Published:Updated:

''சுனாமி செய்யாததை நான் செய்வேன்!''

''சுனாமி செய்யாததை நான் செய்வேன்!''

''சுனாமி செய்யாததை நான் செய்வேன்!''

''சுனாமி செய்யாததை நான் செய்வேன்!''

Published:Updated:
''சுனாமி செய்யாததை நான் செய்வேன்!''
##~##

''2004-ம் வருஷம் டிசம்பர் மாசம் 26-ம் தேதி... தமிழ்நாட்டுக்குக் கறுப்பு நாள். அரக் கத்தனமான சுனாமி வந்து பல பேரோட உயிரையும்  உடமைகளையும் எடுத்துக்கிட்டுப்போச்சு. பல வீடுகளைத் தரைமட்டமாக்குச்சு. என் னைய மாதிரி நிறையப் பேரை புலம்ப வெச்சிருச்சு!'' - சுனாமி தாக்கிய நாளின் பயம், அதிர்ச்சியை இப்போ தும் கண்களில் தேக்கிவைத்துப் பேசு கிறார் சண்முகவேலு. இவரை ஊர் மக்கள் 'சுனாமி’ என்றே அழைக் கிறார்கள். சென்னை ஈ.சி.ஆர். சாலையை ஒட்டி உள்ள கானாத்தூர் என்ற கிராமத்தில் வாழ்ந்துவரும் இவரை, நீலாங்கரையைச் சேர்ந்த விகடன் வாசகர் எஸ்.முருகேசன் வாய்ஸ் ஸ்நாப்பில் அறிமுகம் செய்து இருந்தார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''திருநெல்வேலி பக்கம் சங்கரன்கோவிலுக்கு அடுத்த செவல்குளம்தான் என் ஊர். நான் பொறந்த ரெண்டாவது வருஷமே என்னைப் பெத்தவங்க சண்டை போட்டுக்கிட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. போக்கிடம் இல்லாம ஏதோ ஒரு ரயில்ல ஏறி உட்கார்ந் தேன். அது என்னைச்

''சுனாமி செய்யாததை நான் செய்வேன்!''

சென்னையில கொண்டுவந்து விட்டுருச்சு. போலீஸ்காரங்க என்னை அநாதை ஆசிரமத் தில் சேர்த்துவிட்டுட்டாங்க. எட்டா வது வரைக்கும் படிச்சேன். அப்ப எங்க ஹாஸ்டலுக்கு, முன்னாள்ஜனாதி பதி வி.வி.கிரி வந்தாரு. ஹாஸ்டல்ல நான் நல்ல பேர் எடுத்ததால எனக்கு சர்டிஃபிகேட் கொடுத்துட்டுப்போனாரு. அதைவெச்சு ஐ.டி.ஐ.ல சேர்ந்தேன். அப்புறம், கோயம்புத்தூர்ல கொஞ்ச நாள் வேலை. ஸ்டிரைக் நடந்ததால வேலை போச்சு. திரும்ப ஊருக்குப் போயிட்டேன்.

கல்யாணம், குழந்தைகள்னு ஆகிடுச்சு. வேலை தேடிச் சென்னைக்கு வந்தேன். இங்கவந்தப்ப எனக்கு யாரையும் தெரியாது. பக்கத்துல இருக் குற குப்பத்துல வேலை கேட்டேன். என் கதையைக் கேட்டுட்டு மீன் புடிக்கக் கூப்பிட்டுப் போனாங்க. அந்த வேலையில ஒரு நாளைக்கு 200 ரூவா கிடைச்சுது. சரி, வேற வேலை கிடைக்கிற வரை இதையே பார்ப் போம்னு செஞ்சேன். மீனவக் குப்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்குக் கரையில கூரை போட் டுக் கொடுத்து தங்கிக்கச் சொன்னாங்க. ஞாயித் துக் கிழமை சாயந்திரம் ஊருக்குப் போய் பொஞ்சாதியையும் புள்ளைங்களையும் கூட் டிட்டு வரலாம்னு நினைச்சேன். ஆனா, விதி வேற மாதிரி இருந்துச்சு. ஞாயித்துக் கிழமை காலைல சுனாமி வந்துருச்சு.

அப்ப குடிசைக்கு வெளியே இருந்தேன்.   எல்லோரும் 'கடல் பொங்கி வருது’னு கத்திக் கிட்டு ஓடுறாங்க. குடிசையில இருக்குற பெட்டி யைத் தூக்கிட்டு ஓடிரலாம்னு நினைச்சேன். ஏன்னா, அதுலதான் என் சர்டிஃபிகேட்டு, டிரைவிங் லைசன்ஸு, புள்ளைங்களோட பிறப்பு, சாதிச் சான்றிதழ்னு எல்லாம் இருந்துச்சு. அந்தப் பெட்டியைத் தூக்கிட்டு வெளியே வர் றேன். பெரிய அலை என்னைத் தூக்கிடுச்சு. அந்தரத்துல இருக்கேன். பெட்டி கை நழுவிடுச்சு. அவ்ளோதான் தெரியும். அலை தூக்கி என்னை கீழே போட்ட வேகத்துல மணலுக்கு உள்ள நாலு அடி ஆழத்துல நின்ன வாக்குல புதைஞ்சிட் டேன். தண்ணியை குடிச்சதுல மணல், சிப்பி, கல்லுன்னு ஆறு கிலோ பொருட்கள் வயித்துக் குள்ள போயிருச்சு. ரெண்டு நாள் கழிச்சுதான் என்னைக் காப்பாத்துனாங்க. ஜி.ஹெச்ல  ஒரு மாசம் கோமாவுல இருந்திருக்கேன். வயிறு, ரத் தம்னு எல்லாத்தையும் சுத்தம் பண்ணாங்க. ஒரு மாசத்துக்கு அப்புறம் டி.வி-யில பார்த்துத்தான் நான் உயிரோட இருக்குறதே என் குடும்பத்துக்குத் தெரிஞ்சிருக்கு.  

இயற்கைப் பேரிடர்ல பாதிக்கப்பட்டவங்க, அந்த இடத்திலேயே இருந்தாத்தான் உடம்பு சரியாகுமாம். அதனால எட்டு வருஷமா இங்க தான் இருக்கேன். குடல்ல ஓட்டை விழுந்திருச்சு. அதனால அதிகமா பசி எடுக்கறது இல்லை. வெறும் நீராகாரம்தான் சாப்பாடு. மணல்ல இருந்து என்னை எடுக்குறப்போ எசகு பிசகா தூக்கிட்டாங்க. அதனால கை, கால் மூட்டு, முதுகுத்தண்டுன்னு பல இடங்கள்ல இன்னைக் கும் வலி உயிர் போகும்.  

என்னால குடும்பத்தைப் பார்த்துக்க முடி யலை. அதனால ஊர்லயே சொந்தக்காரங்ககிட்ட விட்டுட்டு வந்துட்டேன். என் நிலைமையைப் பார்த்து அரசாங்கம் செஞ்ச எந்த உதவியும் என் கைக்கு வரல. சுனாமியில பாதிக்கப்பட்ட எனக்குக் காஞ்சிபுரம் பக்கத்துல வீடு கட்ட இடம் ஒதுக்கி இருக்காங்க. ஆனா, அதை சர்வே பண்ணக்கூட இன்னும் யாரும் வரலை. எனக்குச் சேர வேண்டிய 25,000 ரூபாய் நிதி உதவியும் கிடைக்கலை.

எனக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். அதுல கடைசிப் பொண்ணு ஊனமாப் பொறந் துருச்சு. ரொம்ப ஜாக்கிரதையா வளர்க்கணும்னு சொல்லி இருக்காங்க. என் பொஞ்சாதி முடிஞ்ச அளவு பார்த்துக்குறா. முதல் ரெண்டு பொண்ணுங்களும் படிக்க ஆசைப்படுறாங்க. படிக்கவைக்கத்தான் வசதி இல்லை.

ஒரு நாளைக்குப் பதினஞ்சு மாத்திரைங்க சாப்பிட வேண்டி இருக்கு. என்னைய விடுங்க. எனக்கு எந்த உதவியும் செய்யாட்டாக்கூடப் பரவாயில்லை. என் பொண்ணுங்கள நல்லா படிக்க வெச்சிட்டாப் போதும்ங்க'' என்றவர், லேசான விசும்பலுடன் ''தம்பி, இப்பவே பார்த்துக்கிடுங்க... இப்பகூட முதலமைச்சர் பிரிவுல மனு கொடுத்துட்டுதான் வந்துருக்கேன். உதவி எதுவும் கிடைக்கலைனா தற்கொலை தான். சுனாமியால செய்ய முடியாததை நான் செஞ்சிருவேன்'' என்கிறார். அருகிலேயே சீறிப் பாய்கிறது அலை!

- கட்டுரை, படம்:

ந.வினோத்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism