Published:Updated:

தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!

தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!

தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!

தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!

Published:Updated:
தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!

தழ் ஆசிரியர், மேடைச் சொற் பொழிவாளர், மனித வள மேம்பாட்டாளர் எனப் பல தளங்களில்பரிண மிக்கும் கவிதாசன், தன் சொந்த ஊரான கோவை மாவட்டம் கந்தேகவுண்டன்சாவடி பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

''மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரமான சாரல் காற்றுத் தழுவிப் போகும் ஆசீர்வதிக்கப்பட்ட கிராமம்தான் கந்தே கவுண்டன்சாவடி. ஆனால், எங்கள் ஊரின் பெயர் க.க.சாவடி, கே.ஜி.சாவடி என்று இரண்டு விதமாக சுருங்கிப்போனதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!
##~##

தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் இருக்கும் என் ஊரைக் கடந்துதான் வாளை யார் வழியாகப் பாலக்காடு போக வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையிலே மிகப் பெரிய வர்த்தகப் போக்குவரத்து இந்த வழியாகத்தான் நடக்கிறது. அந்தக் காலத்தில் கேரளாவில் இருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு தமிழகத்துக்கு நிறைய வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் தங்கி ஓய்வு எடுக்க எங்கள் ஊர் மக்கள் சாவடி கட்டிவைத்திருந் தார்கள். மாநிலம் விட்டு மாநிலம் வரும் மக்களுக்கு ஏதாவது சுகவீனம் என்றால் எங்கள் ஊர் ஆட்கள் மருத்துவ உதவியில் இருந்து உணவு கொடுப்பது வரை சகல உதவிகளைச் செய்து இருக்கிறார்கள்.

மதுக்கரையில் ஏ.சி.சி. சிமென்ட் தொழிற்சாலை வந்த பிறகு, எங்கள் ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனாலும், விவசாயம்தான் எங் கள் மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரம். கரும்பு, மக்காச்சோளம், ராகி, தக்காளி, மரவள்ளி என்று தோட்டப் பயிர் செய்தோம். அதனால், காட்டுப் பன்றிகளின் தொந்தரவு நிறைய இருக்கும். கும்பலாகப் புகுந்து மொத்தப் பயிரையும் அழித்துவிட்டுப் போய்விடும். அத னால், ஊரின் இளவட்டங்கள் தோட்டக் காவ லுக்குப் போவார்கள். நானும் காவலுக்குப் போயிருக்கிறேன். காட்டுப் பன்றிக் கூட்டம் வந்தால், டமடமவென மத்தளம் கொட்டு வோம். அதற்கும் அவை ஓடவில்லை என்றால் பட்டாசு வெடித்து விரட்டுவோம்.

தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!

காவலுக்கு இருந்ததால் பாதி நாட்கள் பள்ளி வீட்டுப் பாடத்தை வரப்பு மேட்டில்தான் அமர்ந்து எழுதினேன். கூடவே கவிதையும். ஆம், வானில் காய்ந்த நிலவும் வரப்பில் சாய்ந் தாடிய பயிர்களுமே எனக்கு கவிதை எழுதக் கற்றுக்கொடுத்தன. நாங்கள் விளைவித்த தானியங்களே எங்களுக்கு உணவு. கேழ்வரகைக் களியாக்கி, சோளம் அரைத்து தோசை சுட்டு, மரவள்ளியை வேகவைத்துச் சாப்பிட்டோம்.

கந்தேகவுண்டன்சாவடியில் மாகாளியம்மன் கோயில் நோன்பு மிகவும் பிரசித்தம். மாவிளக்கு பூஜை அன்று ஊர் விழாக் கோலம் பூணும். நாடு விட்டு நாடு பிழைக்கச் சென்ற மனிதர்கள் அம்மனையும் சொந்த பந்தங்களையும் பார்க்க வருவார்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகக் கழிந்த அந்தத் தருணங்களை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மீண்டும் பெற முடி யாது. கோவை உட்பட சுற்றுவட்டார ஊர் மக்கள் எல்லாரும் தீபாவளியைக் கோலா கலமாகக் கொண்டாடுவார்கள். ஆனால், எங்கள் ஊர் அமைதியாக இருக்கும். ஏன்னா, அது தமிழர் பண்டிகை கிடையாது. தைப் பொங்கல் பண்டிகையை விடிய விடியக் கொண்டாடுவோம். நான்கு நாட்கள் நடக்கும் இந்தக் கொண்டாட்டத்தில் பூப் பறிக்கும் நோன்பு, ரேக்ளா ரேஸ் என்று ஊரே அமர்க்களப் படும்.

இன்றைக்கும் ஊரின் ஒரே பொழுதுபோக்கு கபடிதான். அறுவடை முடிந்த வயல் வரப்பு களிலும் ஆல மரத்தடியிலும் கபடி ஆடுவார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களும் தமிழகத்துக்கு வரும் வாகனங்களுமாக எங்கள் ஊர் சாலை பரபரப் பாக இருக்கும். அப்போது சாலை குறுகலாக இருந்ததால் வாரத்தில் மூன்று நாட்களாவது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக நிற்கும். இன்று எங்கள் ஊரை இரண்டாக பிரித்தபடி நீள்கிறது 47-ம் எண் தேசிய நெடுஞ்சாலை. இப்படி வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டாலும் முன்பு இருந்த பழமையின் இனிமையில் பாதிகூட இப்போது கிடைக்கிறதா என்றால் சந்தேகமே!''

தீபாவளிக்கு அமைதி காக்கும் ஊர்!

சந்திப்பு: எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism