
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூ ராட்சியில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துகொண்டே, ஊர் முழுக்க மரம் நடும் வேலையைச் செய்துவருகிறார். இவருடைய சேவையைப் பாராட்டி,சமீபத்தில் நடந்த உலக வன நாள் விழாவில் 'மாநில அளவில் தனிநபர் மூலம் மரம் வளர்ப்புக்கான சாதனையாளர் விருதை’யும்

50 ஆயிரம் ரூபாய் பரிசையும் அளித்து இருக்கிறது தமிழக அரசு.

''சின்ன வயசிலேயே எனக்குச் செடிகளை வளர்க்கிறதில் ஆர்வம் அதிகம். ஊர் முழுக்க நிழலுக்காக, அதிக செலவுவைக்காத பாதாம், புங்கம் போன்ற மரங்களை நடுகிறேன். கூடவே, விழுப்புரம் மாவட்டத்துல பெண் குழந்தை பிறந்திருக்கிற செய்தி தெரிஞ்சாலே அந்த வீட்டுக் குப் போய் இரண்டு சந்தன மர நாற்றுகளைக் கொடுத்துட்டு வந்திடுவேன். பொண்ணு வளரவும் சந்தன மரம் வளரவும் சரியா இருக்கும். 20 வருடத்துல பொண்ணுக்குத் திருமணச் செலவுக் குத் தேவையான அளவுக்கு மரத்துல இருந்து பணம் வந்திடும். எனக்கும் ரெண்டு பெண் குழந் தைகள்தான். ஆனா, ஊர் முழுக்க இருக்கிறது நான் நட்டுவெச்ச குழந்தைங்க'' என்கிறார் மன நிறைவோடு!
கட்டுரை, படங்கள்: காசி.வேம்பையன்
