Published:Updated:

25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்; உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன்; அகதி முகாம் அதிகாரி ஜாபர் சேட்!

சென்னை, மே 19,2011

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். ##~~##

சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன், உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து வந்த ஜாபர்சேட், மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச்செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு:

மாநில உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. டி.ராஜேந்திரன் (சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ், மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்பார். மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆஷீஸ் பெங்ரா மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய போலீஸ் பயிற்சி பள்ளி சிறப்பு அதிகாரியாக உள்ள கூடுதல் டி.ஜி.பி. எஸ்.ஆர்.ஜாங்கிட், நாகர்கோவிலில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் டி.ஜி.பி. எம்.எஸ்.ஜாபர்சேட், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டல ஐ.ஜி. பி.சிவனான்டி, திருச்சியில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்பார்.

மாநில நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. தாமரைக்கண்ணன், சென்னை நகரின் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் உள்ள ஐ.ஜி. ஷகீல் அக்தர் மாற்றப்பட்டார்.

சென்னை தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் உள்ள கூடுதல் கமிஷனர் எம்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.

மாநில தலைமையக ஐ.ஜி. அபய்குமார் சிங், சென்னை நகரின் தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன், சென்னை தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு இணை கமிஷனர் பெரியய்யா மாற்றப்பட்டு உள்ளார்.

மத்திய அரசு பணியில் உள்ள டி.ஐ.ஜி. கே.சங்கர், மத்திய சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை டி.ஐ.ஜி. என்.கே.செந்தாமரைகண்ணன், வடசென்னை இணை கமிஷனராக பொறுப்பேற்பார். வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி பணிமாற்றப்பட்டு உள்ளார்.

ஈரோடு அதிரடிப்படி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.வி.கருப்பசாமி, சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஆகிறார். மைலாப்பூர் துணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் மாற்றப்பட்டார்.

சென்னையில் உள்ள மாநில ஓ.சி.ஐ.யு. பிரிவு சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தியாகராயநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தியாகராய நகர் துணை கமிஷனர் சண்முகவேலு மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன், சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆகிறார். அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் மாற்றப்பட்டு உள்ளார்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பேற்பார். புளியந்தோப்பு துணை கமிஷனர் என்.பாஸ்கரன் மாற்றப்பட்டார்.

ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்ட் அவினாஷ்குமார், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகிறார். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமார் மாற்றப்பட்டு உள்ளார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.எஸ்.அன்பு, பூக்கடை துணை கமிஷனராக பொறுப்பேற்பார். பூக்கடை துணை கமிஷனர் பி.பகலவன் மாற்றப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.கண்ணன், திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் என்.எம்.மயில்வாகனன் மாற்றப்பட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.பவானீஸ்வரி, சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஆகிறார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமி மாற்றப்பட்டார்.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் ஆகிறார். அண்ணா நகர் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் மாற்றப்பட்டார்.

தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சுதாகர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆகிறார். அந்த பதவியில் இருந்த துரைராஜ் மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷி நிர்மல் குமார், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்பார். அந்த பதவியில் இருந்த எஸ்.மனோகரன் மாற்றப்பட்டார்.

ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை கமாண்டன்ட் அனிஷா உசேன், சென்னை போக்குவரத்து போலீஸ் மத்திய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பொன்மாணிக்கவேல், மாநில ரயில்வே டி.ஐ.ஜி.யாக சென்னைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் இருந்த பி.சக்திவேலு மாற்றப்பட்டார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.