Published:Updated:

டூரில் சொதப்பியது எப்படி?

டூரில் சொதப்பியது எப்படி?

டூரில் சொதப்பியது எப்படி?

டூரில் சொதப்பியது எப்படி?

Published:Updated:
டூரில் சொதப்பியது எப்படி?

''கோடை காலச் சுற்றுலா சென்று இருப்பீர்கள். அப்போது சொதப்பிய அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது...

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரவி,
முதன்மை நூலகர், வேலூர்:
''20 வருஷங்களுக்கு முன்னால பெங்களூருக்கு ஃபேமிலி டூர் போனதை என்னால இப்பவும் மறக்க முடியாது. மூணு நாள் டூர் முடிச்சிட்டு, பஸ்ஸுல ஏறி உட்கார்ந்தா எல்லாரும் புதுமுகங்களா இருக்காங்க. ஒரே குழப்பம். அரை மணி நேரத்துக்கு அப்புறம்தான் பஸ் மாறி ஏறினதைக் கண்டுபிடிச்சு கீழே இறங்குனேன். அப்புறம் வந்த பஸ்ஸைக் கண்டுபிடிக்குறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு!''

பவானி, கல்லூரி மாணவி, வேலூர்: ''ஒருமுறை காலேஜ் டூர் போயிருந்தப்ப எங்களுக்குப் பிடிக்காத மேடத்தோட ரூம்ல இருந்த ஏ.சி. மெஷினை ரிப்பேர் பண்ணிட்டோம். யதேச்சையா அவங்க எங்களை அந்த ரூமுக்கு மாத்திட்டாங்க. செஞ்ச தப்புக்கு பலனா நைட் முழுதும் தூங்காம கொசுக்கடியில நானும் என் ஃப்ரெண்ட்டும் அவஸ்தைப்பட்டோம் பாருங்க!''

நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர், வேலூர்: ''குடும்பத்தோட போன மாசம் டெல்லிக்குப் போயிருந்தேன். ஆட்டோ டிரைவருக்கு தமிழ் தெரியாதுனு நினைச்சு இங்கிலீஷ்ல பேசிக்கிட்டே வந்தேன். அவரும் அரைகுறை இங்கிலீஷ்ல பேசிட்டே வந்தார். ஒருகட்டத்தில மறந்துபோய் தமிழில் பேச ஆரம்பிச்சேன். 'சார், நீங்க தமிழா? நான் மதுரைக்காரன்’னு சொல்லி சிரிச்சார். ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமோன்னு சங்கடமா இருந்துச்சு!''

தேவிகா, கல்லூரி மாணவி, வேலூர்: '' ஊட்டிக்கு டூர் போயிருந்தப்ப, ஆசைப்பட்டு குதிரை மேல ஏறினேன். திடீர்ன்னு குதிரை முரண்டு பிடிச்சு ஓட ஆரம்பிச்சிருச்சு. எனக்குப் பயத்துல மூச்சே நின்னுடுச்சு.  கத்துன கத்தல்ல போலீஸே தேடி வந்துட்டாங்க. கத்துனது நான்தாங்க. குதிரை இல்ல!''’

அப்சல், மென்ஸ் பார்க், தோட்டபாளையம்: ''என் ஃப்ரெண்டோட பாண்டிச்சேரி போக பிளான். பஸ்ஸில் போகாம டூவீலர்ல போனோம். ஆனா, நடு ராத்திரி ஒரு மணிக்கு முந்திரி காட்டுப் பகுதியில் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு. ஸ்டெப்னி கூட எடுத்துட்டு வரலை. காட்டுக்குள்ள இருந்து ஏதோ ஒரு சத்தம் வந்தது. தலைதெறிக்க ஓடிவந்தோம். வெளிச்சத்துல வந்து விடிய விடிய உட்கார்ந்திருந்தோம்!''

- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

டூரில் சொதப்பியது எப்படி?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism