Published:Updated:

காடு... அதை நாடு!

காடு... அதை நாடு!

காடு... அதை நாடு!

காடு... அதை நாடு!

Published:Updated:

குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்களும் இளைஞர்களும் கல்வி கிடைக்கா ததால், பாதை மாறிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைத் தடுத்து அவர்களைச் சிறு வயது முதலே ஒழுக்கமான பாதையில் வழி நடத்த ஏற்படுத்தப்பட்டதுதான் காவல் சிறார் மன்றம். இந்த மன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்வாழ்வு குறித்த பயிற்சிகளை அளிக்கின்றன. அவற்றில் முக்கிய அமைப்பு, 'தி நேச்சர் டிரெஸ்ட்’.

காடு... அதை நாடு!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவல் சிறார் மன்றத்தின் இளைஞர்களை கானகப் பகுதிகளுக்கு அழைத்துப் போய் 'இயற்கையைப் பாதுகாப்பது எப்படி?’ என்பது குறித்த விழிப்பு உணர்வை அளித்து வருகிறது இந்த அமைப்பு.

அமைப்பின் நிறுவனர் திருநாரணன், டிரெஸ்டி பாலாஜி இருவரும் மாணவர்கள் சிலரை அழைத்துக்கொண்டு ஆனை மலைப் புலிகள் காப்பகம் மற்றும் கேரளாவில் உள்ள சின்னார் வனச் சரணாலயம் ஆகிய இடங் களுக்குச் செல்ல முடிவு செய்தார்கள். அவர் களுடன் நானும் வழிகாட்டி கண்ணப்பனும் இணைந்து கொண்டோம்.

அமராவதி வனத் துறைச் சோதனைச் சாவடியில் இருந்து அடர் வனப் பயணம் ஆரம்பம். பிற வனப் பகுதிகளில் காலை, மாலை வேளைகளில்தான் தண்ணீர் குடிப்பதற்காக யானைகள் சாலையைக் கடக்கும். இங்கு யானை கள் இளைப்பாறப் புதர் மற்றும் கிளைகள் அடர்ந்த முள் மரங்களும் யானைகளுக்குப்பிடித்த மான புளிய மரங்களும்  அதிகம் என்பதால், எப்போதும் கஜ ராஜ்ஜியம்தான். காமனூத்து என்று அழைக்கப்படும் இந்தப் பகுதிக்குள் கும்பல் கும்பலாக யானைகளைக் காணலாம்.

அந்த இடத்தைக் கடந்து மலை ஏறினால் வித விதமான ஒலிகளை எழுப்பி நம்மை வரவேற் கின்றன பறவைகள். 'சத்தத்தை வெச்சு என் னென்ன பறவைகள்னு சொல்லுங்க பார்க்கலாம்’ என்று திருநாரணன் கேட்டதும்... 'தேன் சிட்டு, மீன் கொத்தி, செண்பகப் பறவை, ராப் டர்’ என்று சரியாகப் பறவைகளின் பெயர்களைச் சொன்னார்கள் சிறுவர்கள். ஏற்கெனவே வந்த அனுபவமாம்!

அடுத்து சின்னார் வனச் சரணாலயம். பிளாக் டீயும் சில உப்பு பிஸ்கட்களையும் சாப்பிட்டுவிட்டு வனத்தினுள் நுழைந்தோம். சின்னார் வனச் சோதனைச் சாவடிக்குக் கீழ் இறங்கி ஆற்றின் கரை ஓரமாகவே நடந்து சென்று கூட்டாற்றுப் பகுதியை அடைவதுதான் திட்டம்.

காடு... அதை நாடு!

வழி எங்கும் கன்னி மாங்காய் எனப்படும் காட்டு மா மரங்கள். இந்த மாங்காய்களைப் பறித்து ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்ய மலைவாழ் மக்களுக்கு வனத் துறை அனுமதி அளித்து உள்ளது. மீன் பிடிக்க வரும் மலைவாழ் இளைஞர்கள் வீட்டிலேயே சோறு சமைத்துக்கொண்டுவந்து, காட்டில் உள்ள மாங்காய்களைப் பறித்து, உடனடி ஊறுகாய் தயாரித்துச் சாப்பிடுகின்றனர்.

காடு... அதை நாடு!

கூட்டாற்றுப் பகுதியை அடைந்தோம். ஆற்றின் கரையில் உள்ள மரத்தின் மேல் மர வீடு ஒன்று இருக்கிறது. மாலை மூன்று மணி முதல் மறுநாள் காலை வரை இங்கே தங்கலாம். கூட்டாற்றில் தண்ணீர் குடிக்க வரும் சிறுத்தைகளைப் பார்க்க அருமையான வாய்ப்பு இது. கூட்டாற்றின் கரையில் சிறுவர்களை அமரவைத்த திருநாரணனும் பாலாஜியும் ''கான்க்ரீட் காடுகளா இருக்கிற நகரங் களுக்கும், காடுகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குதுங்கிறதை உணர்ந்து இருப்பீங்க. நாம இன்னைக்கு சுத்தமான தண்ணீரை விலை கொடுத்து வாங்குற மாதிரி உன் பேரனும் பேத்தியும் காற்றை விலை கொடுத்து வாங்கக் கூடாது. அப்படி நடக்காம இருக்க மரங்களையும் காடுகளையும் நேசிக்கணும். அதைப் பாதுகாக்கணும்!'' என்று வாழ்க்கைப் பாடத்தை நடத்த ஆரம்பிக்கிறார்கள்!

காடு... அதை நாடு!

கட்டுரை, படங்கள்: எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism