Published:Updated:

என் ஊர் : லாயிட் சாலை

எம்.ஜி.ஆர். கோஷ்டி சிவாஜி கோஷ்டி!

##~##

''லாயிட்ஸ் சாலை என அழைப்பதே தவறு. 'லாயிட்’ என்பதுதான் சரி. ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் ஐந்தாறு லாயிட் பற்றிய குறிப்புகள் உள்ளன. எந்த லாயிட் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது, 'அவ்வை சண்முகம் சாலை’ என்று பெயர் மாற்றப்பட்டு, குழப்பம் தவிர்க்கப்பட்டு உள்ளது!''- ஃப்ளாஷ்பேக்கில் ஆழ்ந்தவாறு லாயிட் சாலையைப் பற்றிப் பேசுகிறார் திரைப்பட நடிகர் மோகன் ராம்.

 ''ஐம்பதுகளில் என் தாத்தா ஏ.வி.ராமன்,பொதுப் பணித்துறை இன்ஜினீயராக இருந்தார். அவரை, அப்போதுதான்  சினிமாவில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்தஒருவர் பார்க்க வந்தார். அவருக்கு என் தாத்தா, '160, லாயிட் சாலை’ என்ற முகவரியில் உள்ள வீட்டைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். அந்தப் பிரபலம்தான், எம்.ஜி.ஆர். அந்த அன்பின் காரண மாகத்தான் விகடனில் 'நான் ஏன் பிறந்தேன்’ தொடரை எழுதும்போது, தன்னுடைய அன்னை மற்றும் என் தாத்தா ஏ.வி.ராமன் இருவருடைய புகைப்படங்களுடன் தொடங்கினார்.

என் ஊர் : லாயிட் சாலை

எம்.ஜி.ஆரை நாங்கள் அன்போடு 'சேச்சா’ (சித்தப்பா) என்றுதான் அழைப்போம். இன்றைய அ.தி.மு.க. அலுவலகம் இருக்கும் இடத்தில் அன்று நடிகர் சங்க அலுவலகம் இருந்துச்சு. பிறகு இங்கே தான் எம்.ஜி.ஆர். சமூகநீதி பத்திரிகையை நடத்தி னார். அப்போது 'அலுவலகத்தின் முன்பக்கத்தை கிரிக்கெட் ஆட பயன்படுத்திக்கொள்ளுங்கள்!’ எனப் பெருந்தன்மையோடு அனுமதித்தார். அப்போது எங்கள் வீட்டில்

என் ஊர் : லாயிட் சாலை

இருந்து மேற்கு நோக்கி சில அடிகள் எடுத்துவைத்தால் கலைவாணர், எம்.ஜி.ஆர்., கலைஞர், இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, 'சந்திரலேகா’ பட புகழ் ரஞ்சன், இயக்குநர் ஏ.பி.நாகராஜன், ஏவி.எம். ஆகியோரின் வீடுகள் வரும். கிழக்குப் பக்கம் நடந்தால் ராஜா ஐயர், வேதாந்தாச்சாரி, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ராஜு என நீதித் துறை பிரபலங்களின் வீடுகள் வரும்.

பம்பரம், கோலி, காத்தாடி என எங்கள் பால்யம் விளையாட்டுகளால் நிறைந்து இருந்தது. கோபால புரம் மைதானத்தில் மாஞ்சா காத்தாடி பறக்கவிட, வீட்டில் உள்ள பல்புகளை கோணியில் மறைத்து எடுத்துப்போவோம். அதற்கு முந்தைய நாளே திருவல்லிக்கேணி டப்பா செட்டிக் கடையில் வஜ்ரம், லைம்லாக், மயில் துத்தம் வாங்கிச் சேர்த்துஅரைத்துத்  தடவி, மாஞ்சா  காத்தாடிவிட்டுவிளையாடியது பசுமையாக நினைவில் உள்ளது. அப்போது 10 பைசாவுக்கு 10 கோலி தருவார்கள். அபீட், டாவா, ஆக்கர்... இதெல்லாம் பம்பரம் விளையாடும்போது புழங்கும் வார்த்தைகள். இன்றைவிட அன்றுதான் கிரிக்கெட் மோகம் உச்சத்தில் இருந்தது. சனி, ஞாயிறுகளில் கோபாலபுரம் மைதானத்தில் ஏகப்பட்ட டீம்கள் ஆடுவார்கள். 8 மணி போட் டிக்குக் காலை 6 மணிக்கே பிட்ச் பிடிக்கப்போய் விடுவோம். எல்லாத் தரப்பினரும் விளையாடும் அந்த மைதானம், சமத்துவத்தின் அடையாளமாக இருந்தது. அதேபோல், வீட்டில் இருந்து கட்டுச் சோறு, குழிப் பணியாரம் கட்டிக்கொண்டு சேப் பாக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் பார்க்கச்சென்ற தும் சிம்சன், சோபர்ஸ் போன்றோரின் ஆட்டங் களை முதல் பந்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக, கட்டுச் சோறை அரக்கப்பரக்கத் தின்றதும் இன்றும் நினைவில் உள்ளது.  

அன்று எங்களுக்குள் எம்.ஜி.ஆர். கோஷ்டி, சிவாஜி கோஷ்டி என இரு பிரிவுகள் இருந்தன. ஆனாலும் இணைந்தே எல்லாப் படங்களையும் பார்ப்போம். இதில் உச்சபட்ச த்ரில், எம்.ஜி.ஆர். அலுவலக மூத்த மேனேஜர் குஞ்சப்பன், சிவாஜி  சாரின் அலுவலகத்துக்கு போன் போட்டு, எங்களுக்கு முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் வாங்கித் தருவதுதான். அப்போது இருந்த ஜாஃபர் ஐஸ் க்ரீம் கடையில் சேமியாவை பாலில் தோய்த்து ஐஸ்க்ரீம் செய்துதரும் ஃபலூடாவின் சுவை இன்னமும் நாக்கில் அப்படியே இருக்கிறது.

இந்தப் பகுதியில் வாழ்ந்த சில்வர் டங்க் ஸ்ரீனி வாச சாஸ்த்ரி, கோகலே, ரானடே போன்ற தலைவர்களுடன் இணைந்து 'சர்வென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ அமைப்பில் பணியாற்றினார். அதில் இருப்பவர்கள் சொத்து எதுவும் வைத்திருக்கக் கூடாது என்பது விதி. அதனால் தன் சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுக்கே எழுதிவைத்துவிட் டார். அவர் பெயரில் வீடு கொடுத்தால் அதை யும் நாட்டுக்கே எழுதிவைத்துவிடுவார் என்ப தால் அவரின் மனைவி பெயரில் வீடு ஒன்றை வாங்கித் தந்தார் அண்ணாமலை ராஜா முத்தையா செட்டியார்.

என் ஊர் : லாயிட் சாலை

அப்போது ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் தான் நூல்கள் எடுத்துப் படிப்போம். கமல், ரஜினி என இதற்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். அந்த நூலகம் இன்னமும் அப்படியே இருப்பது மனதுக்கு இதமான ஒன்று. 35 பைசாவில் 10 பத்தை மாங்காய் வாங்கி சுவைத்துக்கொண்டு, கிராமப்போனில் மென்மையாக அந்தக் காலப் பாடல்களை கேட்டபடி கவலைகள் எதுவும்இல் லாமல் வாழ்ந்த அந்த வாழ்க்கை இன்று எங்கு போனது என்றே தெரியவில்லை. ஆனாலும் லாயிட் சாலை மீதான காதல் அப்படியேதான் இருக்கிறது!''

- பூ.கொ.சரவணன்
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு