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்!

வலையோசை : ஓலைக்கணக்கன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு