Published:Updated:

அரக்கோணம்.. இப்போ அசத்தல் கோணம்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

அரக்கோணம்.. இப்போ அசத்தல் கோணம்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
அரக்கோணம்.. இப்போ அசத்தல் கோணம்!
அரக்கோணம்.. இப்போ அசத்தல் கோணம்!

டேபிள் டென்னிஸ் என்றாலே பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டு என்று சினிமாவைப் பார்த்து மனதில் பதியவைத்திருக்கிறோம். ஆனால், ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை'' என்கிறார் அரக்கோணம் மதர் தெரஸா டேபிள் டென்னிஸ் அகாடமித் தலைவர் சந்திரமௌலி. இங்கு சாதாரணக் குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகளுக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சார், பொதுவாகவே டேபிள் டென்னிஸ் விளையாட்டு சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் மட்டுமே விளையாடக்கூடிய ராயல் விளையாட்டாகத்தான் இருந்துவருகிறது. 'இது என்ன நமக்கு மட்டும் எட்டாக் கனியா?’ என்ற கேள்விக்கான விடையாகத் தொடங்கப்பட்டதுதான் மதர் தெரஸா டேபிள் டென்னிஸ் அகாடமி. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காலஞ்சென்ற ஜி.பராங்குசம் என்பவர்தான் இந்த அகாடமியை ஆரம்பித்தவர்.

அரக்கோணம்.. இப்போ அசத்தல் கோணம்!
##~##
வேலூர் மாவட்டத்திலேயே டேபிள் டென்னிஸுக்கு என இருக்கும் பயிற்சி மையம் இது ஒன்று மட்டும்தான். ப.ஜனார்த்தனன், ஜி.பி.கஜேந்திரன் ஆகிய இருவரும்தான் அகாடமியின் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்களாக இருந்துவருகின்றனர்.

காட்பாடி, ஜோலார்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இருந்தெல்லாம்கூடப் பலர் வந்து பயிற்சி பெறுகின்றனர். 10, 12, 14, 17 என  வயதின் அடிப்படையில் மாண வர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர். இங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று சாதனை படைத்ததோடு தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொள்கிறார் கள்.

யாஷினி என்கிற எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவி எட்டு முறை மாநிலத் தரவரிசை வீராங்கனையாகத் தேர்வு பெற்று மாநிலச் சாம்பியன்ஷிப் பட்டமும் வென்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் நடந்த சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கேடட் பிரிவில் தங்க மெடல் வென்று பெருமை சேர்த்துள்ளார். மேலும் இவர் தேசிய அளவு தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கேடட் கேர்ள் பிரிவில் இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி மெடலும் வென்றுள்ளார்.

அரக்கோணம்.. இப்போ அசத்தல் கோணம்!

அரக்கோணத்துக்கு அருகில் உள்ள கைனூர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த யாஷினி.

மேலும், எங்கள் அகாடமியில் பயிற்சி பெறும் சூரிய பிரசாத் என்கிற மாணவர் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். எஸ்தர் ஆக்னஸ் என்கிற மாணவி மாநில அளவில் தரவரிசை வீராங்கனையாகத் தேர்ச்சி பெற்றதோடு, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு மாநில அளவில் 10 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் பங்கெடுத்துக் கார்த்திக் ராஜா முதல் இடத்தை வென்றுள்ளார்.

எங்கள் அகாடமியின் முதல் முயற்சியாக அஸ்வின் கார்த்திக் என்ற நான்கரை வயது மாணவனுக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சி அளித்துவருகிறோம். மாவட்டத்திலேயே மிகவும் இளம் வயது விளையாட்டு வீரர் இவர்தான். இன்னும் மூன்று மாதத்தில் சென்னையில் நடைபெறப்போகும் போட்டியில் அஸ்வின் கார்த்திக்கைப் பங்கெடுக்கவைக்க இருக்கிறோம்'' என்கிறார் சந்திரமௌலி உற்சாகத்தோடு.

''செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதிருந்தே நான் டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பிச்சிட்டேன் அங்கிள்'' என்கிறார் யாஷினி. அஸ்வின் கார்த்திக்கோ ''நான் டி.வி-ல ஸ்போர்ட்ஸ்தான் ரொம்ப இன்ட்ரெஸ்டா பாப்பேன். டேபிள் டென்னிஸ் ரொம்பப் புடிக்கும். அப்பாதான் என்னை இந்த  அகாடமில சேத்துவிட்டாங்க. பெரிய அண்ணனுங்ககூட எல்லாம் விளையாடுவேன். டேபிள்தான் எனக்கு ஹைட்டா இருக்கும். நான் அட்ஜஸ்ட் பண்ணி விளையாடுறேன்'' என்கிறான்.

எப்படியோ அரக்கோணம் அசத்தல் கோணத்தில் யோசிக்கிறது.

- ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism