Published:Updated:

''நாங்க முகநூலர்கள்!''

''நாங்க முகநூலர்கள்!''

''நாங்க முகநூலர்கள்!''

''நாங்க முகநூலர்கள்!''

Published:Updated:
''நாங்க முகநூலர்கள்!''
##~##

'நம்ம ஆட்கள் அன்னம், தண்ணி, இல்லாமக்கூட இருப்பாங்க. ஆனால், ஒருநாள்கூட இந்த ஃபேஸ்புக் பக்கம் எட்டிப் பார்க்காம இருக்கவே மாட்டாங்க’ என்றார் நண்பர் ஒருவர். அப்படி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களான 100-க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் தி.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் இருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் சந்திச்சுக்கிட்டா அது ஜஸ்ட் மீட்டிங். ஆனால், இந்த மாதிரி ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் சந்திச்சிக்கிறது ஃபெஸ்டிவல். தமிழ்நாட்ல இந்த மாதிரி இதுக்கு முன்ன நடந்திருக்கானு தெரியலை. அந்த வகையில் இந்தச் சந்திப்பு ரொம்பவே ஸ்பெஷல்'' என்கிறார் இந்தச் சந்திப்புக்குக் காரணமான சென்னையைச் சேர்ந்த ரஞ்சித். ''இங்க நடக்கிறது கனவு மாதிரி இருக்கு. இப்படி ஒரு சந்திப்பு நடந்தா எப்படி இருக்கும்னு சாட் பண்ணிட்டு இருந்தப்ப, 'அவனவன் பொண்டாட்டிப் புள்ளைங்கக் கூடவே செல்போன்லதான் பேசிட்டு இருக்கானுங்க. நாம நேர்ல மீட் பண்றது எல்லாம் சாத்தியமே இல்லை’னு நெகட்டிவ் கமென்டுகள்தான் வந்துச்சு. ஆனால், அதையும் மீறி இந்தச் சந்திப்பு சாத்தியமாகியிருக்கு'' என்கிற ரஞ்சித் தைத் தொடர்ந்தார் சின்னத்திரை நடிகர் ராஜ்கமல்.  

''நாங்க முகநூலர்கள்!''

''முதல்முறையா இப்பதான் எல்லாரும் நேர்ல மீட் பண்றோம். சென்னை மட்டும் இல்லாம ஈரோடு, நாமக்கல், தூத்துக்குடினு பல மாவட்டங்கள்ல இருந்தும் நண்பர்கள் வந்திருக் காங்க. ஓரு நண்பர் இந்த நிகழ்ச்சிக்காக  சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கிறார். சாதாரணமா ஒரு ஸ்டேட்டஸ் போட்டாலே எக்கச்சக்கமா கலாய்ச்சி காலி பண்றவங்க, நேர்ல சந்திச்சிக் கிட்டா காமெடிக்கு கேக்கணுமா என்ன? இந்தச் சந்திப்பு பல நாட்கள் மனசுலேயே இருக்கும்'' என்றார்.

''நாங்க முகநூலர்கள்!''

அவர் சொன்னது போலவே நிகழ்ச்சியில் கலகலப்புக்குப் பஞ்சமே இல்லை. மிமிக்ரி, டான்ஸ் என்று தொடக்கம் முதல் முடியும் வரை நிகழ்ச்சி களைகட்டியது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் விக்ரமன், திரைப்பட புகைப்படக் கலைஞர் 'ஸ்டில்ஸ்’ ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். ''சிறப்பு விருந்தினர்கள்னுதான் கூப்பிட்டாங்க. ஆனால், நாங்களும் இவங்களோட ஃபேஸ்புக் நண்பர்கள்தான். ஃபேஸ்புக்னாலே வெட்டி அரட்டை மட்டும்தான்னு சிலர் நினைக்கலாம். அது, எவ்வளவு பெரிய வெளியைத் திறந்துவிட்டிருக்குனு நினைக்கும்போது ஆச்சர்யமாத்தான் இருக்கு. இப்போதான் எல்லாரும் மத்தவங்களை முதல்முறையா நேர்ல பார்க்கிறாங்க. ஆனா, உடனே ஒண்ணாசேர்ந்து டான்ஸ் ஆடி கலகலப்பா இருக்காங்க. பார்க்கவே ஆச்சர்யமாவும் இருக்கு. இது இளைய தலைமுறை, டெக்னாலஜி இரண்டின் வெற்றி'' என்றார் இயக்குநர் விக்ரமன். நிகழ்ச்சியின் முடிவில் ஃபேஸ்புக் என்று எழுதப்பட்டு இருந்த கேக் வெட்டப்பட்டு பரிமாறப்பட்டது. ''இந்தச் சந்திப்புகள் தொடரும். இதன் மூலமா நல்ல விஷயங்கள் நிறைய நடத்துறத் திட்டமும் இருக்கு'' என்று கைகொடுத்து வழியனுப்பினார் ரஞ்சித்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

''நாங்க முகநூலர்கள்!''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism