Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:
வலையோசை
வலையோசை

சத்யநாராயணன்.. சென்னை நங்கநல்லூர்வாசி. எட்டு ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்து, கடந்த மாதம் சென்னைத் திரும்பி உள்ளார். தற்போது ஒரு ஐ.டி கம்பெனியில் தர நிர்ணயத் துறை மேனேஜராகப் பணிபுரிந்துவருகிறார். அவருடைய 'சின்னப் பையன் பார்வையில்’ என்கிற வலைப்பூவில் (www.boochandi.com)  இருந்து...

என் வாழ்க்கையை மாற்றிய சுடர்மணி!

##~##

 அப்போ எனக்கு 10 வயசு. குடும்பத்தோடக் கிளம்பி பிச்சாவரம் போயிருந்தோம். வர்ற வழியில் சிதம்பரம் கோயிலுக்குப் போனோம். கோயில் குளத்தில் குளிக்க எல்லாரும் இறங்கினாங்க. அப்ப எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால், 'தைரியமா’ மேல் படிக்கட்டுலேயே உட்கார்ந்து சொம்புல தண்ணி மொண்டு ஊத்திக் குளிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு கால் வழுக்கி தண்ணிக்குள்ளப் போயிட்டேன். மேல வர முயற்சி செஞ்சும் முடியலை. கீழே கீழே போற மாதிரி இருக்கு.

அந்தக் குளத்தில் இருக்கிற தண்ணி, ஒரு கடல் அளவுக்கு இருக்கு. லியானார்டோ

டி காப்ரியோ மாதிரி தண்ணிக்குள்ள ஸ்லோ மோஷன்லே போறேன். அந்த டைட்டானிக் இறுதிக் காட்சியே ஒரு சின்ன தண்ணித் தொட்டியில்தான் எடுத்தாங்கன்னு சமீபத்தில்தான் எனக்குத் தெரிஞ்சுது.

அப்போ திடீர்னு என் கையில் ஏதோ தட்டுப்பட்டது. 'மூழ்கிறவன் கைகளுக்கு மாட்டினதெல்லாம் தெய்வம்’ங்கிற  பழமொழிக்கு ஏற்ப (திடீர்னு நானே யோசிச்சது!), அதை நான் புடிச்சி மேல வர முயற்சிக்கிறேன். ஆனால், யாரோ மேலே இருந்து 'அதை’ என்கிட்ட இருந்து விடுவிச்சி, என்னை தள்ளிவிடப் பாக்கிறாங்க. 'ஆஹா, இது விபத்து இல்லடா,  அப்பட்டமான கொலை முயற்சி’னு நானே  மனசுக்குள்ள சொல்லிக்கறேன். மறுபடியும் நல்லாப் புடிச்சி இழுக்கி றேன். கூடவே பக்கத்தில் ஒரு 'கால்’ தெரியுது. டக்குன்னு 'அதை’ விட்டுட்டு 'காலை’

புடிச்சிக்கிட்டேன். தென்னை மரம் ஏறுறது மாதிரி ஒருவழியாத் தண்ணிக்கு மேல வந்துட் டேன். பிறகுதான் தெரிஞ்சுது, நான் புடிச்சி இழுத்தது, எங்க மாமாவோட ஜட்டின்னு.

இப்போ பதிவோடத் தலைப்பை ஒரு தடவைப் படிங்க. 'அது’ மட்டும் இல்லேன்னா, நானும் இல்லே. இந்தப் பதிவும் இல்லே. சரிதானே?

ட்வீட்ஸ்!

இது எப்படித் துவங்கியதுன்னு தெரியல. ஆனா, பின்வரும் ட்வீட்ஸ் போலவே பலரும் அன்று ட்விட்டரில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

என் பங்கு இங்கே...

சவுரி # இழுத்ததில் வந்தது

கங்குலி சட்டை # கழற்றியதில் பிடித்தது

திட்டு # உடைத்ததில் கிடைத்தது

பாம்பு # பிடித்ததில் கடித்தது

மாங்காய் # கடித்ததில் பிடித்தது

நொறுக்ஸ்!

ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவுடன் என் மகள், ''இன்னிக்கு என் டீச்சர், மொத்த கிளாஸுக்கும் நான்தான் ரோல்மாடல்னு சொன்னாங்க'' என்றாள்.

''அப்படியா? குட். என்ன ஆச்சு?''

''கிளாஸ் எடுத்துட்டு இருந்தப்ப அவங்களைப் பாக்க வந்தவங்ககிட்ட மிஸ் பேசிட்டு இருந்தாங்க. அப்ப என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கசமுசனு சத்தம் போட, நான் மட்டும் யார்ட்டேயும் பேசாம அமைதியா இருந்தேன். அதனால, 'கிளாஸ்ல சஹானா மட்டும் அமைதியா இருக்கா. இந்த கிளாஸுக்கே அவதான் ரோல்மாடல்’னு சொன்னாங்க.''

''சூப்பர். நீ டீச்சருக்கு தேங்க்ஸ் சொன்னீயா?''

'இல்லை.'

''யாராவது உன்னைப் பாராட்டினா அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். பழகிக்கோ!''

இதுக்கு சஹானா சொன்னதைக் கேட்டு 'வேதம் புதிது’ படத்தில் அடி வாங்கும் சத்யராஜ் மாதிரி தலையை அப்படி இப்படி திருப்பிக்கொண்டேன்.

''நான் யார்ட்டேயும் பேசலைங்கிறதுக்காகத்தான் அவங்க என்னை ரோல்மாடல்னு சொன்னாங்க. அதுக்கு நான் தேங்க்ஸ்னு சொல்லணும்னா பேசியாகணும். அப்படி பேசிட்டா ரோல்மாடல் இல்லைனு சொல்லிருவாங்களே? அதான் பேசலை!''

டென்ஷனைக் குறைங்க!

படிச்சிட்டு டென்ஷன் ஆகாதீங்க. ஏன்னா, பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான்!

நீங்க கடவுள் இல்லை!

வலையோசை

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குனு தெரிஞ்சிக் கோங்க. அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல், அந்த வருத்தங்களை அவுட் சோர்ஸ் பண்ணிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது!

தமிழக அரசுக்கு உதவாதீங்க!

டென்ஷனைக் குறைக்கத் தண்ணி அடிக்காதீங்க. அதனால், டென்ஷன் குறையாது. அப்படின்னா, தம் அடிக்கலாமானு கேக்காதீங்க. மூச்! கூடவே கூடாது. எனக்குத்தான் ஓவியம் வரையத் தெரியாதே. அப்புறம் சுவர் எதுக்குன்னு கேக்காதீங்க.!

மிட்நைட் மசாலா வேண்டாம்!

சீக்கிரம் படுத்துத் தூங்கற வழியைப் பாருங்க. டென்ஷனைக் குறைக்கறதுக்கு நீண்ட தூக்கம்தான் நல்ல மருந்து. அதுக்காக ஆபீஸ்ல தூங்காதீங்க. ஏன்னா, தூங்கினா வேலை போகாம இருக்க நீங்க ஒண்ணும் பாராளுமன்றத்தில் வேலை செய்யலை!

நாயைப் பாத்து கத்துக்குங்க!

ஏதாவது ஒரு நாய்க்குத் தொப்பை இருந்து பாத்திருக்கீங்களா? இல்லல்ல... ஏன்? அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கு. உங்களையும் அதே மாதிரி நாள் முழுக்க ஓடச் சொல்லலே. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஓடுங்க!

பைத்தியமாயிடுங்க!

தனக்குத்தானே அமைதியா மனசுக்குள்ளப் பேசுங்க. அப்படி முடியலையா, அமைதியா உட்காருங்க. புலன்களை அடக்கி தினமும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.

ஒரு வேலை ஒரே வேலை!

டி.வி-யில் சன், ஜெயானு 100 சேனல்கள் இருந்தாலும், ஒரு சமயத்தில் ஒரு சேனலைத்தான் பார்க்க முடியும். அதே மாதிரி ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்யுங்க. டென்ஷன் காலி!

மடக் கவுஜ!

நீதான் வீட்டுக்குப் பெரியவன்

நீதான் சின்னவங்களை

அனுசரிச்சுப் போகணும்

அவங்க உன்னைவிட

பெரியவங்க நீதான்

அவங்ககிட்டே

மரியாதையா நடந்துக்கணும்

உன் மேனேஜர்

திட்டினாரா

நீதான் ஏதாவது

தப்பு செஞ்சிருப்பே

உன் குழுவில்

யாரேனும் சரியா

வேலை செய்யலியா

உனக்கு வேலை

வாங்கத் தெரியல

எல்லாமே நான்தான்

செய்யணும்னா

எல்லா தப்பும்

என்னுது மட்டும்னா

இந்த உலகத்துலே

மத்தவங்கலாம்

எதுக்காக வந்துருப்பாங்க?

பிகு: மடக்கி, மடக்கி எழுதியால்

  இது மடக் கவுஜ!

சென்னை மண்டலத்தைச் சேர்ந்த வலைப்பதிவரா நீங்கள்? வலையோசை பகுதியில் நீங்களும் உங்கள் பிளாக்கும் இடம்பெற, உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப்பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றைchennai @vikatan.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டுங்கள்!