Published:Updated:

சடங்கு பற பற...

மீனம்பாக்கம் டூ புளியந்தோப்பு

##~##

'பல் உள்ளவங்க பக்கோடா சாப்பிடலாம்...’ -இது சந்தானத்தின் அப்பாடக்கர் பழமொழி! 'வசதி இருந்தா சடங்குல பறக்கலாம்!’- இதுதான் புளியந்தோப்புப் புதுமொழி. தன் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு, ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து புளியந்தோப்பையே டரியல் ஆக்கி,  எல்லோரையும் பேச வைத்திருக்கிறார் ஒரு பாசக்காரத் தந்தை. அவருடைய பெயர், விஜயகுமார்.

 ''நான் தேவி கான்வென்ட் நர்சரி - பிரைமரி பள்ளிக்கூடத்தோட கரஸ்பாண்டென்ட்டா இருக்கேன். இதே ஸ்கூல்லதான் என்னோட மனைவி அனுஷ்யாவும் பிரின்ஸ்பாலா வேலை பார்க்கிறாங்க. ஒன்பதாம் வகுப்புப் படிக்கிற என்னோட பொண்ணு பிரகீர்த் தனா, பெரிய மனுஷியா ஆன உடனே அவளின் மஞ்சள் நீராட்டு விழாவை ரொம் பப் பிரமாண்டமா கொண்டாடணும்னு முடிவு செஞ்சோம்.

சடங்கு பற பற...

இதுவரைக்கும் யாரும் கொண்டாடாத அளவுக்குக் கலக்கிடணும்னு முடிவு பண்ணினோம். என் மகளும் சின்ன வயசுல இருந்து வானத்துல பறக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பா. ஏன் ஹெலிகாப் டர் கொண்டுவந்து மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தக்கூடாதுனு யோசிச்சோம். நிறைய செலவு ஆகும். நிறையப் பேர் திட்டவும் செய்வாங்க. ஆனாலும் என் செல்ல மகளுக்காக எதை வேணும் னாலும் செய்யலாம்னு தோணுச்சு. அரசாங் கத்துக் கிட்ட பெர்மிஷன் வாங்க கொஞ்சம் சிரமமா இருந்துச்சு.

ஹெலிகாப்டர் வந்து இறங்க இடம் தேடினப்பதான் எங்கள் பகுதியில் உள்ள மாதாக் கோயில் மைதானம் கண்ணுல பட்டுச்சு. ரொம்பக் கஷ்டப்பட்டு ஆலய நிர்வாகத்துக்கிட்ட இருந்து அனுமதி கிடைச்சுது. 'ஹெலிகாப்டருக்கு எங்கேடா போறது?’னு ஒரே யோசனை. விசாரிச்சப்ப, 'இந்திரா ஏர்’னு ஒரு கம்பெனி ஒரு மணி நேரத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்ல ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுறாங்கனு தகவல் கிடைச்சுது. அவங்ககிட்டே போய் ஆர்வமா மேட்டரை சொன்னேன்.

சடங்கு பற பற...

'எல்லாம் சரி சார்... ஆனா புளியந்தோப்பு சேரிப் பகுதி, விபத்து நடந்தா பெரிய அளவுல பாதிப்பு இருக்கும். அதனால முன்னெச்சரிக்கை நடவடிக்கையா ஹெலிகாப்டர் இறங்குற இடத்துல தீயணைப்பு வண்டியும் ஆம்புலன்ஸும் ஸ்பெஷலா ஏற்பாடு செய்ய முடியுமா?’னு கேட்டாங்க. தீயணைப்பு வண்டி, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யறதுக்குள்ள விழி பிதுங்கிருச்சு. புளியந்தோப்புப் பகுதி கிட்டத்தட்ட ஒரு கிராமப்புறம். 'ஹெலிகாப்டரைப் பார்க்கிற ஆர்வத்துல மக்கள் பாய்ஞ்சுட்டாங்கன்னா ஆபத்தாச்சே!’னு ஏரியா பெரியவங்க அட்வைஸ் பண்ணினாங்க. அதனால மைதானத்தைச் சுற்றி மூங்கில் தடுப்பு அடிச்சோம். என் மகளை பியூட்டி பார்லர்ல இருந்து நேரடியா மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குக் கூட்டிட்டுப் போனோம். ஹெலிகாப் டரை கேப்டன் ராஜேஷ் சௌகான்கிறவர் ஓட்டினார். மீனம்பாக்கத்துல இருந்து சாயங்காலம் 5 மணிக்குக் கிளம்பி 5.10-க்கு புளியந்தோப்புக்கு வந்துட்டாரு. மூணு முறை புளியந்தோப்பு ஏரியாவை வட்டமடிச்சுட்டு லேண்ட் பண்ணினாரு. என் மகளோட கண்ல தெரிஞ்ச சந்தோஷத்துக்காக ராக்கெட்லகூட பறக்கவிடலாம் சார்!'' என்று உணர்ச்சிவசப்பட்டார் விஜயகுமார்.

சடங்கு பற பற...

விஜயகுமாரின் மகள் பிரகீர்த்தனா, ''எனக்குனு இவ்ளோ செய்யற எங்க அப்பா ஆசைப்படி நான் ஐ.பி.எஸ். ஆபீஸரா ஆவேன்!'' என்றாள்.

ம்... கலக்குங்க!

சா.வடிவரசு    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு