Published:Updated:

”குறள், நிரந்தர ஆசான்!”

”குறள், நிரந்தர ஆசான்!”

”குறள், நிரந்தர ஆசான்!”

”குறள், நிரந்தர ஆசான்!”

Published:Updated:

மிழில் கலை, பண்பாடு, இலக்கியத்துக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், அவற்றை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்லத்தான் இங்கு ஆட்கள் இல்லை. உலக இலக்கியத்துக்குச் சவால்விடும் திருக்குறளின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. 'தமிழர்களின் பொக்கிஷமான திருக்குறளைச் சிறு வயதில் இருந்தே போதித்தால் குழந்தைகளின் எதிர்காலம் செழிப்பாகும்’ என்ற கருத்தின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை. இந்தப் பேரவை, சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழுமையங்களில் குழந்தைகளுக்குக் குறள் பயிற்சி அளித்து வருகிறது. அந்தப் பயிற்சி மையங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதித் தெருவில் உள்ள ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் பள்ளிக்குச் சென்றோம்.

”குறள், நிரந்தர ஆசான்!”
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேரவையின் பொறுப்பாளர் பரமானந்தம் ஒவ்வொரு குறளாகச் சொல்லச் சொல்ல அதை குழந்தைகள் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ''தமிழர்களின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டை உலகுக்கு உணர்த்திய முழுமையான இலக்கியம் திருக்குறள். பைபிளுக்கு அடுத்து உலக அளவில் நிறைய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள் தான். 'இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில் தான்  உருவாகிறது’ என்பார்கள். அதனால்தான் குழந்தைகளிடம் குறளைப் போதிக்கிறோம். கள்ளம் கபடம் இல்லாத இந்த வயதில் குறளைப் போதித்தால் அது வாழ்க்கை முழுவதும் அவர் களை நெறிப்படுத்தும் என்பதற்காகவே இந்த முயற்சி.

இந்தப் பயிற்சி வகுப்புக்குக் கட்டணம் எது வும் கிடையாது. குறளைப் படித்தால் உச்சரிப்புத் தெளிவாகும். பேச்சுத் திறன், கல்வியில் ஆர்வம், ஞாபக சக்தி அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நாட்டுக்கும் வீட்டுக்கும் தன் கடமையைச் செய்யும் ஒரு நல்லவன் உருவாகக் குறள் நிரந்தர ஆசானாக இருக்கிறது'' என்றார் பரமானந்தம்.

- எஸ்.கிருபாகரன்
படம்: வீ.ஆனந்தஜோதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism