Published:Updated:

குடல் திருவிழா !

சண்.சரவணக்குமார் படங்கள்: வீ.சக்தி அருணகிரி

குடல் திருவிழா !

சண்.சரவணக்குமார் படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
##~##

''இவனுங்கதான்பா வித்தியாச வித்தியாசமான வேலைகளை எல்லாம் செய்வானுங்க...'' என்று வெளிநாட்டுச் செய்திகளை டி.வி-யில் பார்த்து நம்மூர் ஆட்கள் கமென்ட் அடிப்பது உண்டு. நம் ஊரிலேயே அப்படி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி இருப்பது தெரியுமா? தேனிக்கு அருகே உள்ள கண்டமனூரில் நடந்து முடிந்துள்ளது 'சந்தன மாரியம்மன்’ திருவிழா. இந்தத் திருவிழாவின் இரண்டாவது நாளன்று, சாமிக்கு நேர்ந்துகொண்டு வெட்டப்படும் ஆடுகளின் குடல்களை அப்படியே வாங்கிக்கொண்டுச் செல்கிறார்கள். அதன் உட்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியே எடுத்துப்போட்டுச் சுத்தம் செய்து, இரைப்பையைத் தொப்பி மாதிரி தலையில் மாட்டிக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல 'பச்சையான’ குடல்களைத் தின்பதுடன், வாட்ச் மாதிரி கையிலும் கட்டிக்கொள்கிறார்கள்.

உள்ளூர் கேபிள் டி.வி. ஆப்பரேட்டரான கிருஷ்ணமூர்த்தியிடம் இது பற்றிப் பேசினேன்.  ''எல்லா சமுதாய மக்களும் கொண்டாடும் திருவிழா இது. 20 வருஷத்துக்கு முன்னாடி கோடை விடுமுறையில விளையாட்டுக்கு ஊர்வலமா எடுத்துட்டு வந்த சாமி இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடல் திருவிழா !

வருஷா வருஷம் சாமியோட செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க சாமிக்கும் கோயிலுக்கும்  ரொம்ப மவுசு வந்திடுச்சு. வருஷா வருஷம் திருவிழாவும் நடக்க ஆரம்பிச்சிருச்சு.

இதில் எந்தச் சாதி, எந்தப் பெரிய மனுசனுக்கும் இடம் கிடையாது. திருவிழா கொண்டாடுற எல்லாருமே இளைஞர்கள்தான். ஏன்னா, இந்தச் சாமியை உருவாக்கினதே சின்னப்பசங்களா இருந்த நாங்கதான். அப்போலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இளைஞர்கள்தான் பொறுப்பாத் திருவிழாவை நடத்திட்டு வர்றோம். இதுக்குக் 'குடல் திருவிழா’னு பேரு. இந்த வேஷத்துக்குப் பேர் 'குடல் வேஷம்’. முன்னெல்லாம் இங்கே நிறையப் பேருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோவு அடிக்கடி வரும். அவங்கள்லாம் இந்தச் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டாங்க. நோயோட தாக்கம் குறைஞ்சிருச்சு. அதுக்கு நேர்த்திக்கடனா, 'குடல் மாலை போட்டுட்டு வர்றோம்’னு வேண்டிகிட்டாங்க. அதைத்தான் வருஷா வருஷம் தொடர்ந்துகிட்டு இருக்கோம்.

குடல் திருவிழா !

எல்லோரும் அவ்வளவு ஈஸியாக் குடல் வேஷம் போட முடியாது. ஒரு வாரம் விரதம் இருக்கணும். மூணு நாள் திருவிழாவுல, ரெண்டு நாள்தான் விசேஷம். அம்மனை வைகை ஆத்துக்கு எடுத்துட்டுப் போய், கரகம் அமைச்சு ஊர்வலமா எடுத்துட்டு வருவோம். அப்போ ஆட்டம், பாட்டம்னு அமர்க்களமா இருக்கும். மூணாவது நாள் விடிகாலை 4 மணிக்கு மாவிளக்கும், 6 மணிக்கு அக்னிச் சட்டியும், 10

குடல் திருவிழா !

மணிக்குப் பால்குடமும் எடுப்போம். மதியம் 12 மணிக்குப் பொங்கலும் வைப்போம். அதுக்குப் பிறகுதான் குடல் வேஷம் ரெடியாகும்.

குடல் வேஷம் போட்டு வரும் இளைஞர்களோடு சின்னப் பசங்க கலர் கலரா உடம்புக்கு பெயின்ட் அடிச்சுக்குவாங்க. இன்னும் சில பேரு கரடி, குரங்கு, புலி, மான், குறவன்-குறத்தி வேஷம் போட்டுட்டு ஆடிக்கிட்டே வருவாங்க!'' என்றார். ''எங்க மாமன்கள், எங்கள் வேஷத்தைப் பொறுத்து சட்டையில் ரூபா நோட்டை குத்திவிடு

வாங்க. அதான் யோசிச்சு யோசிச்சுப் புதுசு புதுசா வேஷம் போட்டுட்டு இருக்கோம்!'' என்றார்கள் வேஷம் கட்டிய சிறுவர்கள்.

குமார், இளையராஜா என்று குடல் வேஷம் போட்ட இரண்டு இளைஞர்கள் நோட்டு குத்தாத மாமன், மச்சான்களைச் சந்து பொந்துவிடாமல் துரத்திச் சென்று சாணி அபிஷேகம் செய்தார்கள். அபிஷேகத்துக்குப் பயந்து பல பேர் நூறு ரூபாய்த் தாளை தூக்கிக் காட்டியபடியே வந்து, சாணி அபிஷேகத்தில் இருந்து தப்பித்தார்கள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism