Published:Updated:

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

எல்லாமே தமாஷ்தான்!

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

கூகுள் நிறுவனத்தின் தமிழ்ச் செய்திகள் திரட்டிப் பகுதியை 20-04-2012 பகல் 12.30 மணியளவில் பார்த்தபோது, 'கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளதைப் 'பொழுதுபோக்கு’ என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளது!

தமிழன் என்று சொல்லடா!

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் இன்று காலை சென்றிருந்தபோது, தமிழருவி மணியன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதைப் பாராட்டிப் பேருந்துகளில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டு இருந்தனர் சில இளைஞர்கள். அவர்களைப் பார்த்தால் அதிகம் படித்தவர்கள்போல் தெரியவில்லை. ஆனால், உணர்ச்சிப் பிழம்பாக, தமிழீழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.

''நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்?'' என்று கேட்டபோது, 'இல்லை அண்ணா! நாங்கள் எந்தக் கட்சியையும் சேராதவர்கள். எங்கள் சுவரொட்டிக்குக் கீழே பாருங்கள் அது தெரியும்'' என்றார் ஓர் இளைஞர். 'நெல்லித்தோப்பு உருளையன் பேட்டை இளைஞர்கள் - புதுவை’ என்று அந்தச் சுவரொட்டியில் இருந்தது.

##~##

முதுமை என்பது தடை இல்லை!

புது டெல்லியில் புதுச்சேரி விருந்தினர் இல்லத்தில் இருந்து காலை 8 மணி அளவில் தானியங்கி (ஆட்டோ) வருகைக்காக, நானும் எங்கள் அலுவலக நண்பர் வெங்கடேசும் சாலையோரம் நின்று இருந்தோம். அப்போது ஒரு முதியவர் தானியங்கியுடன் எங்கள் முன் வந்தார்.

'புது டெல்லி இந்தியா கேட்'

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

நாங்கள் செல்லும் இடத்துக்கு எவ்வளவு ரூபாய் என்று கேட்டபோது, ''மீட்டர் போட்டுக்கொள்ளலாம்'' என்று கூறி, பயணத்தைத் தொடர்ந்தார். அவரைப் பார்த்தபோது கசங்கிய, கிழிந்த உடை அணிந்திருந்ததைப் பார்த்தோம். விசாரித்தபோது அவர் பெயர் பிரித்தம் சிங் என்பதும் அவருக்கு வயது 71 என்பதையும் தெரிவித்தார். அவர் இருக்கைக்கு அருகில் ஒரு கைத்தடியும் இருந்தது. இந்தக் கைத்தடியோடு தான் அவர் எங்கும் பயணிக்கிறார்.

இந்திய விடுதலைக்கு முன் பாகிஸ்தானில் பிறந்து, இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின்போதே புது டெல்லியில் குடியமர்ந்தவர் எனத் தெரிவித்தார். தலையில் உள்ள தலைப் பாகையைப் பார்க்கும்போதும் பேசியதில் இருந்தும் அவர் சீக்கியர் என அறிந்துகொண்டோம்.

''இந்த முதிய வயதிலும் இந்த வேலை செய்கிறீர்களே?'' என்று கேட்டபோது, 'உழைத்தால்தான் வாழ முடியும். சாகிறவரை உழைப்பேன்' என சாதாரணமாகக் குறிப்பிட்டார். அவர் குடும் பத்தில் அவர் மகன்கள் இருந்தபோதும் இவர் தன் மனைவியுடன் தனியாக வசித்துவருகிறார். அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவர்மீது அக்கறை செலுத்தவில்லை என்பதை அவரிடம் நடத்திய உரையாடலில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். டெல்லி அரசு, முதியோர்களுக்கு வழங்கும் ஓய்வு ஊதியம்,

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

1,000 போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வதாக அவர் குறிப்பிட்டார். பயணத்துக்கு மீட்டர் போட்டு மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறார். வழக்கமாக  

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

70, 80 கொடுத்து பயணம் செய்த எங்களுக்கு, அவர் வண்டியில் வந்தபோது

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

42 மட்டுமே வந்தது. நண்பர் வெங்கடேசு அவரின் கதையைக் கேட்டு 50 ரூபாய் கொடுத்து ''சில்லறை வேண்டாம்'' எனத் தெரிவித்தார், நானும்

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

50 கூடுதலாகக் கொடுத்தேன். சிறிய தயக்கத்தோடுதான் கூடுதல் பணத்தை வாங்கிக்கொண்டார்.

இவரின் முதுமை, உழைத்து வாழ வயது ஒரு தடையல்ல என்பதை எங்களுக்கு உணர்த்தினாலும் 'இளைய சமூகம் முதியவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்’ என உறுதி எடுத்துக்கொண்டோம்.

இப்படியும் கேட்கலாமே!

வலையோசை: புதுச்சேரி இரா.சுகுமாரன்

ஈழத் தமிழர்களைக் காக்கவே தான் உயிர்விடுவதாக, சென்னையில் தீக்குளித்த இளைஞர் முத்துக்குமரன் உருக்கமான வாக்குமூலம் வழங்கி உள்ளார். எந்த ஒரு நபரையும் தற்கொலைக்கு யாரொருவர் தூண்டினாலும் அது குற்றமே. இந்திய தண்டனைச் சட்டத்தின் 306 ஆவது பிரிவின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டுகிற குற்றம் புரிபவர் 10 வருட தண்டனை மற்றும் அபராதத்துக்கு ஆளாவார். மத்திய அரசுதான் இவரின் தற்கொலைக்குக் காரணமாகும். ஏனெனில் இந்திய அரசுதான் இலங்கையில் போர் நடத்திவருகிறது. எனவே முத்துக்குமாரின் தற்கொலைக்குத் தூண்டியதாக மத்திய அரசின் மீது வழக்கு தொடர முடியுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு