Published:Updated:

''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''

''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''

''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''

''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''

Published:Updated:
''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''
''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''
''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புதுவை நகருக்கு மேற்கே நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊர் உழந்தை கீரைப்பாளையம். ஒரு காலத்தில் டச்சுக்காரர்களின் கோட்டையாக விளங்கிய இடம். பிரெஞ்சுக்காரர்கள் இவர்களை 'ஒலந்தீஸ்’ என்றே அழைத்தனர். இந்த 'ஓலந்தீஸ்’ என்ற சொல்தான் 'உழந்தை’யாக மருவிப்போனது'' என்று ஊரின் பெயர்க் காரணம் சொல்லி ஆரம்பித்தார் மொழிபெயர்ப்பாளர் ராஜ்ஜா.

'' 'வீட்டுக்கு முன்னே ஒரு முருங்கை மரம்; பின்னே ஒரு பசு மாடு இருந்தால் போதும், பசி பறந்துபோகும்’ என்பார்களே. இந்த ஊரைப் பொறுத்த வரை அது முற்றிலும் உண்மை. இன்றும்கூட வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் இங்கே இருப்பதைப் பார்க்கலாம். மின்சாரத் துறையும், தொலைபேசித் துறையும், குடிநீர் வாரியத்தோடு கைகோர்த்துக் கொண்டு மண்ணைத் தோண்டித் தோண்டி ஒவ்வொரு மரமாக அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

கீரைக்குக் குறைச்சல் இல்லாத ஊர். பாளையம் என்பது கிராமம். இதுதான் உழந்தை கீரைப்பாளைத்தின் பெயர்க் காரணம்.

''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''
##~##
உழந்தை கீரைப்பாளையம் என்பது புவேன்கரே வீதியின் ஒரு பகுதியும் அந்த வீதியில் இருந்து பிரிந்து செல்லும் அய்யனார் கோயில் சந்தும் சேர்ந்ததுதான். பிரெஞ்சு பிரதிநிதித் தலைவர் களில் ஒருவர்தான் இந்த புவேன்கரேஎன்ப வர். இந்தத் தெரு வில்லியனூர் செல்லும் பாதையில் இருந்து தெற்கு நோக்கிப் பிரிந்து செல்கிறது. நெல்லித்தோப்பில் துவங்கி காராமணிக்குப்பம், உழந்தை கீரைப்பாளையம் என்று மரப்பாலம் வரை செல்கிறது இந்த நீண்ட வீதி.

உழந்தை கீரைப்பாளையம் பகுதியில் சிறியதும் பெரியதுமாகப் பல கோயில்கள் இருந்தாலும், பிரசித்தி பெற்ற கோயில்கள் என்று இரண்டைக் கூறலாம். கெங்கை முத்து மாரியம்மன் கோயில் புவேன்கரே வீதியிலும் அய்யனார் கோயில் அதன் பெயர் கொண்ட சந்திலும் உள்ளன.

''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''

புதுச்சேரி என்ற புள்ளியின் மீது கலாசாரப் படையெடுப்புகள் பல நிகழ்ந்து இருந்தாலும் இந்த மண் ஆன்மிக பூமியாகவே இருப்பதற்கு இங்கு உள்ள  கோயில்களே காரணம். இது சித்தர்கள் வாழ்ந்த பூமியும் கூட.

கோயில் இல்லாத தெருவே புதுவையில் கிடை யாது என்றால், அது மிகையாகாது. புதுவையின் மற்ற சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரங்கட்டி விடுவதுபோல் எங்கள் அய்யனார் கோயில் உள்ளது.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் ஏரி, வயல்வெளி, கண்மாய் எல்லாம் இருந்தன. அந்த நாட்கள் எல்லாம் மீன் பிடித்து மகிழ்ந்த காலம்; எலி, ஓணான் பிடித்து விளையாடிய காலம்; புவேன்கரே வீதியில் மண் புழுதியில் ஓடி ஆடிய காலம்;  மழைக் காலத்தில் தெருவில் காகிதக் கப்பல்விட்ட காலம் என்று  வசந்த காலமாகவே என்னுடைய பால்ய வயதின் காலங்களும் இருந்தன.

''இது சித்தர்கள் வாழ்ந்த பூமி!''

நான் இன்புற்று விளையாடிய காலத்தில் எனக்குக் கிடைத்தவை எதுவும் என் பிள்ளைகளுக்கோ என் பேரப் பிள்ளைகளுக்கோ கிடைக்காமலே போய்விட்டது இன்றைய உழந்தை கீரைப்பாளையத் தில்.

என்னைப் போன்றோர் இருக்கும்வரை எங்கள் ஊர் எங்கள் நினைவில் வாழும். பின்னர் சரித்திரம்தான் பேச வேண்டும்!''

படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism