Election bannerElection banner
Published:Updated:

அழகு+திறமை = ஆன்ட்ரியன்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

அழகு+திறமை = ஆன்ட்ரியன்!
##~##
ழகு, திறமை இரண்டும் இருக்கிறது ஆன்ட்ரியனிடம்.

ஃபிரான்ஸ் பெண்ணான ஆன்ட்ரியன், ஃபேஷன் மாடலாக இருக்கும் அதே நேரத்தில் சிறந்த புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். ஒரு மாலை நேரத்தில் ஆன்ட்ரியன் என்னும் அழகுச் சிற்பத்தைச் சந்திக்கும் வாய்ப்புகிடைத் தது. பிரெஞ்சு நாக்கில் நழுவித் தமிழ் வந்து விழும் போதே... காதில் இன்பத் தேன்!

''பிரான்ஸ்ல அன்னிஸிதான் என்னோட ஊர். அப்பா பிலிப் மிலிட்டரில இருந்தவரு. 94-ல அம்மா வுடன் புதுச்சேரிக்கு வந்துட்டேன். என்னோட படிப்பு மட்டும்தான் ஃபிரான்ஸ்ல. மத்தபடி எல்லாமே புதுச்சேரிதான். இங்க வந்துதான்  மாடல் ஆனேன்.படிப்படியா முன்னேறி விளம்பரப் படங்களில் நடிச்சேன்.

அழகு+திறமை = ஆன்ட்ரியன்!

அப்படியே போட்டோகிராஃபி மேல ஈடுபாடு வந்தது. அதுக்கு எங்கஅப்பா தான் காரணம். என்னோட 14-வது பிறந்த நாளைக்கு ஒரு கேமராவை கிஃப்டா கொடுத்தாரு. சிறந்த வைல்டு லைஃப் போட்டோகிராஃபரா வரணும்கிறது என்னோட ஆசை, அதுமட்டுமில்லை; எனக்கு ஊர் சுத்துறது ரொம்பப் பிடிக்கும். தாய்லாந்து, ஸ்ரீலங்கா, டர்கீ, டுனுஸியா, மால்டீவ்ஸ், மடகாஸ்கர், மொரிஷியஸ்னு நான் சுத்துன நாடுகளோட லிஸ்ட் பெருசு.

எந்த நாட்டுக்குப் போனாலும் கண்டிப்பா என்கூட கேமரா இருக்கும். அந்தந்த நாட்டு மக்களோட பழகி, அவங்க கலா சாரம், உணவு, பாரம்பரிய இதையெல்லாம் தெரிஞ்சிக்குவேன். இன்னும் போக வேண்டிய நாடுகள் நிறைய இருக்கு. எனக்கு டான்ஸ்லேயும் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அம்மா என்னை ரொம்ப கம்பெல் பண்ணி பரதநாட்டியம் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. ஆனா, ரெண்டு வருஷம் மட்டும்தான் என்னால தாக்குப் பிடிக்க முடிஞ்சது. அதுக்கப்புறம் ஓடிவந்துட்டேன்.

அழகு+திறமை = ஆன்ட்ரியன்!

எனக்கு பிராணிகள் வளர்க்கிறது ரொம்ப பிடிக்கும். என் வீட்டுல மட்டும் ஐந்து பூனைகள், 10 நாய்கள், கோழி இருக்கு. ஏதாவது சோகமா இருந்தா இவங்ககூட அஞ்சு நிமிஷம் டைம் செலவு பண்ணாப் போதும், இந்த நண்பர் கள்எல்லாத்தையும் மறக்க செஞ்சிருவாங்க. சாப்பாட்டுல எனக்கு இந்தியன் ஸ்டைல்தான் பிடிக்கும், பட்டர் மசாலா சிக்கன்,  சில்லி சிக் கன்னு ஒண்ணையும் விட்டுவைக்க மாட்டேன். என்னதான் நான் ஃபிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த வளா இருந்தாலும் புதுச்சேரி பொண்ணுனு சொல்லிக்கத்தான் நான் ஆசைப்படறேன்'' என்கிற போது ஆன்ட்ரியனின் கண்கள் கவிதை எழுதியது!

- நா.இள.அறவாழி
புகைப்படங்கள் நன்றி: மது இந்தியா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு