Published:Updated:

ஓரம் போ... முரளி வண்டி வருது!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

ஓரம் போ... முரளி வண்டி வருது!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
ஓரம் போ... முரளி வண்டி வருது!
##~##
பு
துவையில் உள்ள ஆண்கள் அழகு நிலையத்தில் பணிபுரிபவர் முரளிகிருஷ்ணா. தன் துறைக்குச் சம்பந்தமே இல்லாமல் விதவிதமாக பைக் ஓட்டுகிறார். தரையில் உட்கார்ந்து இருப்பதுபோல பைக்கில் உட்கார்ந்து அலட்சியமாக ஓட்டுவது, கையாலேயே காலில் இருக்கும் பிரேக்கை அழுத்துவது எனப் பலவிதங்களில் பைக் சாகசம் செய்கிறார்.

'புதுச்சேரியின் எல்லைப்புறக் கிராமங்களில் ஒன்றான கரியமாணிக்கம்தான் என் ஊர். எனக்குப் பத்து வயசு இருக்கும்போது திருவிழாவில சைக்கிள் சாகசம் செய்ற ஒருத்தரைப் பார்த்ததுதான், என்னுடைய இன்ஸ்பிரேஷன். ஆரம்பப் பயிற்சியில் நிறைய அடி விழுந்தது. கொஞ்சம் கொஞ்சமா சைக்கிளில் செஞ்ச சாகசத்தை பைக்கில் செய்ய ஆரம்பிச்சேன்.

ஓரம் போ... முரளி வண்டி வருது!

இப்படி சாகசம்னு தினமும் நான்கு லிட்டர் பெட்ரோலைக் காலி செஞ்சுடுவேன். ஆனால், தொடர்ச்சியா பெட்ரோலுக்குப் பணம் செலவு செய்ய முடியல. அதுக்காக ஒரு வழியைக் கண்டுபிடிச்சேன். என்னுடைய ஊரில் இருந்து நான் வேலை செய்யும் இடம் 28 கி.மீ. தூரம் என்பதால் தினமும் வண்டியிலேயே போய்வர ஆரம்பிச்சேன்.  அப்படியே சின்னச் சின்னதா சாகசம் செஞ்சு ஒரு வழியா பைக் எனக்கு செட் ஆயிடுச்சு. இந்த முயற்சியை வெச்சி நிறைய நல்லது செய்யணும்னு  தோணுது. இதுவரைப் பெருசா நான் எந்தச் சாதனையும் செய்தது இல்லை. ஆனால், குழந்தைத் தொழிலாளர்க்கு எதிரான விழிப்பு உணர்வை இதன் மூலம் ஏற்படுத்தணுங்கிறது என் ஆசை. ஆனால், அதை எப்படிச் செயல்படுத்துறதுனு தெரி யலை'' என்கிறார்.

- கட்டுரை, படங்கள்: ஆ.நந்தகுமார்

ஓரம் போ... முரளி வண்டி வருது!