##~##

'ஒட்டன்சத்திரம் கல்ச்சுரல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் டீம்’ என்றால் தமிழ்நாடு முழுக்க உள்ள கபடிப் பிரியர்கள் மத்தியில் ஏகப் பிரபலம். விளையாடும் இடமெல்லாம் வெற்றி என்பதே திண்டுக்கல் பெண்கள் கபடி அணியின் இதுவரையிலான வரலாறு. சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற இளையோருக்கான பெண்கள் பிரிவுப் போட்டியில், கோவையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது இந்த அணி.  

 இந்த அணியில் விளையாடும் அனைவரும் பல்கலைக்கழகத்துக்காக விளையாடுபவர்கள். இதில் ஏழு பேர் மாநில அணியில் பங்கேற்றவர்கள். 10 முறைக்கு மேல் அகில இந்திய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி இருக்கிறார்கள். இந்த அணியின் பயிற்சியாளர் ராஜா, 'வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் வரும் கபடி அணிக்குப் பயிற்சி அளித்தவர்.

சடுகுடு... சக்சஸ்!

தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட 'சமத்துவப் பொங்கல் கபடிப் போட்டி-2011’-ல் ஜூனியர், சீனியர் இரண்டிலும் ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகலட்சுமி, இந்த அணியின் நட்சத்திர வீராங்கனை. இறுதிப் போட்டியில் ஈரோட்டை வீழ்த்தி, தமிழக அரசின்

சடுகுடு... சக்சஸ்!

1,20,000 பணப் பரிசையும் வென்றிருக்கிறார்கள் நாமக்கல்லில் நடைபெற்ற மற்றொரு இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி

சடுகுடு... சக்சஸ்!

30,000 வென்று இருக்கிறார்கள்.

''நாங்க ரெண்டரை வருஷமா கபடி ஆடிக்கிட்டு இருக்கோம். முதல்ல நிறையப் போட்டிகளுக்குப் போய் கலந்துகிட்டோம். ஆரம்பத்துல ஒரு மேட்ச்லகூட ஜெயிக்கலை. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

சடுகுடு... சக்சஸ்!

இருந்தாலும் விடாம நிறைய அணிகளோட மோதினோம். ஒவ்வொரு போட்டியிலேயும் ஒரு புது விஷயம் கத்துப்போம். அதேபோல, ஒரு புது ஸ்டலை முயற்சி செஞ்சு பார்ப்போம். இதனால எது சரி, எது தப்புனு புரிஞ்சுக்க, திருத்திக்க நிறைய அனுபவம் கிடைச்சுது. வெயிலோ, மழையோ தினமும் நாலு மணி நேரம் பயிற்சி எடுத்தோம். வித்தியாசமான முயற்சி, தொடர் பயிற்சி ரெண்டும் கை கொடுத்துச்சு. முதல்முறையா மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றோம். அப்பவே ஜெயிக்கிற நுணுக்கங்கள் தெரிஞ்சுப் போச்சு!'' என்று சொல்லும் மேனகா, மாநில அளவில் விளையாடியவர்.

''எனக்கு கபடினா என்னன்னே தெரியாது. இன்னைக்கு நான் பிளேயராக இருக்கேன்னா, அதுக்கு முழு முதற்காரணமும் என்னோட ஸ்கூல் கோச் சந்திரசேகர் சார்தான். என்னோட அப்பா அம்மா ரெண்டு பேருமே நான் கபடி விளையாடச் சம்மதிக்கலை. என்னோட திறமையைப் பார்த்து கல்ச்சுரல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்ல இருந்து வந்தவங்க, 'நாங்க உங்க பொண்ணைப் படிக்கவைக்கிறோம். விளையாட்டுப் போட்டியில் கலந்துக்க ஆகுற செலவை நாங்களே ஏத்துகிறோம்’னு சொல்லி என்னோட அம்மா, அப்பாவைச் சமாதானப்படுத்தினாங்க'' என்கிறார் யோகலட்சுமி.

சடுகுடு... சக்சஸ்!

''இப்ப வரைக்கும் எங்க கபடி டீம்ல இருக்கிற 12 பேருக்கும் ஹாஸ்டல், காலேஜ் ஃபீஸ், மெடிக்கல் அலவன்ஸ் எல்லாத்தையும் ரகுநாதன் சார்தான் பார்த்துக்கிறார். அவருக்கு இந்த நேரத்துல எங்க கபடி டீம் சார்பா நன்றி சொல்லிக்கிறோம்'' என்றார் சுகி சுருக்கமாக.

'உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?’ என்றால், 'இந்திய கபடி அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படணும். ஆசியப் போட்டியோ, ஒலிம்பிக்கோ இப்போ மாதிரி ஜெயிச்சு இந்தியாவுக்குக் கோப்பை வாங்கிக்கொடுத்துக்கிட்டே இருக்கணும்!'' என்கிறார் கேப்டன் உமாபதி!

'கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!’  

- கு.பிரகாஷ்
படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு