Published:Updated:

எடியூரப்பாவுடன் கருத்து வேறுபாடு: ஆளுனர் பல்டி!

பெங்களூரு, மே 18,2011

முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு மிகப் பெரிய அளவிலான பெரும்பான்மையுடன் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று அம்மாநில ஆளுனர் பரத்வாஜ் கூறினார். ##~~##

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் அரசியலில் சச்சரவுகள் நிலவி வந்த சூழலில், டெல்லியில் ஜனாதிபதி முன்பு முதல்வர் எடியூரப்பா தலைமையில் பிஜேபி எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு நடத்தினர்.

இந்த நிலையில், எடியூரப்பா அரசு முழு பெரும்பான்மை பெற்றுள்ளதில் சந்தேகமில்லை என்று ஆளுனர் பரத்வாஜ் கூறியுள்ளார்.

தன்னைத் திரும்பப் பெற வேண்டும் என பிஜேபி வலியுறுத்தி வருவது குறித்து கேட்டதற்கு, ஜனாதிபதி ஒருவரை தவிர எவராலும் தன்னை நீக்க முடியாது என்றார் பரத்வாஜ்.

இதனிடையே, பெங்களூருவில் நடந்த விழாவில் ஆளுனர் பரத்வாஜூம், முதல்வர் எடியூரப்பாவும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த ஆளுனரை எடியூரப்பா வாசலுக்கு சென்று வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் பரத்வாஜ், முதல்வர் எடியூரப்பா தனது மிகச் சிறந்த நண்பர் என்று சிலாகித்தார்.