Published:Updated:

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”

Published:Updated:

''மரணம் என்பது சம்பவமாக இருக்கக் கூடாது; சரித்திரமாக இருக்க வேண்டும். அதனால் எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்த சமூகத்துக்காக முழு நேரமும் பயன்படுத்துகிறோம்'' - மெல்லிய குரலில் கனமான விஷயத்தைப் பேசுகிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்ரமணி - ஜானகி தம்பதியர். திருப்பூரில் பத்துக்குப் பத்து அடி எளிமையான வாடகை வீட்டில் வசிக்கும் இந்தத் தம்பதியரின் முழு நேரப் பணியே சமூக சேவைதான். அதைப் பற்றி விவரித்தார் சிவசுப்ரமணி.

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மனிதப் பிறவி என்பது மகத்தானது. எங்களுக்கு இருந்த மூன்று பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்து விட்டோம். எங்கள் கடமைகள் முடிந்துவிட்டன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எந்த வேலையும் இல்லாமல் உட்கார்ந்து இருந்தபோது, 'நாம் எதற்காக வாழ்கிறோம்? எதற்காக வாழ வேண்டும்?’ என்று கேள்வி எழுந்தது. உடனே என் மனைவியை அழைத்து, 'இனி நாம் வாழ்நாள் முழுக்க இந்த சமூகத்துக்காக வாழ வேண்டும். நமக்கு என ஒரு பைசாகூடச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடாது. தினமும் சேவை செய்து வாழ்வதே நம் இலக்கு’ என்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

அன்று முதல் உடல் தானம், உடல் உறுப்புகள் தானம், ரத்த தானம், போலியோ விழிப்பு உணர்வு போன்ற பல்வேறு விழிப்பு உணர்வுப் பணிகளைச் செய்துவருகிறோம். இந்த உலகில் பணம் கொடுத்தால் உடனே எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால், மனிதனின் ரத்தம் மற்றும் உறுப்புகள் பணம் கொடுத்தாலும் உடனே கிடைப்பது இல்லை. இறந்த பிறகு வீணாகப் போகும் இந்த உடல், நாம் தானம் செய்தால் மற்றவருக்குப் பயன்படும். நானும் என் மனைவி யும் இந்திய ராணுவத்துக்கு எங்கள் உடலைத் தானம் செய்து, அதை பத்திரப் பதிவும் செய்து உள்ளோம். அப்போது ராணுவ அதிகாரி ஒருவர், 'நீங்கள்தான் இந்திய ராணுவத்துக்கு முதன் முதளாக உடல் தானம் செய்தவர்கள்’ என்று பெருமையுடன் சொன்னார்.

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”

எங்கள் அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை நாங்கள் உழைத்துச் சம்பாதித்துக் கொள்கிறோம். நான் இங்குள்ள பனியன் கம்பெனியில் மாதம் ஐந்து நாட்கள் வேலை செய்கிறேன். என் மனைவி மாதம் 20 நாட்கள் வேலைக்குச் செல்வார். மீதமுள்ள நாட்களில் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்வோம்.

பிரசாரத்துக்கு ஆகும் செலவுகளுக்காக கௌரவம் பார்க்காமல் கழுத்தில் உண்டியல் மாட்டிப் பிச்சை வாங்குகிறோம். செலவுக்குத் தேவையான காசு சேர்ந்த பின்பு பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு, சேவைப் பணிகளைத் தொடங்கிவிடுவோம்'' என்று சிவசுப்ரமணி முடிக்க... ஜானகி தொடர்கிறார்.

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”

''தமிழகத்தின் எல்லா ஊர்களுக்கும் சென்று உடல் தானம், ரத்த தானம் குறித்துப் பிரசாரம் செய்திருக்கிறோம். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குப் போய் நோட்டீஸ் விநியோகித்துப் பிரசாரம் செய்வோம். பிரசாரம் மட்டும் அல்ல... நாங்களே இதுவரை 21 முறை ரத்த தானம் செய்துள்ளோம்.

கடந்த ஆட்சியில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ரத்த தான முகாம் களை நடத்த வேண்டும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று மாநாட்டில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 470 யூனிட் ரத்தம் தானமாகக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அன்றைய முதல்வர் கருணாநிதி எங்களுக்குப் பாராட்டுக் கடிதமும் அனுப்பினார். எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்கள் சேவை தொடரும்!'' என்றார் உறுதியுடன்!

”பிச்சை எடுத்துச் சேவை செய்வோம்!”

கட்டுரை, படங்கள்: ரா.அண்ணாமலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism