Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

'எனக்கு என்னவோ வர வர உங்கள் எழுத்துகளைப் படிக்கும்போது, நீங்கள் ஒரு ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் மோகியாக இருப்பதாகத் தோன்றுகிறது!'' என்று விகடன் டாட் காமில் குற்றம் சாட்டும் வாசகருக்கு மதிப்பளித்து, இந்த வாரக் கட்டுரையில் இந்த இரண்டு நிறுவனங்களையும் தவிர்க்கிறேன்!

டெக் உலகில் இன்னும் முக்கியமான நிறுவனமாக இருந்தாலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகம் மெனக்கெட்டாலும், அதன் புதுமை முயற்சிகள் இண்டஸ்ட்ரியில் அத்தனை அதிர்வு களை உண்டாக்குவது இல்லை. ஆனால், அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்தபடியேதான் இருக்கிறார்கள். லேட்டஸ்ட் வெளியீடு ஸ்மார்ட் கிளாஸ் (Smart Glass) .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட்டகாசமா இருக்கே... கூகுள் கிளாஸுக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட்டும் கொண்டுவந்துவிட்டதா என அவசரப்பட்டு குதூகலித்துவிட வேண்டாம். இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கிளாஸ், ஒரு அலை மென்பொருள். நீங்கள் மைக்ரோசாஃப்டின் எக்ஸ் பாக்ஸ் (X BOX) விளையாட்டுச் சாதனத்தை வைத்திருந்தால், ஸ்மார்ட் கிளாஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உங்களது தொலைக்காட்சி, எக்ஸ் பாக்ஸ் மற்றும் அலைபேசி அல்லது குளிகைச் சாதனங்களை ஒருங்கிணைக்கலாம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இந்தத் தொழில்நுட்பத்தின் பயனீட்டு அனுபவ உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

டி.வி-யில் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இரவு நேரமாகிவிட்டது. படத்தின் விறுவிறுப்பு உங்களை டி.வி. பார்ப்பதில் ஈர்த்துப் பிடித்திருக்கிறது. ஆனால், அதிகாலையில் எழுந்தாக வேண்டும். படுக்கையில் படுத்தபடி பார்த்துவிட்டுத் தூங்கிவிடலாம் என்றால், படுக்கையறையில் டி.வி. இல்லை. உங்கள் அலைபேசிக்குப் படத்தை நகர்த்திவிட்டால் போதும். டி.வி-யில் இருந்து அலைபேசிக்குப் படம் மாறிவிட, மீதியைப் படுக்கையில் படுத்தபடி அலைபேசியிலேயே பார்த்துக்கொள்ளலாம். மைக்ரோசாஃப்ட்டின் விண்டாஸ் மொபைல் அலைபேசிதான் இதற்குத் தேவை என்பது இல்லை. ஆண்ட்ராயிட் மூலம் இயங்கும் அலைபேசியோ, குளிகையோ இருந்தாலும், இதை இயக்கலாம். ஆப்பிளின் ஐ-பாடிலும் இது இயங்கும் என்கிறது மைக்ரோ சாஃப்ட். ஆனால், ஆப்பிளிடம் இதுபோல

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

கிட்டத்தட்ட இயங்கும் ஏர் ப்ளே (Air Play) தொழில்நுட்பம் இருப்பதால், அவர்கள் இதை அனுமதிப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இன்னோர் பயனீட்டு அனுபவம்...

வீட்டு வரவேற்பறை சோபாவில் அமர்ந்து அலைபேசியிலோ, குளிகை யிலோ இணையதளங்களில் உலவியபடி இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் பெரிய அளவு திரையுடன் டி.வி. அமர்ந்திருக்கிறது. நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் தளத்தை டி.வி-க்கு நகர்த்தி, பெரிய திரையில் பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும். கூகுள் டி.வி. உட்பட எந்தத் தொழில் நுட்பமும் இதுவரை அலைபேசி/ குளிகையில் இருந்து டி.வி-யை இணைத்து, இணையம் பயன்படுத்தும் வசதியைக் கொடுக்க முடியவில்லை. மைக்ரோசாஃப்ட் கொடுக்குமா? ஆப்பிள் மோகியான எனக்குத் தெரியப்போவது இல்லை. சில மாதங்களில் வெளியாகும் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் விண்டோஸ் 8 தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தப்போகும் மைக்ரோசாஃப்ட் பயனீட்டாளர் வாசகர் கள் விகடன் டாட் காமிலோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்திலோ (facebook.com/anandavikatan) பின்னூட்டமிடுங்கள்.

மனிதர்கள் தங்களுக்குள் வாய் திறந்து பேசுவதை அடிப்படையாகக்கொண்டுதான் காலங்காலமாகத் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை நடத்திவந்தன. கம்பி வழித் தொலைத்தொடர்பு (Landline) இருந்த நாட்கள் முடிந்து, அலைபேசியின் ஆதிக்கம் வந்த பின்னரும் இதே வணிக அடிப்படை தான் தொடர்ந்துவந்தது. ஆனால், சென்ற சில ஆண்டுகளாக, பேசுவதற்கான அவ சியம் குறைந்தபடியே இருக்கிறது. உதாரணத் துக்கு, ஒருவர் வீட்டுக்குச் செல்ல எப்படி வர வேண்டும் என்பது கேட்பது குறைந்து போய், நேரடியாகவே நீங்கள் கணினியில் இருந்தோ, அலைபேசியில் இருந்தோ மேப் பார்த்து

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

விவரம் தெரிந்துகொள்ள முடி கிறது. உணவகம் ஒன்றுக்குச் செல்லும் முன்னால், அது எப்படி இருக்கும் என்பதைக் கேட்டு விசாரிக்க அவசியம் இல்லை. உணவின் தரம், சேவை முறைகள்பற்றிய விவரங்களை வெளியிடும் திறனாய் வுத் தளங்களில் இருந்து (Review Websites) விவரங்களைச் சேகரிக்க முடிகிறது. இது மட்டும் அல்ல, டேட்டா வசதியைப் பயன் படுத்திப் பேசவும் முடியும் என்ற அடிப் படையைப் பயன்படுத்தி வெளியிடப்படும் தொழில்நுட்பங்களால், தொலைபேசி நிறுவனங்களுக்குப் பேச்சு (Voice)  என்பதில் இருந்து கிடைக்கும் லாபம் கிடுகிடுவெனக் குறைந்துவருகிறது. அதே நேரத்தில், டேட்டாவின் பயன்பாடு அதிகரித்தபடியே இருக்கிறது.

இந்தியாவில் பேச்சு மற்றும் டேட்டா பயன்பாடுபற்றி அலசலாம் என்ற ஆர்வத்தில் ட்ராய் ( Telecom Regulatory Authority of India )அமைப்பின் ரிப்போர்ட்களை அலசிப் பார்த்தேன். இந்த வருட மார்ச் மாதக் கணக்கின்படி, 90 கோடி மில்லியன்களுக்கும் மேலான அலைபேசி இணைப்புகள் இந்தியாவில் இருப்பதாகச் சொல்கிறது ட்ராய். அதில் 1.4 கோடி இணைப்புகள் அகலக்கற்றை இணைப்புகளாம்.  அப்படியானால், இந்த 14 மில்லியன் பயனீட்டாளர்களும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்களா? சாதாரண அலைபேசி பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர் இணையம் செல்லும் வசதியைப் பயன்படுத்துகிறார்கள்? இதுபோன்ற கேள்விகளுக்கு அந்த அறிக்கையில் விவரங்கள் இல்லை. தகவல் கண்டறியும் சட்டத்தின் கீழ் இந்த விவரங்களைக் கொடுக்கும்படி வற்புறுத்தலாமா என ஒரு கணம் சிந்தித்தேன். ஆனால், தேவை இல்லை.

இந்தத் தொடரின் வாசகர்கள் தங்களது அலைபேசி பயனீடு குறித்த கருத்துகளைக் கொடுத்தால், அதில் இருந்து கணக்கிட்டுக்கொள்ளலாம் என முடிவுசெய்து படிவம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறேன். உங்கள் பயனீட்டு விவரங்களைக் கொடுக்க இந்த உரலிக்குச் செல்லுங்கள். http://ephrontech.wufoo.com/forms/cell-phone-survey/. சில வாரங்களுக்குப் பின், இந்த சர்வேயில் கண்டறியப்பட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்!

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism