Published:Updated:

மது ஒழிக்கும் சபை !

ஆ.கோமதிநாயகம் படங்கள்: எல்.ராஜேந்திரன்

மது ஒழிக்கும் சபை !

ஆ.கோமதிநாயகம் படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

இந்தியாவிலேயே முதன்முறையா கப் 'பரிசுத்த அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை’ என்ற ஓர் அமைப்பு, திருநெல்வேலி  மாவட்டம் உவரியில் ஆரம்பிக்கப்பட்டு நூறாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது என்றால் ஆச்சர் யமாக இருக்கிறதா?                            

''1912 ஆகஸ்ட் 15-ம் தேதி, பங்குத் தந்தை அந்தோணி சூசைநாதர் அவர்களால் 15 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மதுவிலக்கு சபை, இன்று 300 உறுப்பினர்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தச் சபைல உறுப்பினராச் சேர்றதுக்கு மூணு தகுதி  இருக்கணும். மது, சூது, விலைமாது  இந்த மூணையும் தொடாதவரா இருக்கணும். மூணு மாசத்துக்கு ஒரு தடவை உறுப்பினர்கள் எல்லாரும் பங்குத்தந்தை முன்னிலையில் 'சபையில் சேர்ந்தநாளில் இருந்து இதுநாள் வரை நான் மது குடிக்கலை. சூது விளை யாடலை. விலைமாதுவைத் தொடலை. இது மாதா மேல சத்தியம்’னு சத்தியம் பண்ணு வோம்.  வருஷத்துக்கு நாலு தடவை இது மாதிரி சத்தியம் பண்ணணும். இரண்டு முறைக்கு மேலே சத்தியம் பண்ணாம இருந்தா, சபையில் இருந்து நீக்கிடுவாங்க.

மது ஒழிக்கும் சபை !

அதுக்குப் பின்னாடி சபையில் சேரவே முடியாது. சபையில் உறுப்பினரா இருக்கிறவங்க மது குடிச்சாலோ, சூதாடினாலோ,விலை மகளிடம் போனாலோ சபையை விட்டு நீக்கிருவோம். இந்தச் சபையில மொத்தம் 50 இளைஞர்கள் இருக்காங்க. ஊர்ல கோயில் திருவிழா நடக்கும்போது லட்சம் பேர் கூடுவாங்க. அன்னிக்கு நடக்குற அன்னதானத்துல உதவி பண் ணுவோம்; பாதுகாப்புப் பணி செய்வோம். இதை 50 வருஷமாத் தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம். முந்தி ஊருக்குள்ள சாராயம்

மது ஒழிக்கும் சபை !

காய்ச்சி வித்தாங்க.போலீஸ்காரங்களோட சேர்ந்து, அதை ஒழிச்சோம்.

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாததால ஆலயத் திருவிழாக்கள், ஊர் நிகழ்ச்சிகள்ல எங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. மதுவிலக்கு சபை ஆரம்பிச்சு 100 வருஷம் ஆகிருச்சு. அதைக்கொண்டாடப் போறோம். அதுக்காகக் கூட்டப்பனை,கூடுதாழை, முத்தையாபுரம், வடக்கன்குளம் ஆகிய ஊர்கள்லேயும் இந்தச் சபையை விரிவுபடுத்தி இருக்கோம். வருங்காலத்துல இது இன்னும் பல ஊர்கள்லேயும் விரிவடையும்!'' என்கிறார் நம்பிக்கையுடன் சபையின் உறுப்பினர் அந்தோணி.

இன்னொரு உறுப்பினர் ஆல்பன், ''நான் சென்னைல ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படிச்சுட்டு இருக்கேன். இந்தச் சபைல சேர்ந்து நாலு வருஷமாச்சு. இந்தச் சபையில் சேரலைனா எப்பவோ நான் கெட்டுப் போயிருப்பேன். இங்கே பண்ணின சத்தியம் தான் என்னைச் சுத்தபத்தமா வெச்சிருக்கு. என்னைக் குடிக்க வைக்க முயற்சி பண்ணின என் நண்பர்கள் எல்லாரும் என்னைப் பத்திப்புரிஞ்சுகிட்டு இப்போ எந்தத் தவறான விஷயத்திலும் ஈடுபட நிர்பந்தப்படுத்துறது இல்லை!'' என்கிறார் மனநிறைவோடு.

சபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்பு இந்தச் சபையில் உறுப்பினராக இருந்து, பின்பு விலக்கப்பட்டச் சிலரைப் பொது மன்னிப்பின் மூலம் திரும்பச் சேர்த்துஇருக்கிறார்கள். அப்படிச் சேர்க்கப்பட்ட யூலஸ்,   ''1974-ல் சபையில் சேர்ந்தேன். 1981-ல் குடும்பப் பிரச்னை காரணமா சரக்கு அடிச்சுட்டேன். அதனால சபையில இருந்து நீக்கிட்டாங்க. உடனே கோபத்துல தினமும் தண்ணி அடிக்க ஆரம்பிச்சேன். சீட்டு விளையாடினேன். அதனால ஆரோக்கியம், பணம் எல்லாத்தையும் இழந்துட்டேன். திரும்பப் புத்தி வந்து பசங்களை நல்லாப் படிக்கவெச்சேன். எப்போ சபையில் சேர்றதுனு வருஷக்கணக்காகக் காத்துகிட்டு இருந்தேன். திரும்ப வாய்ப்பு கிடைச்சதும் சேர்ந்துட்டேன்'' என்கிறார் மகிழ்ச்சியாக!

மது ஒழிக்கும் சபை !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism