Election bannerElection banner
Published:Updated:

”எந்த விஷயமும் எழுத்தாளனைப் பாதித்தால்தான் வாசகனைப் பாதிக்கும்!”

”எந்த விஷயமும் எழுத்தாளனைப் பாதித்தால்தான் வாசகனைப் பாதிக்கும்!”

'எதை எழுத வேண்டும்?

எப்படி எழுத வேண்டும்?

ஏன் எழுத வேண்டும்?’

படைப்பாளிகள் சும்மா இருப்பதே இல்லை... எப்போதும் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த மாதம் 'நிழல்’ மற்றும் 'பதியம்’ அமைப்புகள் இணைந்து குமாரபாளையத்தில் திரைப்படப் பயிற்சிப் பட்டறையை நடத்தின. சமீபத்தில் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ ஓசூரில்  'மாநில படைப்பு ஊக்க முகாம்’ என்ற பெயரில் முகாம் ஒன்றை நடத்தியது. எழுதுவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்டது இந்த மூன்று நாள் முகாம்.

”எந்த விஷயமும் எழுத்தாளனைப் பாதித்தால்தான் வாசகனைப் பாதிக்கும்!”
##~##

மூன்று நாட்களும் காலை 10 மணிக்கு ஆரம்பித்த முகாம், இரவு 2 மணியைத் தாண்டியும் நீண்டதுதான் ஆச்சர்யம். சுமார் 100 படைப்பாளிகள் கலந்துகொண்ட முகாமில் ஒவ்வொருவரின் படைப்புகளும் அனைவருக் கும் அளிக்கப்பட்டு, ஆரோக்கியமான விமர் சனங்கள், விவாதங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு விவாதங்கள் உச்சபட்ச சூட்டைக் கிளப்பினாலும்கூட எந்த இடத்திலும் சண்டை சச்சரவு எழவில்லை என்பதுதான் நிகழ்ச்சியின் சிறப்பம்சம்!

முதல் நாள் 'எதை எழுத வேண்டும்?’, 'எப்படி எழுத வேண்டும்?’, 'ஏன் எழுத வேண்டும்?’ ஆகிய மூன்று தலைப்புகளில் மூத்த எழுத்தாளர்கள் பேசினார்கள். 'எதை எழுத வேண்டும்?’ என்று பேசிய எழுத்தாளர் பிரளயன், ''எந்த ஒரு எழுத்தாளரையும் இதைத்தான் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஒருவரின் எழுத்து என்பது அவரது கருத்துச் சுதந்திரம் சார்ந்த விஷயம். சமூக அக்கறையுடனும் ஜனநாயகத்துடனும் எழுதும் போது அது எல்லோராலும் மதிக்கப்படும். நம் எழுத்து எப்போது தனிப்பட்ட மனிதன் அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் தனிப்பட்ட விஷயங்களைக் குறிப்பிட்டுப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ அப்போது அந்த எழுத்தின் தரம் குறைந்துவிடுகிறது'' என்றார்.

'எப்படி எழுத வேண்டும்?’ என்பது குறித்துப் பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ''ஒரு படைப்பில் உள்ளடக்கம், அழகியல், படைப்பு மனநிலை இந்த மூன்று அம்சங்களும் முக்கியம். உள்ளடக்கம் என்பது கருப்பொருள். இது வலிமையானதாக, நல்ல விஷயங்களை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதாக இருக்க வேண்டும். அடுத்து நம்முடைய பாத்திரப் படைப்பு, அழகியலாக இருக்க வேண்டும். அப்போதுதான் படிப்பவரின் ரசிப்புத் தன்மை அதிகரிக்கும். மூன்றாவது, படைப்பவரின் மனநிலை. சொல்ல வரும் எந்த ஒரு விஷயமும் அதை எழுதும் எழுத்தாளனைப் பாதித்தால்தான் வாசகனைப் பாதிக்கும்!'' என்றார்.

'ஏன் எழுத வேண்டும்?’ என்பது குறித்துப் பேசிய எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ''மக்கள் பிரதிநிதிக்கு சமூகத்தின் மீதான பொறுப்பு உணர்வு என்பது அவரது கடமையாகும். ஆனால், யாரும் கேட்டுக்கொள்ளா மலேயே சமூகத்தின் மீது அக்கறையும் பொறுப்பு உணர்வும் கொள்வது எழுத்தா ளர்கள்தான். தனி மனித திருப்தி, தன் மனது திருப்தி, பணம், புகழ் இவற்றுக்காக எழுதக் கூடாது. சமூகத்தின் நன்மைக்காக, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் இருக்கும் மக்களுக்காக எழுத வேண்டும்'' என்றார்.

முகாமின் இரண்டாம் நாளில் கவிஞர் சுகிர்தராணி கவிதைகள் எழுதுவது குறித்தும், எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறுகதை எழுதுவது குறித்தும், சு.வெங்க டேசன் நாவல் படைப்பது குறித்தும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண் டனர். மூன்றாம் நாளில் எழுத்தாளர் அழகிய பெரியவன், 'கவிதை, கட்டுரை எழுதும்போது எதைப் பொருட்படுத்தி எழுத வேண்டும்?’ என்றும் 'எழுத்து நடையை சுவாரஸ்யமாக்குவது எப்படி?’ என்றும் பேசினார்.

அன்றைய தினம் லிவிங் ஸ்மைல் வித்யா பேசியதுதான் நிகழ்ச்சியின் ஹை-லைட். ''ஆரம்ப காலத்தில் எங்களை அலி, பேடு என்று கொச்சைப் படுத்தினார்கள். அடுத்ததாக அரவாணி என்று இந்து மதத்தோடு அடையாளப்படுத்தினார்கள். அப்படி என் றால் கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்களில் இருந்து வருபவர்களை அரவாணி என்று அழைக்க முடியுமா? அப்புறம் 'கிராஸ் ஜெண்டர்’ என்றார்கள். அப்படி என்றால் 'மாறிய பாலினமா?’ தொடர்ந்து, 'மூன்றாம் பாலினம்’ என்றார்கள். அப்படி என்றால் முதல் பாலினம் யார்? அல்லது எது? இப்போதுதான் ஒருவழியாக திருநங்கைகள் என்று அழைக்கிறார்கள். இது ஏற்புடையதே!'' என்று சொன்னவர், வலி மிகுந்த திருநங்கைகளின் வாழ்க்கையை விவரித்தார்.

கவனம் ஈர்த்த இலக்கிய நிகழ்வு இது!

கட்டுரை, படங்கள்: கு.சக்திவேல்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு