Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட்ராம்

நானும் விகடனும்!

இந்த வாரம் : புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட்ராம்

Published:Updated:

பிரபலங்கள்  விகடனுடனான தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

''சின்ன வயசுல புத்தகங்கள்ல பொம்மை பார்க்க ஆரம் பிச்ச நாள்லயே விகடன் எனக்கு அறிமுகம். ஆனா, ஒரு போட்டோகிராஃபரா என் படம் விகடன்ல வந்தது 2002-ல். அதுவும் முதல் படமே அட்டைப் படமா வந்தது!

கோடாக் நிறுவனம், ஒவ்வொரு வருஷமும் தன் மதிப்பான வாடிக்கையாளர்களுக்குப் பரிசளிக்க காலண்டர் தயாரிப்பாங்க. அந்த காலண்டருக்கு போட்டோ ஷ§ட் பண்ற வாய்ப்பு கிடைக்கிறது பெரிய அங்கீகாரம். அந்த வாய்ப்பு பெரும்பாலும் மும்பை  போட்டோகிராஃபர்களுக்குத்தான் கிடைக்கும். காலண்டர் தயாரிக்க ஆரம்பிச்சதுல இருந்து தமிழ்நாட்டு போட்டோகிராஃபர்கள் யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலை. 2000-க்கு மேலதான் கோடாக் தென்னிந்தியா பக்கம் கவனம் திருப்பியது. அப்போ என் ஆல்பம் வொர்க் பிடிச்சுப் போய், அந்த காலண்டர் வாய்ப்புகொடுத் தாங்க. அப்போ நான் எடுத்த மாடல்ஸ் போட்டோஸோட என் போட்டோவை யும் அட்டையில் வெச்சு 'அழகிகள் இவருக்கு அல்வாத் துண்டு’னு விகடன்ல ஒரு ரேப்பர் ஸ்டோரி பண்ணினாங்க. உள்ளே இன்னும் நிறையப் படங்கள் போட்டு, என் வொர்க் பத்தி நிறைய விஷயங்கள் சொல்லியிருந்தாங்க.  

நானும் விகடனும்!

'நம்ம போட்டோ விகடன் அட்டையில் வந்திருக்கு’ன்னு சந்தோஷமா இருந்தாலும், இந்த 'அழகிகள்... அல்வாதுண்டு’ தலைப்பு என் வீட்ல எல்லாரை யும் அப்செட் ஆக்கி ருச்சு. ஆனா, நான் எதிர் பார்க்கவே இல்லை... விகடன் வெளியான தும் சகல திசைகளில் இருந்தும் போன் அழைப்புகள். சொல்லி வைச்ச மாதிரி எல்லா ருமே 'நல்ல ஸ்டைலிஷ் ரைட்டப். விகடன் அட்டையில் வர்றது பெரிய விஷயம்’னு  வாழ்த்தினாங்க. ஆனா, எனக்கு மட்டும் சின்ன உறுத்தல். பேட்டி எடுத்த நண்பருக்கு போன், செஞ்சு, 'என்ன சார் இப்படித் தலைப்பு கொடுத் துட்டீங்களே?’னு கேட்டேன். 'அழகான பொண்ணுங்களை இன்னும் அழகாக் காட்டுற மாதிரி போட்டோஸ் எடுக் கிறது உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ஈஸியான வேலைதானே? அதைத்தானே எழுதியிருந்தோம்’னு சிரிச்சார்.

விகடனுடனான என்  முதல் அனுபவம் இப்படித்தான் தொடங்கியது. அப்புறம் நான் எந்த புராஜெக்ட் பண் ணாலும் அதை விகடனுடன்தான் முதல்ல ஷேர் பண்ணிக்கத் தோணும். பட பூஜைக்கு முன்னாடியே போட்டோ செஷன் பண்ணும் பழக்கம் தமிழ் சினிமாவில் ஆரம்பிச்சப்ப, நான் எடுத்த 'பாய்ஸ்’, 'பருத்திவீரன்’, 'கஜினி’ படங்க ளின் போட்டோ ஷூட் விகடன்லதான் அழகழகா வந்தது.  

த்ரிஷா, நயன்தாரா, அஞ்சலி, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தானு ஒவ்வொரு ஹீரோயினுக்கும் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பேக்ரவுண்ட், லுக்னு என் எல்லாப் புது முயற்சிகளும் விகடன்ல டபுள் ஸ்பிரெட் படங்களா வரும்போது அதுக்குக் குவியும் பாராட்டுகளே தனி! சமயங்களில் போட்டோ

நானும் விகடனும்!

ஷூட் படங்களை சம்பந்தப்பட்ட ஸ்டார்களே பார்த்திருக்க மாட்டாங்க. விகடன் அட்டையில வரும்போது, ஆனந்த அதிர்ச்சியோட போன் பண்ணி 'சூப்பர் வெங்கட்... பிரமாதமா வந்திருக்கு’னு அப்ளாஸ் கொடுத்துட்டே இருப்பாங்க!

'சிவாஜி’க்காக ரஜினி சாரை வெச்சு ஒரு ஷூட். அதில் ஒரு போட்டோவில் ரஜினி சார் ஒரு சேர்ல உட்கார்ந்து பின்னால திரும்பிப் பார்ப்பார். அவர் உட்கார்ந்திருந்த அந்த அக்ரிலிக் சேர் என் ஆபீஸ்ல இருந்தது. அந்த ஸ்டில் விகடன்ல வந்த பிறகு, என் ஆபீஸுக்கு வர்ற ஒவ்வொருத்தரும், அந்த சேரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிச்சு, ஆசையாத் தொட்டுப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. என் ஆபீஸ்ல அடிக்கடி கார்பென்டரி வேலைகள் நடக்கும். அப்ப, 'டேய் மச்சி... இதுதான் தலைவர் உட்கார்ந்திருந்த சேர்... விகடன்ல வந்துச்சுல்ல’னு கார்பென் டர்கள் பேசினதைக் கேட் டப்ப அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு. பத்திரிகையில வந்தா ஆளுங்கதான் ரீச் ஆவாங்க. விகடன்ல வந்தா சேர்கூட ரீச் ஆகும்னு அன்னைக்குப் புரிஞ்சது!

'வேட்டையாடு விளையாடு’க்காக கமல் சாரை வெச்சு ஷூட். போட்டோக்களைப் பார்த்தாலே அந்தப் படத்தைப் பத்தி ஒரு ஐடியா வரும். விகடன்ல அந்தப் படம் பெரிய ப்ளோ-அப் வந்திருந்தது. அப்ப கமல் சார் கூப்பிட்டுப் பாராட்டி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அடுத்ததா, ஸ்ருதிஹாசனை பாவாடை தாவணியில் விகடனில் பார்த்துட்டும் என்னைக் கூப்பிட்டு வாழ்த்தினார்.

இப்படி விஜய், அஜீத், சூர்யா, விஷால்னு ஒவ்வொரு ஸ்டாரும் விகடன்ல வர்றப்ப, அவங்ககிட்ட இருந்து எனக்கு எக்ஸ்ட்ரா பாராட்டு கிடைக்கும். அதுக்காக விகடன் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு என் நன்றி!  

நானும் விகடனும்!

விகடன் என் அனுபவங்களையும் நிறையப் பகிர்ந்துட்டு இருக்கு. நிறையப் பேட்டிகளுக்கு இடையில், 'நான் வெங்கட்ராம் ஆனது எப்படி?’னு ஒரு பேட்டி. அதில் என் வாழ்க்கையையே திரும்பிப் பார்க்கிற ஒரு ஃபீல் கிடைச்சது. என் முதல் பேட்டிக்குக் குவிந்த போன் கால்களைவிட அந்தப் பேட்டிக்கு செம ரெஸ்பான்ஸ். எப்பவும் இதே டெம்போல இருக்கிறதுதான் விகடன் ஸ்பெஷல்!

விகடன்ல இப்போ எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கிற பகுதி 'பொக்கிஷம்’ பகுதியின் போட்டோ ஆல்பம். அப்போதையஆர்ட்டிஸ் டுகளின் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், லுக், பேக்ரவுண்டுனு ஒவ்வொரு மெட்டீரி யலையும் ஆழமா ஸ்டடி பண்ணுவேன்.

ஏன்னா, விகடன் எப்பவுமே இந்த சொஸைட்டியின் மாற்றங்களை ஸ்டடி பண்ணிட்டே வந்திருக்கு. அது எனக்கு அவ்வளவு உபயோகமா இருக்கு!''