Published:Updated:

வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

Published:Updated:
வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

பெரியார் யார்?

வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

பெரியார். இந்தப் பெயரைக் கேட்டதுமே இன்றைய இளைய தலை முறை யினர் அவரைப் பற்றி அறிந்துள்ள சிந்தனை, 'பெரியார் ஒரு நாத்திகத் தலைவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாகத் திட்டுவார். கடவுள் சிலைகளைப் போட்டு உடைத்தவர்’ என்பதுதான். இதற்கு மேல் பெரியாரைப் பற்றி அவர்களுக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை. இதை சுய தேடல் இல்லாத, வெகுஜன பிரசாரங்களை மீறி எதையும் தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லாத இளைய சமூகத்தினரிடையே, பெரியாரைப் பற்றிய குறுகிய பிம்பத்தைப் பதிய வைக்க சிலர் மேற்கொண்ட முயற்சி என்று சொல்லிவிட முடியாது. மாறாகப் பெரியார் தொண்டர்களும்  அவருடைய வழிவந்தவர்களும் அவரின் ஒற்றைப்பரிமா ணத்தைத் தாண்டி அவரை முன்னிறுத்தத் தவறியதுதான் காரணம். பெரியார் வழிவந்த அரசுகள் எல்லாமே பல நகர்களில் நிறுவிய நினைவுத் தூண்களிலும் சிலைகளுக்குக் கீழேயும் பெரும்பாலும் பொறிக்கப்பட்ட வசனம் 'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்...' என்ற வாசகம்தான். இதைத் தாண்டி பெரியாரின் சமூக நீதிக் கருத்துகள், சாதி ஒழிப்பு கருத்துகள், பெண்ணிய சிந்தனைகள் பொறிக்கப்படுவதே இல்லை. பெரியாரின் பல முக்கியப் பரிமாணங்கள் இளைய தலைமுறையினருக்குச் சரியாக எடுத்துச் சொல்லப்படாதது யார் தவறு?

 கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

கலைஞர்... கடந்த 35 ஆண்டுகளாக  தமிழக அரசியலின் மையப் புள்ளி. தமிழக அரசியல் வரலாற்றில் எவருடைய வெற்றியும் தோல்வியும் அவர் இல்லாமல் இல்லை. 'அரசியல் ராஜதந்திரி’ என வர்ணிக்கப்படுபவர். மோதுகின்ற இரண்டு தலைகளில் எதிர்புறம் நிற்கிற போட்டியாளர் மாறி இருக்கிறாரே தவிர, கருணாநிதி எப்போதும் இரண்டில் ஒன்றாக நிலையாக இருந்திருக்கிறார் (காமராஜரில் இருந்து ஜெயலலிதா வரை). ஆயிரம் விமர்சனங்கள், கோப தாபங்கள், எரிச்சல்கள்இருந்தா லும், அவருக்கு மனதில் நீங்கா இடத்தை கொடுத்துள்ள அனுதாபிகளில் நானும் ஒருவன். ஆனால், இப்போது கலைஞரை 'ராஜதந்திரி’ என்று அழைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

அரசியல் காய் நகர்த்தலில் கலைஞர் யதார்த்தத்தை விட்டு விலகிச் சென்று கொண்டு இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். கலைஞருக்கோ அல்லது தி.மு.க-வுக்கோ விழும் ஓட்டுக்கள் எல்லாமே நேரடியாக தி.மு.க-வை ஆதரித்து விழும் ஓட்டுக்கள் அல்ல. ஜெயலலிதாவை வரவிடக் கூடாது என்ற ஒரேகாரணத்துக் காக கலைஞருக்கு ஓட்டுப்போடும் ஒரு பெரும் கூட்டம் உண்டு. ஆனால், கலைஞ ருக்கு ஜெயலலிதாவை எந்தக் காரணம் கொண்டும் வரவிடக் கூடாது என்ற குறிக்கோள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், மற்ற கட்சிகள் மட்டும் அப்படி நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.

ஜெயலலிதாவும் வரக் கூடாது. வைகோவும் மற்ற கட்சிகளும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாக இருக்கிறது அவர் போக்கு. இதுதான் வேதனையான உண்மை!

 'முதலில் நான் இந்தியன், பின்னர்தான்...’

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்துமஸுக்கு அடுத்து வெகு விமரி சையாக கொண்டாடப்படும் நாள் சுதந்திர தினம்தான். 10-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி மாணவர் தலைவன் என்ற முறையில், திங்கள்கிழமைதோறும் தேசியக் கொடியினை ஏற்றி மாணவர் அணிவகுப்பு நடத்தும் பொருட்டு, முன்னரே பள்ளிக்குச் சென்று கொடியை மடித்துக் கட்டி உச்சியில் ஏற்றிவைக்கும் பொறுப்பும் எனக்கு இருந்தது. தேவாலய வளாகத்திலேயே பள்ளி என்பதால், சுதந்திர தின, அன்று, தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி முடிந்தவுடன் ஒட்டுமொத்த ஊரும் கூடி நிற்க, பள்ளி மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பும் கொடியேற்றமும் நடைபெறும். பின்னர் நாள் முழுவதும் ஓர் இளைஞர் அமைப்பு  குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான விதவிதமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, இரவில் கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் கூட்டத்தில் பரிசு கொடுப்பார்கள். இரவுப் கூட்டத்தில் இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் முன் 'தாய்நாடு நம் தாயைப் போன்றது. நம் தாய்க்கு இணையான தாய்நாட்டுக்கு மரியாதை செய்யும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன்’ என்று உணர்ச்சிவசப்படுவது அநேக மாக நானாகத்தான் இருக்கும்.

வலையோசை - கடற்புறத்தான் கருத்துகள்

இந்தியா, தாய்நாடு, ஜன கண மன, வந்தே மாதரம் இந்த வார்த்தைகளைக் கேட்டாலே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிந்த காலங்கள் அவை. தாய்நாட்டை விட்டு வேலை காரணமாக சிங்கப்பூர் வந்தபிறகு இந்த தேச பக்தி, பெருமிதம் எல்லாம் இன்னும் ஒரு படி அதிகரித்து இருந்தது. ஆகஸ்ட் 15அன்று தேசியக் கொடியைச் சட்டையில் குத்திக்கொண்டு அலுவலகத்துக்குப் போயிருக்கிறேன்.

பள்ளியும், கல்லூரியும் கொடுத்த ஒற்றைப் பார்வை கல்வியைத் தாண்டிப் படிக்கவும், பல நாடுகளைப் பற்றி அறிய ஆரம்பித்தபோதுதான் பல புனித பிம்பங்கள் கலைய ஆரம்பித்தன. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடு, ஒரே எண்ணம், ஒரே மக்கள் என கன்னியாகுமரியில் உட்கார்ந்து கொண்டு 'முதலில் நான் இந்தியன்... பின்னர்தான் எல்லாம்...' என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக காமெடியாகிப் போனது. முகம் தெரியாத மூன்றாவது நாட்டில் ஏதாவது ஓர் உணவகத்தில் அமர்ந்திருக்கும் போது, பாகிஸ்தான் நாட்டு சகோதரன் வந்தாலே கொஞ்சம் சிநேகமாகப் புன்ன கைப்போம். காணக்கிடைக்காத நாட்டில் வட இந்தியரைப் பார்த்தால் பேச்சுக் கொடுப்போம். அதே நேரம் ஒரு ஈழத் தமிழனோ, மலேசியத் தமிழனோ தென் பட்டால் மெதுவாக நம் மனம் அங்கே நகரும். நம் வட இந்திய நண்பரோ பாகிஸ்தான் சகோதரரை நோக்கி நகர நாமோ ஈழத் தமிழனையோ, மலேசியத் தமிழனையோ நோக்கி நகர்ந்திருப்போம்.

'நான் யார்’ எனத் தெளிவாக உணர ஆரம்பித்தபோது 'முதலில் நான் இந்தியன், பின்னர்தான் எல்லாமே...’ போன்ற வெற்று கோஷங்களின் போலித் தன்மை புரியத் தொடங்கியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism