Published:Updated:

”நூறு பேரில் ஒரு மாறினாலே போதும்!”

”நூறு பேரில் ஒரு மாறினாலே போதும்!”

”நூறு பேரில் ஒரு மாறினாலே போதும்!”

”நூறு பேரில் ஒரு மாறினாலே போதும்!”

Published:Updated:

மேட்டூர் அருகே கருமலைக்கூடலைச் சேர்ந்த வசந்தி, உழைக்கும் மக்களுக்கான பாடகி. பணத்துக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பாடாமல் சாதி, மத, வர்க்க பேதங்களுக்கு எதிராக சி.பி.எம். கட்சியின் கொள்கை விளக்கப் பாடகர்களான கரிசல் கிருஷ்ணமூர்த்தி, கரிசல் கருணாநிதி போன்றவர்களின் வரிசையில்  பாடும் பெண்மணி.

##~##

நிகழ்ச்சி ஒன்றில் தோழர் வசந்தியைச் சந்தித்துப் பேசினேன். ''நான் சின்ன வயசுலயே நல்லாப் பாடுவேன். காரணம், எங்க அப்பாவின் குரல் வளம். அவர் மேடைப் பாடகர் இல்ல. ஆனா, விவசாய வேலை பாக்குறபோதும் வீட்டுல சும்மா இருக்கிறப்பவும் ஏதாவது பாடிக்கிட்டேதான் இருப்பார். அந்தப் பழக்கம் என்னையும் தொத்திக்கிச்சு.

முதன்முதல்ல எங்க பள்ளி ஆண்டு விழாவில் பாடினேன். அந்தப் பாடலைக் கேட்ட பக்கத்து ஊரைச் சேர்ந்த காவேரிதுரை என்பவர் என்னை ரொம்பப் பாராட்டி, சேலத்துல உள்ள கீ-போர்டு பிளேயரான ராமசாமி என்பவரிடம் அறிமுகம் செய்துவைத்தார். ராமசாமி இடதுசாரிக் கொள்கையில் ஈடுபாடு உடையவர். என்னைச் சந்திக்கும்போது எல்லாம் கம்யூனிஸ்ட் சித்தாந் தங்களைப் பற்றிப் பேசுவார். மாவோ, சே குவேரானு எனக்கு இன்னொரு உலகத்தை அறிமுகப் படுத்தினது அவர்தான்.

சில நாட்களில் அவருடைய சிந்தனைகளினால் ஈர்க்கப்பட்டேன். சாதி மறுப்புத் திருமணமே அவரின் வாழ்வியல் குறிக்கோளாக இருந்தது.  அதனால், திருமணம் செய்துகொள்வதில்

”நூறு பேரில் ஒரு மாறினாலே போதும்!”

இருவரும் உறுதியாக இருந்துகொண்டு ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கினோம்.  

அவர் பிறப்பால் வன்னியர். நான் ஆதி திராவிடர். எங்கள் திருமணத்துக்கு இரண்டு பேர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. எங்க கிராமம் வன்னியர் ஆதிக்கம் நிறைந்த கிராமம். அதனால், எங்கள் திருமணம் சாதிக் கலவரத்தை உருவாக்கி விடுமோனு பயந்த என் குடும்பத்தினர், என்னை மும்பையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இருவரும் பிரிந்து இருந்தாலும், சிந்தனையால் ஒன்றுபட்டே இருந்தோம். எனக்காகக் காத்திருந்த அவரை ஒரு ஆண்டு கழித்துக்  கரம்பிடித்தேன்.

அவர் பெற்றோர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், என் கணவரின் தம்பியும் அக்காவும் எனக்கு  ஆதரவாவே இருந்தாங்க. திருமணத்துக்குப் பிறகு, அவர் என்னை கர்னாடக சங்கீதத்துல டிப்ளமோ படிக்கவைத்தார். பகல் நேரத்தில் அவருடன் கம்யூனிஸ்ட் தெருமுனைப் பிரசார நாடகங் களில் பாடி நடிப்பேன். இரவு நேரத்தில் குடும்ப வருமானத்துக்காக ஆர்கெஸ்ட்ராவில் சினிமா பாடல்களைப் பாடுவேன். ஒரு சமயத்தில் பெண்களை இழிவுபடுத்துவதாக சினிமா பாடல்கள் வருவதை எண்ணி வெறுப்படைந்து, சினிமா பாடல்களைப் பாடுவது இல்லை என்று முடிவெடுத்தேன்.

அதன் பிறகு, மாங்குயில் கலைக் குழு ஆரம் பித்தோம். அதன் மூலம் இன்றைய சூழலில் அரசின் பொறுப்பற்ற செயல்பாடுகளையும் அதனால் ஏற்படும் மக்கள் பிரச்னைகளையும் பாடல்களாக எழுதிப் பாடிவருகிறோம். செய்ய வேண்டிய ஆக்கப் பணிகள் எவ்வளவோ இருக்க... இந்த அரசோ பெண்களுக்கு இலவசங்களையும் ஆண்களுக்கு மது என்னும் விஷத்தையும் கொடுத்து மக்களைச் சிந்திக்கவிடாமல் தடுத்துவருகிறது. இவற்றைக்  கிராமங்கள்தோறும் பாடல்களாக இயற்றிப் பாடிவருகிறோம். எங்கள் பாடல்களைக் கேட்பவர்களில் நூறு பேரில் ஒருவர் மனம் மாறினாலே போதும். அதுவே எங்களுக்கு வெற்றிதான்.

நாங்கள் இருவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருவரும் மேட்டூர் ஒன்றிய இடைக் குழு உறுப்பினராகவும் இருக்கிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள். பெரியவன் முகில் வசந்தன், டிப்ளமோ படிக்கிறான். இளையவன் முகுந்தன், 7-ம் வகுப்பு படிக்கிறான். எங்கள் உயிர் உள்ளவரை சமத்துவம் மற்றும்  சமூகத்துக்காக மட்டுமே எங்கள் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும்!''  

”நூறு பேரில் ஒரு மாறினாலே போதும்!”

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்