Published:Updated:

மே 23-ல் தமிழக பேரவை முதல் கூட்டம் தொடக்கம்

விகடன் விமர்சனக்குழு

சென்னை, மே. 19,2011

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இம்மாதம் 23-ம் தேதி தொடங்குகிறது. ##~~##

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

14-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 23-ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.30 மணிக்கு கூடுகிறது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை முதல் கூட்டம் நடக்கும். அன்று ஆளுனர் உரை நிகழ்த்துவார் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.