Published:Updated:

தீபாவளிக்கு ’எல்லைக் காவலன்...’ பொங்கலுக்கு ’மலை யோகி!’

தீபாவளிக்கு ’எல்லைக் காவலன்...’ பொங்கலுக்கு ’மலை யோகி!’

தீபாவளிக்கு ’எல்லைக் காவலன்...’ பொங்கலுக்கு ’மலை யோகி!’

தீபாவளிக்கு ’எல்லைக் காவலன்...’ பொங்கலுக்கு ’மலை யோகி!’

Published:Updated:

டுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்டார் நாமக்கல் எம்.ஜி.ஆர். கடந்த ஆண்டு 'இதயத்தில் ஒருவன்’ படத்தைக் கொடுத்து தமிழ் ரசிகனின் இதயங்களை பஞ்ச்சர் ஆக்கியவரின் அடுத்த படைப்பு 'எல்லைக் காவலன்’. லைம் லைட் போட்டோ ஷூட்டில் இருந்த நாமக்கல் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.

##~##

'' 'இதயத்தில் ஒருவன்’ படத்தைத் தமிழகம் முழுக்கவே ரிலீஸ் செஞ்சேன். அந்தச் சமயத்துல தி.மு.க. ஆட்சி என்பதால் என்னை அடக்கி ஒடுக்கப்பார்த்தார் கருணாநிதி. அதனால, படம் பெருசாப் போகல. சென்னையில படத்தை வெளியிட தியேட்டரும் கிடைக்கல. வேற வழி இல்லாம சைதாப்பேட்டையில மட்டும் ஒரு தியேட்டர்ல படம்  ரிலீஸ் ஆனது. ஆனாலும், மக்கள் படத்தைப் பார்த்துட்டு என்னைப் பாராட்டினாங்க. மக் களை நல்வழிப்படுத்த எடுத்த சேவை நோக்குப் படம் என்பதால்  லாபம் கிடைக்கல. ஆனா, படம் எடுக்க செலவான காசு கெடைச்சிடுச்சு. அதுவே பெரிய வெற்றிதானுங்க!'' - உற்சாகமாகப் பேசுகிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்.

''சரி, 'எல்லைக் காவலன்’ யார்?''

தீபாவளிக்கு ’எல்லைக் காவலன்...’ பொங்கலுக்கு ’மலை யோகி!’

''தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடும் கதை இது. படம் வருவதற்கு முன்பு கதை சொல்லக் கூடாது. இருந்தாலும் விகடன் என்பதால் சொல்றேன். விவசாய நிலத்தை எல்லாம் ஒரு கும்பல் ப்ளாட் போட்டு விக்குது. விவசாயம் படிச்சிட்டு இருக்கிற நான், அந்தக் கும்பலிடம் இருந்து விவசாய நிலத்தை மீட்கிறேன். அப்புறம் மக்களுக்கு விழிப்பு உணர்வு வர மெட்ரோ சிட்டி, நகரம், கிராமம், தெரு, சந்து பொந்து விடாம எல்லா இடத்திலும் விவசாயத்தின் நன்மை குறித்துப் பிரசாரம் செய்றேன். மவுன்ட் ரோட்டில் ரெண்டு பக்கமும் கரும்பும் வாழையும் விளையுது. நான்கு வழிச் சாலையின் நடுவே ரோடு டிவைடரிலும் நாத்து நடுறோம். இது படத்தோட ஒன் லைன் ஸ்டோரி.

இதுல ஆக்ஷன், லவ்னு அத்தனையும் இருக்கும். இந்தப் படத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கிறேன். 81 கிலோ எடை இருந்த நான் 21 கிலோ எடை குறைச்சு 60 கிலோ இருக்கேன். நெஞ்சு டைட் ஆகிடுச்சி. வயிறுதான் கொஞ்சம் அடம்பிடிக்குது.  கேஸ் டிரபிள் வேற. கூடிய சீக்கிரமே சிக்ஸ் பேக் வந்துடும். இந்தப் படம் முடிச்சதும் 'மலை யோகி’னு  ஒரு படம் ஆரம்பிக்கிறேன். கொல்லிமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் பயணம் செஞ்ச கதை. இதில் நான் சித்தராக நடிக்கிறேன். டபுள் ஆக்ட். இப்போ நடக்கிறது அம்மாவின் ஆட்சி. அதனால், இந்த நாமக்கல் எம்.ஜி.ஆரின் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்கிறதுல எந்தப் பிரச்னையும் இருக்காது.''

''சிக்ஸ் பேக் சீக்ரெட்?''

''காலையில ஒரு சப்பாத்தி. மதியம் கொஞ்சம் ஜூஸ். ராத்திரிக்குக் கேழ்வரகுக் களி. ஆறு மாசமா இதுதான் என் டயட். காலையிலும் மாலையிலும்  உடற்பயிற்சி. உடம்பையும் மனசையும் உற்சாகமா

தீபாவளிக்கு ’எல்லைக் காவலன்...’ பொங்கலுக்கு ’மலை யோகி!’

வெச்சிக்கிட்டு சாப் பாட்டைக் குறைச்சாலே போதும்... சிக்ஸ் பேக் என்னங்க... சிக்ஸ்டீன் பேக்கூட கொண்டுவந்துடலாம்.''

''சரி, 'எல்லைக் காவலன்’ படத்தின் கதாநாயகி யார்?''

''கேரளாவுல இருந்து ஒரு பொண்ணை நடிக்கக் கேட்டிருக்கோம். அந்தப் பொண்ணு  ரெண்டு லட்சம் சம்பளம் கேக்குது. திஸ் இஸ் டூ மச். 'இதயத்தில் ஒருவன்’ படத்துல அந்தமான் சோனியானு ஒரு பொண்ணு நடிச்சதுக்கு 50 ஆயிரம்தான் தந்தோம்.  வேற வழி இல்லைன்னா  அந்தப் பொண்ணைத்தான் நடிக்க வெக்கணும்.''

''நீங்க ஏன் த்ரிஷா, அமலா பால்னு ட்ரை பண்ணக் கூடாது?''

''என்ன சார், விளையாடுறீங்களா? அந்தப் பொண்ணுங்க எல்லாம் என்கூட நடிக்குமா..? புதுப் பொண்ணுங்களை நடிக்க வெக்கிறதுக்குள்ள நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். பட், என்னுடைய இந்த ரெண்டு படமும் வெளி வந்த பிறகு பாருங்க... த்ரிஷா, அமலா பால் எல்லாம் என் படத்துல நடிக்கப் போட்டி போடுவாங்க. 'எல்லைக் காவலன்’ல எனக்கு அம்மாவா நடிக்க மஞ்சுளா, லதா ரெண்டு பேர்கிட்டயும் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியோட பேரன் பிரதீப்தான் இந்தப் படத்துக்கு எடிட்டிங். 'எல்லைக் காவலன்’ தீபாவளிக்கும் 'மலை யோகி’ பொங்கலுக்கும் ரிலீஸ் பண்றோம்!''

தீபாவளிக்கு ’எல்லைக் காவலன்...’ பொங்கலுக்கு ’மலை யோகி!’

- கே.ராஜாதிருவேங்கடம்