Published:Updated:

இந்தக் கோழிகள் குழம்பு வைக்க அல்ல!

இந்தக் கோழிகள் குழம்பு வைக்க அல்ல!

இந்தக் கோழிகள் குழம்பு வைக்க அல்ல!

இந்தக் கோழிகள் குழம்பு வைக்க அல்ல!

Published:Updated:
இந்தக் கோழிகள் குழம்பு வைக்க அல்ல!

'பூட்டட் பேந்தம்’, 'பிரிசல்’, 'ஜில்கி’, 'சைனா ஜில்கி’... என்ன, வெளி மாநில லாட்டரி டிக்கெட் பெயர்கள் போல இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? இவை எல்லாமே கோழிகளின் பெயர்கள். இவை கறிக் கோழிகள் அல்ல;  வீட்டில் வளர்க்கக் கூடிய கோழிகள். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக் கோட்டை சாலையில் உள்ள வகாப் நகரைச் சேர்ந்த விவசாயி ஜாகிர்அஹம்மது இவற்றை வளர்த்துவருகிறார்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாகிர் அஹம்மதின் தினசரி அதிகாலைப் பொழுதுகள் இந்த விசித்திரக் கோழிகளின் கூவல்களுடனே விடிகிறது.  ''என்னோட சின்ன வயசுல இருந்தே கோழி, சேவல்கள் கூடவே வளர்ந்தவன் நான். என் அப்பா அந்தக்காலத் துல சண்டைச் சேவல் வளர்ப்பார். அதனால், எப்பவுமே பறவைகள் மேல எனக்கு ஒருவித ஈர்ப்பு இருந்துச்சு. அந்த ஆசைக்காகஆரம்பத் தில் லவ் பேர்ட்ஸ் வளர்த்தேன். அப்புறம் வித்தியாசமான கோழி ரகங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன்.  எட்டு வருஷமா பூட்டட் பேந்தம், பிரிசல், ஜில்கி, சைனா ஜில்கி, வால் கோழி, கூஸ் வாத்து ஆகிய ரகங்களை வளர்த்துட்டு வர்றேன். இந்த மாதிரி வித்தியாசமான கோழிகள் எங்காவது இருக்குனு தெரிஞ்சா, உடனே அந்த ஊருக்குக் கிளம்பிடுவேன். என்ன விலை சொன் னாலும் கோழி வாங்கிட்டுத்தான் ஊர் திரும்பு வேன்.

என்கிட்ட இருக்கிற கோழிகள் பெரும்பாலும் கேரளாவில் வாங்கினது. 'பூட்டட் பேந்தம்’ செம கேடி... அவன்கிட்ட நாம கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும். பயங்கர கோபக்காரன். ஆள் பார்க்க குட்டையாத்தான் தெரிவான். புது ஆளுங்க யாரா வது அவனைத் தொடப்போனா நேரா ஆளோட கண்ணை குறிப் பார்த்து எகிறிக் கொத்திடுவான். நம்ம நாட்டு ரகத்துல இருக்குற பெரிய கோழிகள் கூட இவனைக் கண்டா நடுங்கிடும்.  

'ஜில்கி’ அப்படியே முயல் குட்டி மாதிரி. ரொம்ப மிருதுவா பஞ்சு போல இருக்கும். 'பிரிசல்’ ரகமும் இதே மாதிரி சாஃப்ட்தான். ஆனா, பார்க் கிறதுக்கு 70 கிலோ மீட்டர் வேகத்துல பைக் ஓட் டிட்டு வந்தவங்க மாதிரி சிலிப்பிட்டு இருக்கும்.

இதுங்க எல்லோருக்குமே தலைவன்னா அது 'கூஸ்வாத்து’தான். இந்த ஒரு வாத்தை வளர்க்கிறது வீட்டுல ரெண்டு நாய் வளர்க்குறதுக்குச் சமம். எங்க வீட்டுக்குவர்றவங்க நாங்க வளர்க்கும் நாயைப் பார்த்துக்கூட பயப்படுறது இல்லை. ஆனா, இதைப் பார்த்துட்டா அப்படியே மிரண்டு நின்னுருவாங்க. காம்பவுண்ட்டுக்குள்ள புது ஆட் களோ புது உயிரினங்களோ நுழைஞ்சுட்டா சத்தம் போட்டு தூரமா விரட்டிட்டுத்தான் இந்த வாத்துகள் வரும். ஒரு முறை அப்படி உள்ளே நுழைஞ்ச தெரு நாய் ஒண்ணை ரத்தக் களறியாக்கி துரத்திடுச்சு இந்த வாத்து.

இந்தக் கோழிகள் குழம்பு வைக்க அல்ல!

'வால்கோழி’ ரகங்களுக்கு வால் ஒரு மீட்டர் வரை நீளமா வளரும். எங்கே போனாலும் தோகை மயில் மாதிரி வாலை இழுத்துக்கிட்டே திரியும். அப்புறம் கோழிகளுக்கு தொண்டையில் ஏதாவது சிக்கிட்டா ஒரு ஓசை எழுப்பும் பாருங்க... அதே மாதிரி கத்துறது 'சைனா ஜில்கி’ ஸ்டைல். எங்களுக்கு மட்டும் இல்லாம இந்த ஏரியாவுல இருக்கிறவங்களுக்கும் இந்த கோழிகளின் வித்தியாசமான ஓசைதான் தினமும் காலை நேரத்து அலாரம். இந்த ரகங்களில் இருந்து விருத்தியாகும் கோழிகளை விற்பனை செய்றோம். தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூருவில் இருந்தெல்லாம் வந்து வீட்டில் வளர்க்க ஆசையோட வாங்கிட்டுப் போறாங்க. 1,500 ரூபாய் தொடங்கி 15 ஆயிரம் ரூபாய் வரை ரகத்துக்கு ஏத்த மாதிரி விலை. அவ்வளவு செலவு பண்ற அளவுக்கு ஒவ்வொரு கோழிக்கிட்டேயும் ஸ்பெஷல் இருக்கு!'' என்கிறார் ஜாகிர் அஹம்மது!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism