Published:Updated:

ஊரெல்லாம் காட்டுராஜா !

குள.சண்முகசுந்தரம் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஊரெல்லாம் காட்டுராஜா !

குள.சண்முகசுந்தரம் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:

அரசப்பட்டி மதுரை முத்து

##~##

மதுரை அந்தக் காலத்தில் அரசியலுக்குத் தந்தது மேயர் மதுரை முத்து. இன்று, நகைச்சுவைக்குத் தந்திருப்பதும் இன்னொரு மதுரை முத்து. 'கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியில் தொடங்கி, 'அசத்தப்போவது யாரு?’ நிகழ்ச்சியைக் கடந்து, தற்போது 'சன்டே கலாட்டா’-வில் ரகளை செய்து கொண்டு இருக்கும் மதுரை முத்து, தன்னு டையச் சொந்த ஊரான திருமங்கலம் அருகில் உள்ள அரசப்பட்டியின் அருமை பெருமை களை இங்கே அழகாக விவரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அந்தக் காலத்துல வெள்ளைக்காரய்ங்களுக்கு டிமிக்கிக் குடுத்துட்டு வந்த பாண்டிய ராஜாக்களுக்கு எங்க ஊருலதான் அடைக்கலம் கொடுத்தாய்ங்க ளாம். அதான் எங்க ஊருக்கு அரசப்பட்டினு பேரு வந்துச்சாம். என்னடா ஊரு ரொம்பக் காய்ஞ்சு கெடக்கேனுப் பாக்காதீங்க. எங்காளுங்க அந்தக் காலத்துல கொழுத்த சம்சாரிகளா இருந்திருக்காங்க. எனக்கு வெவரம் தெரிஞ்சு, எங்களுக்கே ஒரு தட வைக்கு முந்நூறு மூட்டை கடலை வெளைஞ்சி ருக்கு. இப்ப இருக்கிற எங்க வீட்டைச் சுத்திப் புஞ்சையும் நஞ்சையுமாத்தான் இருக்கும்.

ஊரெல்லாம் காட்டுராஜா !

அரசப்பட்டியில ஆம்பளைங்கள விடப் பொம்பளைங்க கடுமையான உழைப்பாளிங்க. இப்ப நான் கட்டியிருக்கேனே ஒரு புள்ள... அது, ஒரு குடம் தண்ணியத் தூக்குறதுக்கே, 'மாமா ஒரு கை பிடிங்க’னு அலையன்ஸுக்கு ஆள் கூப்பிடுது. ஆனா, எங்க ஊருப் புள்ளைங்க ஒரே நேரத்துல நாலு குடத்துலத் தண்ணி சுமந்துட்டு வரும்ங்க. நிறை மாசத்துலயும் எங்க ஊருத் தாய்க்குலங்கள் காட்டு வேலைக்குப் போவும்ங்க. கம்பங்கூழ் ரொப்புன கலையத்தோட சும்மாட்டுல கலையத் தைத் தூக்கிவெச்சுக்கிட்டு அந்தப் பொண்ணுங்க காட்டு வேலைக்குப் போற அழகே அழகுமாம்ஸு. சில நேரங்கள்ல காட்டுக்குள்ளயே பிரசவம் நடந் துடும். அந்தக் குழந்தைகளுக்குச் சடார்னு காட்டு ராஜானு பேரு வெச்சிருவாங்க. எங்க ஊருக்குள்ள இப்படி நிறையக் காட்டு ராஜாக்கள் இருக்காய்ங்க.

ஊரெல்லாம் காட்டுராஜா !

இப்ப மாதிரி அப்பெல்லாம் பொண்ணுங்களை டாவடிக்க முடியாது. அதுங்க அடிபம்புல தண்ணி அடிச்சுக்கிட்டு இருக்கிற இடத்துல போயி, சைக் கிள் செயினைக் கழற்றிவிட்டுத் திரும்ப மாட்டுற மாதிரி பாவ்லாப் பண்ணிக்கிட்டே, 'நாளைக்குத் திருவிழாவுல நீ எந்தப் பக்கம் நிப்பே, நான்   பச்சை கலர் சட்டைப் போட்டுட்டு வருவேன். நீயும் பச்சை கலர்ல தாவணி போட்டுட்டு வா!’னு சைஸா நியூஸைப் போட்டுட்டு வந்துருவோம். எங்க ஊரு மாரியம்மன் கோயிலுக்கு வைகாசி மாசம் திருவிழா நடக்கும். பொட்டல் வெளியில பெரிய திரையைக் கட்டி எம்.ஜி.ஆர். படம் போடுவாங்க. திரையில எம்.ஜி.ஆர். வந்ததும் தூவுறத்துக்காகவே ஸ்கூல் நோட்டுத் தாள்களைக் கிழிச்சு ரெடியா வெச்சிருப்போம். சரியா எம்.ஜி.ஆர். வர்ற நேரம் பாத்து, அள்ளித் தூவிடுவோம்.ஆனா, டக்குனு நம்பியார் தலை வந்துரும். ஒரே வருத்தமா இருக்கும். சில சமயத்துல சினிமாவுக் குப் பதிலா நாடகம் போடுவாங்க. நாடக நடிக ருங்க மேக் - அப் போடற தட்டியை விலக்கிக்கிட்டு பாத்துக்கிட்டு இருப்போம். ஊரு பிரசிடென்டு, 'ஓடுங்கடா... ஓடுங்கடா’னு எங்களை வெரட்டிட்டு, எங்க டூட்டிய அவரு பாப்பாரு.  

ஊரெல்லாம் காட்டுராஜா !

ப்ளஸ் ஒன் படிச்சது திருமங்கலத்துல. ஒரு கூட்டமா டவுன் பஸ்ல ஏறிப் போவோம். ஒரு பக்கிக்கும் டிக்கெட் எடுக்கணுமேங்கிற நெனப்பே வராது. பஸ்ஸுக்குள்ள இடம் இருந்தாலும் டாப்பத்தான் மொதல்ல ஃபுல் பண்ணுவாய்ங்க. அப்பத்தானே கண்டக்டர் வர மாட்டாரு.

இன்னிக்கு நான் மதுரை முத்துவா பிரபல மானதுக்கு,  எங்க ஊரு முகப்புல இருக்கிற அரச மரத்துப் பிள்ளையாரு மேடைதான் முக்கியக் காரணம். அங்ஙனதான் என்னோட அரட்டைக் கச்சேரி நடக்கும். என்னோட துணுக்குகளைக் கேக்குறதுக்காகவே ஒரு கூட்டம் எப்பவும் அரச மரத்தடியில காத்திருக்கும்.

2001-ம் வருஷம் எங்க ஊரு அம்மன் கோயில் மேடையிலதான் முதன்முதலா என்னோட நகைச்சுவையை ரசித்த அரசப்பட்டி மக்கள், 'என்னடா இவன் கொரளி வித்தைக்காரனாட்டம் பேசுறான்’னு சொன்னாங்க. அதைத்தானே மாம்ஸு இப்ப உலகமே ரசிச்சுச் சிரிக்குது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism