Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:
வலையோசை


பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பேராசிரியர் வினோத் கௌதம், 'ஜூலை காற்றில்’ (http://julykaatril.blogspot.in/) என்ற வலைப்பூவில் பலதரப்பட்ட விஷயங்கள் எழுதிவருகிறார். இவருடைய வலைப்பூவில் இருந்து...

நித்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலையோசை

பொதுவாகவே, நமக்கு ஒழுக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து மீறித் தப்பு செய்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால், சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக அடக்கியே வாசிப்போம். அதையும் மீறி யாராவது தப்பு செய்தால் அதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவோம். (கிட்டத்தட்ட தினசரியில் 'கள்ளக் காதலை’ப் பற்றிப் படிக்கும் விஷயத்தில் இருக்கும் ஆர்வம்!). அதுவும் 'சாமியார்’ என்கின்ற பட்சத்தில் அவருக்கு நாம் வகுத்திருக்கும் ஒழுக்க விதிமுறைகள் இன்னும் அதிகம். சாமியாரே, இந்த 'விதிகளை’ மீறுகின்றபோது, நாம  எல்லாம் ஒரு 'மேட்டரே’ இல்லை என்கிற அல்ப சந்தோஷம் நமக்கு!

வயசு மாறும்போது...

வலையோசை
##~##
15
வயசுல...

'டேய் இது அவுட் இல்லைடா. சொன்னா கேக்கமாட்டிங்கள்ல. 96 நாட் அவுட். செஞ்சுரி அடிச்சபிறகு நானே பேட்டை வெச்சிட்டுப் போயிடறேன்டா. சின்னப் பசங்க கூட இதுக்கு தான் விளையாடக்கூடாது!' - நான்.

'இதான் லாஸ்ட் சான்ஸ். இதுக்கப்புறம் பேட்டைக் கொடுக்கலை, நாளையிலேர்ந்து தயவுசெஞ்சு எங்ககூட விளையாட வராதே. போய் உன் வயசுப் பசங்களோட விளையாடு, போ!'

-என் தம்பி.

'டேய் உங்க அண்ணன் சரியா ஓசிக் காச்சி அடிக்கறான்டா. ஆறு தடவை அவுட்டாகி செஞ்சுரி போடுறான். அவனுக்குக் கொஞ்சம்கூட வெட்கமே இருக்காதா?'- என் தம்பியின் நண்பன்.

இதை எல்லாம் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் 'செஞ்சுரியை’ நோக்கி வேகமாகப் பயணப்பட்டுக்கொண்டு இருப்பேன்.

வலையோசை

17 வயசுல...

'டேய்... உன் கிளாஸ்ல இருக்குற ஃபிகர்ங்க பேரெல்லாம் சொல்லு!' - சீனியர்.

'அண்ணே... அது எப்படிண்ணே... நான் போய்...எல்லாம் சிஸ்டர் மாதிரிண்ணே!'

'டேய் மச்சான்... ஃபிகர்ங்க பேரைச் சொல்றவனைக்கூட நம்பிடலாம். இது மாதிரிப் பசங்க சரியான மொள்ளமாரியா இருப்பானுங்க. இவனை விடாத!' - இன்னொரு சீனியர்.

'டேய் சொன்னா இந்த இடத்தைவிட்டுப் போகலாம். இல்லை, சாயங்காலம் வரைக்கும் இங்கதான் நிக்கணும். என்ன சொல்றே?'- சீனியர் .

'அது ஒரு ஆறு, ஏழு பேரு இருக்காங்க. கவிதா, ப்ரியா, அப்புறம் ஜெயந்தி.''

'என்னமோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அக்கா தங்கச்சினு டயலாக் எல்லாம் விட்டே... இனிமே உன்னை இந்த ஏரியாவிலேயே பார்க்கக் கூடாது. ஓடிப் போடா..' -சீனியர்.

இதற்குப் பெயர் மனிதம்!

வலையோசை

சென்னை ஆதம்பாக்கத்தில் படித்துக்கொண்டு இருந்த சமயம். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நங்கநல்லூர் செல்வதற்கு முன்பு அருகில் இருந்த கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். சற்றே வயதான ஆணும் பெண்ணும் அங்கே நின்றுகொண்டு இருந்த அனைவரிடமும் 'நாங்க வெளியூர். காசைத் தொலைத்துவிட்டோம். ஏதாச்சும் சாப்பிடணும். காசு இருந்தால் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டு இருந்தனர்.

என்னையும் சேர்த்து யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்தப் பக்கம் வந்த ஒரு பெண்மணி அவர்களைப் பார்த்து ''காசு எல்லாம் கொடுக்க மாட்டேன். வேண்டுமென்றால், நானே சாப்பாடு வாங்கித் தருகிறேன்'' என்று பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கித்தந்தார்.

அதன் பிறகு அந்த வயதான ஆளைப் பார்த்து 'இப்படி ஒரு வயதான பொம்பளையையும் உடன் வைத்துக்கொண்டு போறவங்க வர்றவங்ககிட்ட காசு கேக்கிறீங்க. நீங்க சொன்னதை உண்மைனு நம்பிதான் உங்களுக்குச் சாப்பாடு வாங்கித்தந்து இருக்கேன். இதுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் நான் இப்படிப் பார்க்கக் கூடாது'' என்று சொன்னவர், அவர்கள் கையில் ஊருக்குப் போவதற்குக் கொஞ்சம் காசும் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் என் கண்ணில் இருந்து மறையும் வரை அவரைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism