Published:Updated:

''ஆற்றங்கரையில் மணல் தலையணை..!''

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

''ஆற்றங்கரையில் மணல் தலையணை..!''

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
''ஆற்றங்கரையில் மணல் தலையணை..!''
##~##
''நீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ர் இன்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் எழுத்துக்களை நிஜத்தில் எனக்கு உணரவைத்தது நான் பிறந்த ஊர். மேற்கே பெருமாள் கோயிலும் கிழக்கே திருக்கண்டீஸ்வரர் கோயிலும் அருள்புரியும் தெய்வங்களாகக் காத்து நிற்க... பாலாற்றின் கரையில் வீற்றிருக்கிறது சக்கரமல்லூர்'' என்று தன் ஊர் பற்றிப் பேசத் தொடங்கினார் புகழ்பெற்ற வழக்கறிஞரும் தி.மு.க-வின் சட்ட ஆலோசகரும் ஆன ஜோதி.

''மேற்கும் கிழக்குமாகப் பாலாறு ஓடிக் கொண்டு இருக்க... தென் கரையில் நீரால் சூழப்பட்டு இருக்கிறது எங்கள் ஊர். ஏழு தலை முறைகளாக எங்கள் குடும்பம் சக்கரமல்லூரில் தான் வாழ்ந்துவருகிறது. என் தந்தை நடராஜன் பெரிய நிலச்சுவான்தார். பெரியார் கொள்கையால் ரொம்பவும் ஈர்க்கப்பட்டவர். அதனாலேயே எட்டுத் தடவை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டார். தாய் கல்யாணி அம்மாள் வைக்கும் வடகக் குழம்பும் பூண்டு ரசமும் என் ஊரின் மண் வாசனை அடையாளங்கள். என்னோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று பேர். நான்தான் கடைக்குட்டி. ஹாஸ்டலில்தான் எங்களின் கல்வி வாழ்க்கை கரைந்துகொண்டு இருந்தது. அதனால் விடுமுறைக்கு ஊருக்கு வருவது என்றாலே மனதில் பரவசப் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பிக்கும்.

''ஆற்றங்கரையில் மணல் தலையணை..!''

விடுமுறைக்குப் போனால் வயல்களில்தான் எங்களின் பெரும்பாலான பொழுதுகள் கரையும். நேஷனல் பானாசோனிக் டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு கழனிக்குப் போய்விடுவோம். டிரான்சிஸ்டரை ஆன் செய்தால்... சிலோனில் மயில்வாகனனின் 'இங்கும் அங்கும்’ நிகழ்ச்சி ஒலி பரப்பாகும். அப்படியே ரேடியோவை மரத்தில் தொங்கவிட்டுவிட்டு ஆனந்தமாகப் பாடல்கள் கேட்டபடியே வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவோம். பிறகு திருவாழீஸ்வரர் கோயிலின் ஆலமர விழுதுகளைப் பிடித்து தொங்கியபடியே விளையாடிய நாட்களையும் மரங்களில் இருந்து நாவல் பழங்களைப் பறித்துத் தின்ற தருணங்களையும் இப்போதும் தேடிக்கொண்டு இருக்கிறேன். பூபதி, நாகராஜன், பக்தவத்சலம், நீலகண்டன் என்று என்னுடைய பால்ய கால நண்பர்களுடனான நட்பு மட்டும் இன்றும் தொடர்கிறது. சூரியக் கதிர்களின் வெப்பம் தணியத் தொடங்கும்நேரத்தில், என் அப்பா வாங்கிப் படிக்கும் பகுத்தறிவுப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு நதிக் கரையில் ஒதுங்குவேன். மணலைக் குவித்துத் தலையணை ஆக்கி, அதில் தலை சாய்த்தபடியே சூரியன்  மறையும்வரை புத்தகங்களைப் படிப்பேன்.    இப்போதும் ஊருக்குப் போகும்போதுஆற்றங் கரைப் பக்கம் மறக்காமல் போவேன். இந்த ஆற்றங்கரையில்தான் என் பெற்றோரின் உடல்களும் உறங்கிக்கொண்டு இருக்கின்றன. அங்கே போகும்போது எல்லாம் சமாதிகளில் என் கண்ணீர் சிந்தும்.

''ஆற்றங்கரையில் மணல் தலையணை..!''

சென்னையில் இருந்து என்னுடைய ஊருக் குப் போவதாக இருந்தால் ஆற்காடு சென்றுதான் போக முடியும். ஆற்காட்டில் இருந்து ஊருக்கு ஒரே ஒரு பஸ்தான். பஸ் ஸ்டாண்டிலேயேபடுத்து கிடந்து, காலையில் புறப்பட்டு ஊருக்கு வந்த தெல்லாம் ஞாபக அலமாரியில் இப்போதும் பசுமையாக இருக்கிறது. 'சென்னையில் இருந்து ஊருக்கு நேரடியாக ஒரு பஸ் ஓடாதா?’ என்று என் தாய் அடிக்கடி ஆதங்கப்பட்டுக்கொண்டே இருப்பார். அம்மாவின் ஆசை என்னால் நிறை வேறும் என்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்த்தது இல்லை.

என் அம்மாவின் கனவு அம்மா (ஜெயலலிதா) மூலம்தான் நிறைவேறியது. இப்போது நான் அ.தி.மு.க-வில் இல்லை என்றாலும் நன்றி மறப் பவன் அல்ல என்பதற்காக இதைச் சொல்கி றேன். திருக்கண்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அரசு நிதிஉதவி, உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தியது, நூலகம் கொண்டுவந்தது என்று எம்.பி. ஆக இருந்தபோது, என் நிதியை ஊருக்குச் செலவழித்து இருக் கிறேன். பத்திரப் பதிவு அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சுகாதார நிலையம் ஆகியவை விரை வில் என் ஊருக்கு வர வேண்டும் என்கிற என்னுடைய ஆசைகள் ஏராளம். அது எப்போது நிறைவேறுமோ?''

- எம்.பரக்கத் அலி
படங்கள்: ச.வெங்கடேசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism