Published:Updated:

வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!
##~##
''சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

றிய குறைபாடுகள் உள்ளவர்களையும் கொடிய நோயாளிகள் போல விலக்கிவைப்பதற்குக் காரணம்  அறியாமைதான். அதனால்தான் வெண்புள்ளிகள் உள்ளவர்களை அந்நியத்தன்மையோடு பார்க்கவும் ஒதுக்கிவைக்கவும் செய்கிறோம். வெண்புள்ளிகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வெண்புள்ளிகள் தினமான மே 19 அன்று  'சேர்ந்து வரைவோம்’ என்ற பெயரில் ஓவிய விழா ஒன்றைப் புதுவைக் கடற்கரையில் நடத்தவிருக்கிறது சென்னையைச் சேர்ந்த வெண்புள்ளிகள் அமைப்பு'' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் புதுவை வாசகர் முஸ்தஃபா.
வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!

சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டு இருந்த துணியில் பொதுமக்களும் சுற்றுலாப்பயணி களும் வெண்புள்ளிக் குறைபாடு உடையவர்களும் தூரிகைகொண்டு தங்களின் எண்ணங்களை ஓவியங்கள் மூலம் பிரதிபலிக்க ஆரம்பித்தனர். அரை மணி நேரத்தில் சிறிது இடம்கூட இல்லாத அளவு, ஓவியங்களால் நிறைந்து இருந்தது அந்தத் துணி. இதற்கு இடையில் வெண்புள்ளிகள் பற்றிய விழிப்பு உணர்வுச் செய்திகளையும் பரப்பிக்கொண்டு இருந்தனர் வெண்புள்ளிகள் அமைப்பினர்.  

வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!

''உடலில் வெண்புள்ளிகள் ஏற்படுவது ஒரு நோயே அல்ல; அது மெலனின் எனப்படும் நிற மிக் குறைபாடால் ஏற்படுவது. இது யாருக்கும் பரவாது. பொதுமக்கள் வெண்புள்ளிகள் கொண்டவர்களைப் புறக்கணிப்பதால் அவர் களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. 2010 வரைக்கும் இந்தக் குறைபாட்டினை வெண் குஷ்டம் என்றுதான் சொல்லிவந்தார்கள். எங்கள் அமைப்புதான் போராடி வெண்புள்ளிகள் என்று அழைக்க  அரசிடம் அனுமதி பெற்றோம். இது வரைக்கும் இந்தக் குறைபாட்டினைப் போக்க மருந்து இல்லை என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனம் இந்தக் குறைபாட்டினைப் போக்க 'லேக்கோ’ என்ற மருந்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த  மருந்தினைப் பயன்படுத்தி னால் பத்து மாதத்தில் இந்தக் குறைபாடு நீங்கி விடும். இந்த மருந்து குறித்த விழிப்பு உணர்வுக் கூட்டங்களையும் நடத்துகிறோம்'' என்கிறார் வெண்புள்ளிகள் அமைப்பின் செயலாளர் புகழேந்தி.

வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!

இந்த ஓவிய விழாவில் கலந்துகொள்ள வந்த வெண்புள்ளிக் குறைபாட்டினால் பாதிக்கப் பட்டவரும்,  புதுவை பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவருமான பாலபாஸ்கர் ''எனக்கு ஆறு வருடத்துக்கு முன்பு உடம்பில் மூணு இடத்தில் சின்னச் சின்னதா வெண்புள்ளிகள் இருந்தன. ஆனால், கடந்த மூணு, நாலு வருஷமா  வேக மாகப் பரவி உடல் முழுவதும் வந்திடுச்சு. பொது இடத்தில் என்னை மத்தவங்க வெறிச்சுப் பார்க்கிறதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு!'' என்கிறார்.

வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி சுந்தர் ராஜனும் வெண்புள்ளிக் குறைபாடு உடையவர் தான்.

''அலோபதி, ஆயுர்வேதம்னு எவ்வளவோ மருந்துகள் சாப்பிட்டும் குணப்படுத்த முடியலை. இந்த அமைப்பு மூலம்தான் 'லேக்கோ’ மருந்து பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். மருந்துகள் மட்டும் ஒருவ ரைக் குணப்படுத்தாது. அத்துடன் மற்றவர்களின் அரவணைப்பும் ஊக்கமும்தான் பாதிக்கப்பட்ட வர்களை மனதளவில் முழுமையாகக் குணப் படுத்தும்'' என்கிறார்.

சரிதானே?

வேண்டாம் இந்த வெண்புள்ளித் தீண்டாமை!

கட்டுரை, படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism