புதுவை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சின்ன முதலியார் சாவடிக்குச் சென்றால், டைம் மிஷினில் ஏறி 50 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது போன்ற உணர்வு! காரணம் நம் தாத்தா, பாட்டி காலத்து வீடுகளின் ஜன்னல்களும் கதவுகளும் அப்படி குவிந்துகிடக்கின்றன.

பழமையிலும் பணம்!
##~##

பழைய மரக் கதவு, ஜன்னல், கட்டில் போன்றவற்றை அதன் பழைய வடிவமைப்பு மாறாமல் இங்கு பாலீஷ் செய்து விற்கிறார்கள். இந்தச் சாலையில் மட்டும் இதைப்போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட 'ஆன்டிக்’ கடைகள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பழைய இரும்புக் கடைகள்தான் இருந்தனவாம். அருகில் ஆரோவில் சர்வதேச நகரம் உருவாகும் போது அங்கு வந்த வெளிநாட்டுக்காரர்கள் இந்த இரும்புக் கடைகளுக்கு வந்து பழைய பொருட்களை அள்ளிச் சென்றார்களாம். அப்போதுதான் பழமைக்கு இருக்கும் மவுசு சின்னமுதலியார் சாவடி வியாபாரிகளுக்குப் புரிய ஆரம்பித்து இருக்கிறது. பிறகு என்ன, அடுத்தடுத்து 'ஆன்டிக்’ கடைகள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.

மதுரை, காரைக்குடி போன்ற ஊர்களில் நூறு ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க வீடுகள் நிறைய இருக்கின்றன. இடம்பெயர்தல் காரணமாகப் பலர், பழைய வீடுகளை விற்றுவிட்டு அல்லது இடித்துவிட்டு நகரங்களுக்கு வருகின்றனர்.

வீடுகள் இடிக்கப்படும் முன்பு அவர்களிடம் மொத்த வியாபாரம் செய்து, வீட்டில் உள்ள மரப் பொருட்களை ஒன்றுவிடாமல் எடுத்து வந்துவிடுகிறார்கள். சில கடைகளில் குதிரை வண்டிகள்கூட இருக்கின்றன. வாங்கிவரும் மரப் பொருட்களை அதன் பழைய வடிவம் மாறாமல் புதுமைப்படுத்துகின்றனர். கதவு என்றால் அதன் டிசைன் மாறாமல் பெயின்ட் மட்டும் அடிக்கின்றனர். சில பொருட்களைப் புதுமைப்படுத்த முடியவில்லை என்றால் அந்த மரங்களைவைத்து சிற்பங்களும் கைவினைப் பொருட்களும் செய்து விற்று விடுகிறார்கள்.

பழமையிலும் பணம்!

பழமையைவைத்துப் பணம் பண்ணுவதில் புதுச்சேரிக்காரர்கள் கெட்டிக்காரர்கள்தான்!

ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு