Published:Updated:

ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

Published:Updated:
ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

ணிவேலனார்... 81 வயதை எட்டிய பழுத்த தமிழறிஞர். இலக்கியத் திறனாய்வாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் தன் சொந்த ஊரான அஸ்தகிரியூரைப் பற்றியும் 70 ஆண்டுகளாகத் தான் வசித்துவரும் அரூர்பற்றியும் தனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த அஸ்தகிரியூர்தான் 10 வயது வரை நான் வளர்ந்த ஊர். அந்த ஊர் மலையில் சிலம்பு பாழி என்ற நீர்நிலை ஒன்று இருந்தது. அங்கே அதியமான் போர்க் காலத்தில் மறைந்திருந்ததாகவும் சொல்வார்கள்.

சித்த வைத்தியரான என் தகப்பனார் பெரியண்ணன், அந்த வனப் பகுதியில் மூலிகை பறிக்கப் போகும்போது நானும் உடன் செல்வேன். அந்த மலைப் பகுதியில் 'கச்சகோணம்’ என்று ஓர் இடம் இருந்தது. அங்கே புது.பொ.வெங்கடராமன் என்ற தொல்லியல் அறிஞர் ஆய்வு செய்து 'ரோம்’ நாணயத்தைக் கண்டுபிடித்தார். அது மயிலிறகு, சந்தனம் இரண்டையும் கொடுத்து வாங்கப்பட்ட காசு என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

அந்த ஊரில் இருந்து 1944-ல் அரூருக்கு வந்தோம். 13-ம் நூற்றாண்டில் அதியமான் வழியில் வந்த விடுகாதழகிய பெருமான் என்ற மன்னர், அந்த ஊருக்கு 'விடுகாதழகிய நல்லூர்’ எனப் பெயர் வைத்துள்ளார். 17-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் வழிவந்த துளுவ தண்டல் நாயகன் என்கிற மன்னர் விடுகாதழகிய நல்லூரை அரியூர் என்று பெயர் மாற்றம் செய்தார்.

பிற்காலத்தில் அரியூர் என்பது மருவி அரூர் ஆகிவிட்டது. நாங்கள் இங்கு வந்தபோது அரூரில் இருந்த ஒரே குடியிருப்புப் பகுதி பழையபேட்டை மட்டுமே. மின்சாரம், பஸ் நிலையம் என எதுவும் அப்போது இல்லை. எல்லாமே குடிசை வீடுகள் தான். ஊரின் முக்கிய இடங்களில் ராந்தல் கம்பம் இருக்கும்.

ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

இருட்டும்போது அந்தக் கம்பத்தில் விளக்கேற்றுவார்கள். அரூர் வாணி யாற்றில் எப்போதும் நீர் நிறைந்து ஓடும். அந்த ஆற்றில் மழைக் காலத்தில்கூட இப்போது தண்ணீரைப் பார்க்க முடியவில்லை. இப்போ தைய அரூர் பேருந்து நிலையம்தான் அன்றைய பெரியார் பூங்கா. அதன் உள்ளே காந்தி சிலை ஒன்று இருக்கும். வானொலிப் பெட்டி ஒன்றும் அங்கு இருந்தது. மக்கள் கூட்டமாக நின்று நாட்டு நடப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.  

எம்.ஏ.எஸ். மற்றும் ரத்னா ஆகிய இரு நிறுவனங்களின் பஸ்கள் மட்டும்தான்அப்போது அரூரில் ஓடின. ஊரின் முக்கியமான போக்கு வரத்துச் சாதனம் குதிரை வண்டிதான். மொரப்பூரில் ரயில் வசதி இருந்ததால் ஸ்ரீஉமபுரி, சேலம், சென்னை இங்கெல்லாம் போய் வர ரயிலைப் பயன்படுத்துவோம். மொரப்பூர் - தருமபுரி - ஓசூர் வழியில் அப்போது நீராவி ரயில் ஓடியது. இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தின் இரும்புத் தேவையைப் பூர்த்திசெய்ய மொரப் பூர் - தருமபுரி ரயிலை நிறுத்திவிட்டு தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போனார்கள்.

'திராவிடக் கோட்டை’ என்று சொல்லும் அளவுக்கு அரூரில் முற்போக்கு எண்ணங்கள் பின்னாளில் காலூன்றின. இங்கு உள்ள பஜனை மடங்களை பெரியார் மன்றங்களாக்கிச் சொற்பொழிவுகள் நடத்தி இருக்கிறோம். 'தமிழ் இயக்கம்’ உருவாக்கி, வணிக மையங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழ்ப்படுத்த முயற்சிகள் எடுத் தோம்.

அரூர் - சேலம் செல்லும் வழியில் மஞ்சவாடிக் கணவாய் உள்ளது. அது சங்க காலத்தில் 'நன்றா’ (நன்றா என்னும் குன்றேறி... - பதிற்றுப்பத்து, சங்க இலக்கியம்) என்று அழைக்கப்பட்டது. அங்கு 1997-ம் ஆண்டில் 'முத்தமிழ் மன்றம்’ சார்பில் 'மலைச் சாரல்’ என்ற கவியரங்கத்தை நடத்தி னோம். அரூர் இப்போது வளர்ச்சி அடைந்து விட்டது. எல்லாமே மாறிவரும் சூழலில் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதானே மனித இயல்பு!''

ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்த ராணுவம்!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism