Published:Updated:

வலையோசை : இப்படிக்கு இளங்கோ

வலையோசை : இப்படிக்கு இளங்கோ

வலையோசை : இப்படிக்கு இளங்கோ

காம்பஸ் ஊசியும் தோஷ நிவர்த்தியும்!

வலையோசை : இப்படிக்கு இளங்கோ

'குழந்தையைக் கிழக்கு முகமாக உட்காரவைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, பூஜைக்குவைத்த பொருட்கள் அனைத்தையும் கிணற்றில் போட வேண்டும். 'ஓம் ஐயும் கிலியும் சவ்வும், சகல தோஷம் நிவர்த்தி...’ - இது சகல தோஷ நிவர்த்தி என்ற புத்தகத்தில் காணப்படும் வரிகள். எங்கள் கிராமத்தில் இதை ஏட்டுப் புத்தகம் என்பார்கள். அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாயாக இருந்தது. 20 பக்கம் இருக்கும். குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து 12 வருடங்களுக்கு, அந்த வருடங்களுக்குரிய தேவதைகளுடன், சக்கரங்களும் மூல மந்திரங்களும் இருக்கும்.

எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் அந்தப் புத்தகத்தைத் தலையணைக்கு அடியில் வைத்துவிடுவார்கள். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் கட்டிவிடுவார்கள். இந்த

வலையோசை : இப்படிக்கு இளங்கோ

மந்திரங்களை ஒரு பனை ஓலையில் எழுதி, நூல் போட்டு இறுக்கிக் கட்டி, மஞ்சள் பூசி கையிலும் கட்டுவார்கள். ஒவ்வோர் ஊரிலும் இரண்டு, மூன்று பேர் இந்த ஏடுகளை எழுதிக்கொடுப்பார்கள். அதற்காகக் காணிக்கையும் வாங்கிக்கொள்வார்கள்.

எங்கப்பாவும் எழுதிக்கொடுப்பார் ஆனால், காசு வாங்க மாட்டார். எனக்கு நன்றாக எழுத வந்தபோது, நான் வீட்டில் இருந்தால் என்னை எழுதச் சொல்வார். அப்பா கோணி ஊசியில் எழுதுவார். எனக்கு அதில் எழுதினால் ஏனோ எழுத்தே வராது. முனை மழுங்கிப்போய், அதைப் பார்த்தாலே எரிச்சல் எரிச்சலாக வரும். அதனால் அப்பா, 'உன்னோட காம்பஸ் ஊசியை வெச்சு எழுது’ என்பார். கணக்குப் பரீட்சையில் மார்க் வாங்க இந்த காம்பஸ் பயன்பட்டதோ இல்லையோ, ஏடு எழுதுவதற்காகக் கோணி ஊசியைவிட நன்றாகவே பயன்பட்டது காம்பஸ் ஊசி!  

ஓர் இளம் விஞ்ஞானி!

வலையோசை : இப்படிக்கு இளங்கோ

கோவை அருகில் அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் கிராமத்தில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். நாங்கள் பாலாஜியின் வீட்டுக்குப் போனதும், கருவி ஒன்றைக் காட்டினான். அதுதான் அவனுடைய கண்டுபிடிப்பு. அந்தக் கருவிப்பற்றி பாலாஜியே விளக்கக் கேட்போம்...

''இதுக்குப் பெயர் கார்பனேட்டர். தமிழ்ல புகை நீக்கி. இதைப் பயன்படுத்தி காற்றில் கலந்து இருக்கிற மாசுவைக் குறைக்கலாங்ணா. புவி வெப்பமயமாதலை இது மூலமாக் குறைக்க முடியும். கார்பனேட்டரோட செயல்பாடு என்னான்னா... கார்பன் டை ஆக்ஸைடை, சோடியம் ஹைடிராக்ஸைடின் உதவியுடன் சோடியம் பை கார்பனேட்டாக மாற்றுவதுதாங்ணா'' என்று பாடம் எடுத்தவன், அறிவியல்ரீதியாகச் செய்முறை விளக்கமும் கொடுத்தான். ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இவனுடைய கண்டுபிடிப்புக்கு 'பெஸ்ட் மாடல்’ விருது கிடைத்து இருக்கிறது.

பாலாஜியின் கண்டுபிடிப்புக்கும் சாதனைக்கும் அவனுடைய தம்பி ஹரிஹரனும் பல உதவிகளைச் செய்கிறானாம். ''அண்ணனும் தம்பியும் சேர்ந்துகிட்டு என்னென்னவோ பேசிக்கிறானுங்க, கண்டுபிடிக்கிறானுங்க. படிப்பறிவு இல்லாததால எங்களுக்கு எதுவும் புரியறதில்லிங். இப்போ கூட ஏதோ சோலார் கார் பண்ணோணும்னு இன்டர்நெட் கடைக்குப் போய் பிரின்ட்டு போட்டுக்கிட்டு வந்திருக்காங்க. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இவங்களோட அறிவுக்கு ஏத்த மாதிரி செலவு பண்ண வசதி இல்லைங்கிறதுதான் வருத்தமாயிருக்குங்'' என்று கண்கலங்கினார்கள் பாலாஜியின் பெற்றோர்.

எந்த வசதி வாய்ப்பும் இல்லாமல், அரசுப் பள்ளியில் படிக்கும் இந்தச் சகோதரர்கள் அறிவியலை தன் வசப்படுத்தி இருப்பதையும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதையும் பார்த்து எனக்குத் தாங்கமுடியாத ஆச்சர்யம்தான் பொங்கியது!

நாலணா!

வலையோசை : இப்படிக்கு இளங்கோ

கவிஞரும், வலைப்பதிவருமான மகுடேசுவரன் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் 'விலையின் தாழ்நிலை அலகுகள்’ என்ற பதிவில், 25 பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதி இருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு...

''காலணாவுக்குத் தேறாதவன் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது உண்மையில் 25 பைசா தேறாமலே போய்விட்டது. ஒரு காலத்தில் வெற்றிலை, வாழை இலை போன்ற சில பொருட்கள் காலணாவுக்கு விற்கப்பட்டன. இப்போது ஒரு இலையின் விலை 1.50 ரூபாய். இந்தப் பொருளாதார உண்மை புரியாமல் செல்லாத காலணாவை எடுத்துக்கொண்டு போய் வெற்றிலை, பாக்கு கேட்டு பெட்டிக்கடைக்காரரிடம் திட்டு வாங்கும் பாட்டிகள் ஏராளம்.

இன்று காலணா புழக்கத்தில் இல்லாவிட்டாலும் அன்று அந்தக் காசுக்கு வாங்கிய பால் ஐஸ், சேமியா ஐஸின் சுவை இன்றும் நாவின் அடியில் இனிக்கிறது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு