Published:Updated:

மாறிவிட ஆசை!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

மாறிவிட ஆசை!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
மாறிவிட ஆசை!
##~##
சீனி அஜ்மல்கான், மாநகராட்சி ஆணையர், வேலூர்: 
 ''எனது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் உள்ள பொட்டகவயல் கிராமத்தில் விவசாயம் பார்த்திருப்பேன். எங்கள் குடும்பத்தில் இருந்து முதல்முறையாக அரசு வேலைக்கு வருபவன் நான்தான். என்னுடைய குடும்பம் முழுக்க முழுக்க விவசாயத்தை நேசிப்பவர்கள் என்பதால் கண்டிப்பாக விவசாயம் பார்க்கத்தான் போயிருப்பேன்!''

சுரேஷ்குமார், சர்வர், அழகர் உணவகம், வேலூர்: ''பத்து வருடங்களுக்கும் மேலாக சர்வராக இருக்கிறேன். அப்போதே மளிகைக் கடை வைப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால், காலத்தின் சூழ் நிலையில் பணம் எல்லாம் கரைந்துவிட்டது. இல்லைனா நானும் பெரிய மளிகைக் கடை ஓனர்தான்!''

மூர்த்தி, முன்னாள் வேலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், ''ஹெல்த் ஆபீஸர் ஆக வரணும்னு ஆசை. அதுபோலவே படிச்சேன். பத்து வருஷத்துக்கு முன்னாடியே தேர்வு எழுதினேன். ஆனா, சின்ன வயதில் இருந்து எம்.ஜி.ஆர், அப்புறம் அம்மாவைப் பின்பற்றி கட்சியிலே இருந்துட்டேன்! கொஞ்சம் டைம் மிஸ்ஸாகிடுச்சி. இல்லைனா நான் ஹெல்த் ஆபீஸர்!''

சிவா, ஓட்டுநர், வேலூர்: ''ஸ்கூலில் படிக்கும்போது நான் ஓட்டப் பந்தய வீரன். எப்பவும் நான்தான் முதல் பரிசு வாங்குவேன். ஆனா, குடும்பக் கஷ்டம். 23 வருஷமா டிரைவரா இருக்கேன். கொஞ்சம் முயற்சி செஞ்சி இருந்தா நல்ல ஸ்போட்ர்ஸ்மேனா வந்து இருப்பேன்!''

சண்முக சுந்தரம், காவல் துறை தலைமை நிழற்பட நிபுணர், வேலூர்: ''ஒரு ஆசிரியராக வர வேண்டியவன் பிரதர். ஜஸ்ட் மிஸ். சமூகத்துக்கு நல்ல ஒழுக்கமான மாணவர்களைத் தர வேண்டிய பொறுப்பு பெற்றவர்களைவிட ஆசிரியர்களுக்குத்தான் அதிகம். ஆனால், நாம் நினைப்பது போலவா நடக்குது? ஒரு புகைப்படக் கலைஞனாக எனக்கு மனசுக்குத் திருப்தி இருந்தாலும் ஆசிரியர் பணியில் சேராத சின்ன வருத்தம் இப்பவும் இருக்கு!''

­- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

மாறிவிட ஆசை!