Published:Updated:

''கரன்ட் இல்லையா... கவலை இல்லை!''

''கரன்ட் இல்லையா... கவலை இல்லை!''

''கரன்ட் இல்லையா... கவலை இல்லை!''

''கரன்ட் இல்லையா... கவலை இல்லை!''

Published:Updated:
##~##

'இன்றைய மின்வெட்டுக் காலகட்டத்தில் 'கரன்ட் வந்தா வேலைசெய்வோம். இல்லைனா சும்மா இருப்போம்’ என்று சோர்ந்து போகாமல் மாற்று வழித் தேடிக் களத்தில் இறங்கி இருக்கிறார் காஞ்சிபுரம் மதுராந்தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன்.                                          'அவர் எப்போதும் மின் மோட்டார்களைக்கொண்டு சுவிட்ச் போர்டுகளைத் தயாரிப்பார். ஆனால், இப்போது மேனுவலாக ஒரு கட்டிங் மெஷினை உருவாக்கி இருக்கிறார்.’ - இது காஞ்சி வாசகர் விநாயகமூர்த்தி வாய்ஸ் ஸ்நாப்பில் நமக்குத் தந்த தகவல்.

 கோவிந்தராஜனைச் சந்தித்தேன். ''பெரிய படிப்பறிவு எல்லாம் கிடையாதுங்க. பட்டறிவுதான். நாம இயங்குறதுக்கு எப்படி புவிஈர்ப்பு சக்தி ஒரு மையப்புள்ளியா இருக்கோ, இயந்திரங்களும் அதுபோல ஒரு சக்தியாலதான் இயங்குது. அதுக்கான ஒரு புள்ளியில் இருந்துதான் அந்த சக்திக் கிடைக்கும். இதை சரியாப் புரிஞ்சுக்கிட்டா எந்த இயந்திரத்தையும் ஈஸியா மேனுவலா செஞ்சுடலாம்.

''கரன்ட் இல்லையா... கவலை இல்லை!''

தொடர்ந்து மின்வெட்டு இருக்கிறதால இப்பத் தொழிலே செய்ய முடியாத நிலைமை. ஆர்டர் தந்தவங்க சரியான நேரத்துக்குப் பொருள் கிடைக்கலைனு முகம் சுளிக்க ஆரம்பிச்சாங்க. ஆர்டர்களும் குறைய ஆரம்பிச்சது. என்ன பண்றதுனு யோசிச்சப்பதான் கரன்ட் இல்லாம மேனுவலா இயங்குற மாதிரி நாமளே ஏன் ஒரு இயந்திரத்தைத் தயாரிக்கக்கூடாதுன்னுத் தோணுச்சு. போர்டை சைஸ் வாரியா கட் பண்ற ஜிக்ஸாக் மெஷின், துளை போடுற டிரில்லர்தான் எங்கத் தொழில்ல அவசியமானப் பொருள்கள். இந்த ரெண்டுலயும் மின் மோட்டார் உதவி இல்லாம கையால் செயல்படுற மாதிரி உருவாக்கினேன். ஒவ்வொரு மோட்டாருக்கும் ஒரு பவர் உண்டு. அந்த பவரைக்கொண்டுவந்துட்டா மின்சார மோட்டாருக்கு இணையா அது வேலை செய்யும். உதாரணமா ஜிக்ஸாக் மெஷின் இயங்க  1,420 ஆர்.பி.எம். பவர் தேவை. இயந்திரங்களோட சக்கரங்கள் நிமிஷத்துக்கு எத்தனை சுற்றுகள் வரும் என் பதைப் பொறுத்து இந்தப் பவர் கிடைக்கும்.  பெரிய சைக்கிளின் பின்பக்க வீல் ஒண்ணு, சின்னது ஒண்ணு, சைக்கிள் செயின், சிறிய, பெரிய பல்சக்கரம், மோட்டாருக்கும் வீலுக்கும் தோதா மாட்டத் தோல் பெல்ட். இதைச் சரியா செட் செஞ்சு, பெடலைச் சுத்துனா மெஷின் ஓட ஆரம்பிச்சிரும். இப்படித்தான் டிரில்லர் மெஷினை தயாரிச்சேன். இப்ப ஊரே, கரன்ட் இல்லைனு சும்மா இருந்தாலும், என் கடையில மட்டும் பர பரப்பா வேலை கள் நடந்துட்டு இருக்கு. இன்னும் ஏகப்பட்ட ஐடியாக்கள் இருக்கு. நேரம் கிடைக்கும் போது ஒண்ணு ஒண்ணாக் கொண்டுவருவேன்'' என்று சிரிக்கும் கோவிந்தசாமியின் கண்களில் அவ்வளவு தன்னம்பிக்கை!

- எஸ்.கிருபாகரன்

படம்: வீ.ஆனந்தஜோதி