Published:Updated:

மோகம் கொள்ளவைக்கும் மேக மலை !

கட்டுரை: சாஷா படங்கள்: ஏ.எம்.சுதாகர்

மோகம் கொள்ளவைக்கும் மேக மலை !

கட்டுரை: சாஷா படங்கள்: ஏ.எம்.சுதாகர்

Published:Updated:
##~##

நகரத்தில் வாழும் டென்ஷன் வாழ்க் கையை விடுத்து நிம்மதியாக விடு  முறையைக் கழிக்க விரும்புபவர்களுக்காகவே தேனி அருகே ஒரு தேவலோகம் காத்திருக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான அந்த மலைப் பகுதியின் பெயர்... மேக மலை. தேனி மாவட்டத்தில், சின்னமனூர் பேரூ ராட்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் வனம் அடர்ந்த மலைத் தொடரில் மேக மலை உள்ளது. மேக மலை என்ற பெயரில் உள்ள அழ குக்குச் சவால்விடும் வகையில் ஆபத்து நிறைந்த காட்டுப் பகுதி கொஞ்சம் அதிகமாகவே பயமுறுத்தவும் செய்யும்.

கரடுமுரடான மலைப் பாதையில் பஸ், கார், ஜீப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் 'திரில்’ பயணம் செல்லும்போது மலைப் பாதை நம்மைக் கொஞ்சம் மிரட்டும். இருபுறங்களிலும் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மரங்கள்பகலி லேயே இருட்டைப் படம் பிடித்துக் காட்டி, மனதில் பயம் கூட்டும். புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு எருமை என மனிதர்களை அச்சுறுத்தும் விலங்கினங்களுக்கு, மேக மலையில் குறைவு இல்லை. சில்லென வீசிடும் காற்றுடன், அடர்ந்த காட்டுக்குள் மிருகங்களின் நடமாட்டம் குறித்த சிந்தனையில், நம் விழிகள் நாலாபுறமும் நோட்டமிட, மலைப் பாதையை ஒருவிதஅச்சத் துடன்தான் கடக்க வேண்டியுள்ளது.

மோகம் கொள்ளவைக்கும் மேக மலை !

முல்லை, தாழம்பூ, தாமரை, சாமந்தி என  மலர்களின் பெயரை மலையில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கும்  சூட்டியி ருப்பது வித்தியாசம். மொத்தம் 4 ஆயிரத்து 500 அடி உயரம் உள்ள பிரமாண்டமான மலைத் தொடரை மேடு, பள்ளம் நிறைந்த, கரடு, முர டான சாலையில் இரண்டு மணி நேர பயணத் தில் கடக்க வேண்டியுள்ளது.  

மேக மலையில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் சுற்றுலாப் பயணிகளுக்காக

மோகம் கொள்ளவைக்கும் மேக மலை !

750 கட்டணத்தில் 'டபுள் பெட் ரூம்’ வாடகைக்குக் கிடைக்கிறது. அருகே மிக பிரமாண்டமான அணையின் மதில் சுவர்கள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன.

மோகம் கொள்ளவைக்கும் மேக மலை !
மோகம் கொள்ளவைக்கும் மேக மலை !

ஊருக்கு நடுவில்  செல்லும் ஆற்றுப் படுகை யின் கரையோரங்களில் இருந்து மலை உச்சி வரை தேயிலைத் தோட்டம் உயர்ந்து காணப் படுகிறது. ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகத் தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் சிறிய நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. பனியின் குளிர்ச்சியுடன் மூலிகை மனம் மாறாமல் கொட்டும் நீர்வீழ்ச்சி யில் குளிப்பது சுகமான அனுபவம்.

இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் வட்டப்பாறை என்ற அடர்ந்த வனப் பகுதி உள்ளது. தேயிலைத் தோட்டத்தின் அழகை ரசித்தபடி, காட்டுக்குள் ஊடுருவிச் சென்றால் வட்டப்பாறை கண்கள் முன்வந்து நிற்கிறது.

இந்த வட்டப்பாறைப் பகுதியில் இருந்து சிறிது தொலைவில்  யானைகளின் நடமாட்டத் துடன், காட்டு எருதுகளையும் காணலாம்.

மோகம் கொள்ளவைக்கும் மேக மலை !

ஹைவேவிஸ் பேரூராட்சியில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் தூவானம் அணைக்கட்டு உள்ளது. அருகிலேயே மணலார், மேல் மணலார், வெந்நியார், மகாராஜா மெட்டு, இரவங்கலார் போன்றப் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலைத் தோட்டம், மூணாறு, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சவால்விடும் வகையில் உள்ளது.

மேக மலையின் எழில் கொஞ்சும் பசுமையும், திக்... திக்... பயணமும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது. குறைந்த செலவில்  நிறைவானப் பயணத்தை மேற்கொள்ள  எல்லோ ருக்கும் ஏற்ற இடம் மேக மலை!