Published:Updated:

கையருகே ஓவியம்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

கையருகே ஓவியம்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
கையருகே ஓவியம்!

''நான் வரைஞ்சுக் கொடுத்த ஓவியத்தை மயில்சாமி அண்ணாதுரை அங்கிள் அவருடைய அலுவலகத்தில் வெச்சிருப்பது ரொம்பப் பெருமையாக இருக்கு'' முகத்தில் வானவில் பெருமிதம் தெரியச் சொல்கிறார், எட்டாம் வகுப்பு மாணவி மும்தாஜ் ரிஷானா.

##~##
''என் அப்பா ராஜா முகம்மது, ஃபேஸ்புக்கில் மயில்சாமி அண்ணாதுரை அங்கிளோட சாட் பண்ணுவாங்க. ஒரு நாள் என் பள்ளியில் நண்பர்களோட பேசிக்கிட்டு இருந்தப்ப, 'பயோ மிஸ்டரி’ங்கிற வார்த்தையும் வந்தது. எனக்கு அர்த்தம் தெரியாததால், என் அப்பாவிடம் கேட்டேன். அப்ப அவரு ஃபேஸ்புக்கில் அங்கிள்கூட சாட் செய்துகொண்டு இருந்தார். 'நீ அங்கிள்கிட்டயே கேளேன்’ என்று சொல்ல, நானும் கேட்டேன். 'உடலுக்கு அடுத்து உயிர் என்ன ஆகும் என்பதைப் பற்றிய ஆராய்ச்சி’ என்று பதில் அளித்தார். இப்படித்தான் அங்கிளுடன் நானும் சாட் செய்யத் தொடங்கினேன்.

அப்போதான் அங்கிளோட 'கையருகே நிலா’ புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதுக்கு எங்களையும் அழைச்சிருந்தாங்க. நான் சின்ன வயசிலேர்ந்தே ஓவியம் வரைஞ்சிக்கிட்டு இருக்கேன். அதனால், விழாவில் அங்கிளுக்கு என்னோட ஓவியத்தைப் பரிசாக் கொடுக்கணும்னு நெனைச்சேன். இயற்கையை ஆராயும் அங்கிளுக்குப் பரிசளிக்க ஒரு இயற்கைக் காட்சியை ஓவியமா வரைஞ்சேன். விழாவில் கலந்துக்கிட்டு அந்தப் பரிசை மேடையில் அங்கிளுக்குக் கொடுத்தேன். அதை வாங்கி என்னைப் பெருமைப்படுத்தியவர், தான் எழுதிய புத்தகத்தைக் கையெழுத்திட்டு எனக்கு பரிசாகக் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தைத்தான் அங்கிள் தனது ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது இன்னும் எனக்கு சந்தோஷமாக இருக்கு.

அதற்கு அடுத்த நாட்களில் அங்கிளுடன் சாட் செய்யும்போது, 'நீ கொடுத்த ஓவியத்தை வீட்டில் உள்ள என்னுடைய அலுவலக அறையில் வைத்திருக்கிறேன்’ என்று சொன்னபோது, என்னுடைய மகிழ்ச்சி கூடுதலானது. அங்கிளைப் போல நானும் ஒரு துறையில் சாதனை புரியவேண்டும் என்னும் உத்வேகம் எனக்கு வருகிறது'' என்கிறார் அதே புன்னகை மாறாமல்!

- மு.செய்யது முகம்மது ஆசாத்