Published:Updated:

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!

Published:Updated:

ம்மன் திருவிழாவுக்கு அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வருவதும் தீச்சட்டி கையில் எடுத்து சாமி ஆடியபடி வருவதும் வழக்கமான ஒன்று. ஆனால், சமீபத்தில் சேலம் மாவட்டம், ஓமலூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் விதவிதமாக அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், ஆணிப் படுக்கையில் படுத்தும் அமர்க்களப்படுத்திவிட்டார்கள் தி.க. தொண்டர்கள். பகுத்தறிவைப் போதிக்க தங்களைத் தாங்களே வருத்திக்கொண்டு, பெரியாரின் தொண்டர்கள் மேற்கொண்ட விழிப்பு உணர்வு விழா இது!

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’, 'நெற்றியில் திருநீறு... புத்தியில் கோளாறு’,  'எங்களுக்கு இல்லை இந்துக்களின் ரத்தம்; எங்களுக்கு இல்லை கிறிஸ்துவர்களின் ரத்தம்; எங்களுக்கு இல்லை இஸ்லாமிய ரத்தம்; எங்களுக்கு உண்டு தமிழர் ரத்தம்’, 'தத்துவ மேதை பெரியார் வாழ்க’ போன்ற கோஷங்களுடன் ஓமலூர் சந்தைப் பேட்டையில் இருந்து பஸ் நிலையம் வரை திரண்டுவந்த பெரியார் தி.க. தொண்டர்களை மக்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

ஆறாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் தமிழ்ச்செல்வனும் அலகு குத்தி ஆச்சரியப்படுத்தினான். ''நாங்க பகுத்தறிவுக் குடும்பம். மக்கள் மூட நம்பிக்கையில் அறிவையும் பொருளையும் இழந்துக்கிட்டு வர்றாங்க. அவங்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அலகு குத்தியிருக்கேன். இதற்காக நான் எந்த விரதமும் இருக்கல. சிக்கன், மட்டன் சாப்பிட்டுட்டுதான் அலகு குத்தினேன். காலில் செருப்பும் போட்டிருக்கேன்'' என்றான்.

முதுகில் கூரான கொக்கிகளால் அலகு குத்தி கார் இழுத்துவந்தார் செந்தில்குமார். ''எங்கள் நோக்கம் யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல; புண்பட்டு, புரையோடிய சமூகத்தைச் சீர்திருத்தவே இப்படிச் செய்கிறோம். பல மேடைகளில் பேசிவிட்டோம். ஆனால், மக்கள் இன்னமும் சாமியார்களிடம் சென்று ஏமாறுகிறார்கள். அதனால், எங்களை வருத்திக்கொண்டு இப்படிச் செய்கிறோம். இதைப் பார்த்த பிறகாவது மக்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறோம். மன தைரியம் உள்ள யாரும் அலகு குத்தலாம். இதற்கு பக்தி ஒன்றும் அவசியம் இல்லை'' என்றார்.

தீச்சட்டி ஏந்தி வந்த தீபா, ''சேலம் தாதகாப்பட்டியில் இருந்து 20 பெண்கள் வந்து உள்ளோம். நாங்கள் அனைவரும் மூடநம்பிக்கைக்கு எதிரானவர்கள். பொதுவாகவே ஆண்களை விடப் பெண்கள் அதிகப்படியாக மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கிறார்கள். அதைப் போக்கவே நாங்கள் தீச்சட்டி எடுத்து வருகிறோம். அவர்கள் வேப்பிலையைக் கையில் வைத்துக்கொண்டு சூடு படாமல் எடுத்து வரும் தீச்சட்டியை, நாங்கள் வெறும் கையாலே சூட்டைத் தாங்கிக்கொண்டு எடுத்துவருகிறோம். தீச்சட்டியில் மணலும் சோற்றுக் கற்றாழையும் போட்டு மேலே விறகு வைத்து தீ எரியச் செய்வார்கள். அதனால் கைக்குச் சூடு என்பதே தெரியாது. இதை இவ்வளவு நாட்களாக பக்தி என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்!'' என்றார்.

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!

மேடையில் பேசிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ''இந்த நிகழ்ச்சி மக்களைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நடத்தப்படுவது அல்ல. ஆன்மிகம் என்ற பெயரில் மக்களை எப்படி எல்லாம் முட்டாள்கள் ஆக்குகிறார்கள் என்பதைத் தெளிவுப்படுத்தவே இந்த நிகழ்ச்சி. மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கையும் பகுத்தறிவும் போய்விடும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த ஒரு காரியத்தையும், கவனமாகவும் ஆராய்ந்தும் செய்வான்.

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!

ஆன்மிகம் என்பதே புராணப் புரட்டுகள்தான். கடவுளை வணங்க வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. நீ வணங்கும் தெய்வத்தை ஆராய்ந்தும் சிந்தித்தும் வணங்கு. பெரியாரின் நாத்திகம் என்பது அறிவியல் சார்ந்தது அல்ல; சமுதாயம் சார்ந்தது. சாதியப் பாகுபாடு ஆன்மிகத்தால்தான் ஏற்படுத்தப்பட்டது. பெரியார் அதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினார். அந்த உழைப்பை நாம் அறுவடை செய்துகொண்டு இருக்கிறோம்'' என்று பேசி முடித்தார்!

அலகு குத்திய பெரியார் தொண்டர்கள்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism