Election bannerElection banner
Published:Updated:

பயங்கரவாதிகள் பட்டியல் குளறுபடிக்கு உள்துறை அமைச்சகமே பொறுப்பு: ப.சி.

பயங்கரவாதிகள் பட்டியல் குளறுபடிக்கு உள்துறை அமைச்சகமே பொறுப்பு: ப.சி.

புதுடெல்லி, மே 18, 2011

பயங்கரவாதிகள் பட்டியல் குளறுபடிக்கு உள்துறை அமைச்சகமே பொறுப்பு: ப.சி.

பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த குளறுபடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பொறுப்பேற்பதாக, அத்துறையின் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்ட இந்தியரான வஸூல் கமார் கான் என்பவர் தாணேயில் இருப்பதாகத் தெரியவந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.

இந்தியா, பாகிஸ்தான் உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்றது. ##~~##

அப்போது இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது. 50 பேர் கொண்ட அந்தப் பட்டியலில், 41-வது பெயராக வஸூல் கான் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தப் பயங்கரவாதிகள் பெயர் பட்டியல் கடந்த வாரம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.

கடந்த 2002, 2003 ஆண்டுகளில் மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக வஸூல் கமார் கான் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில் ஜூலையில் ஜாமீனில் வெளி வந்தார்.

வஸூல் கமார் கானின் பெயரை மகாராஷ்டிர மாநில உள்துறையும், காவல்துறையும்தான் மத்திய அரசுக்கு அளித்தன.

இந்நிலையில், வஸூல் கான் பாகிஸ்தானில் இல்லை என்றும் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் தொழில் செய்து வருகிறார் என்றும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, தாணேயில் வசிக்கும் வஸூல் கமார் கான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவரிடம் செய்தி செனல்கள் பேட்டி கண்டன.

தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள இந்தியாவில்தான் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட வஸூல் கான், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இதனால் தனது தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தை கடுமையாக சாடினார்.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து வஸூல் கான் இன்று நீக்கப்பட்டார்.

பிழை இயல்பே : ப.சி.!

இந்தக் குளறுபடி தொடர்பாக நிருபர்களிடம் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்தப் பிழைக்கு தமது அமைச்சகம் பொறுப்பேற்பதாக கூறினார்.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் குழப்பம் ஏற்பட்டது, சாதாரணமான மனிதப் பிழை தான் என்று கூறிய அவர், 'இந்த அறையில் அமர்ந்துள்ளவர்களில் பிழையே செய்யாதவர்கள் எவரேனும் இருக்கிறீர்களா?' என்று 'ஹூமன் எரர்' இயல்பு தான் என நியாயப்படுத்தினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு