Published:Updated:

என் ஊர் - நேரு ஆட்சிக்கு எதிராக இரண்டு சுண்டெலிகள் !

தா.பாண்டியன்கீழ்வெள்ளைமலைப்பட்டிஉ.அருண்குமார், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

என் ஊர் - நேரு ஆட்சிக்கு எதிராக இரண்டு சுண்டெலிகள் !

தா.பாண்டியன்கீழ்வெள்ளைமலைப்பட்டிஉ.அருண்குமார், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
##~##

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பி னரும் ஆன தோழர் தா.பாண்டியன், தன்னுடைய சொந்த ஊரான கீழவெள்ளை மலைப்பட்டி பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

''அப்போதைய கீழவெள்ளைமலைப்பட்டி ஒரு வறண்ட பூமி. ஆறோ, குளமோ கிடையாது. ஆனா, நிறையக் கிணறுகள் உண்டு. மரங்களோ, காடோ இங்க கிடை யாது. ஆனா, பாம்பும் உடும்புகளும் நிறைய இருக்கும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போ 'அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி’னு சொல்ற பள்ளியில்தான்  ஆரம்பக் கல்வியைப் படிச்சேன். இந்தப் பள்ளிக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கு. எங்கஅப்பா வீரணத்தேவர்தான் அந்தப் பள்ளிக்கூடத் துக்கு ஒரே வாத்தியார். அவர் ஊர் மக்கள் கிட்ட இருந்து நிதி வசூல் செய்து, கஷ்டப்பட்டு பள்ளிக்கூடத்துக்காக ஒரு கட்டடம் கட்டினார். என் அப்பா ஒரு பகுத்தறிவாளர். ஊர்லேயே எங்க வீட்டுக் கொல்லைப்புறத்துல மட்டும்தான் நல்ல தண்ணிக் கிணறு இருக்கும். அந்தக் கிணத்துத் தண்ணியைத்தான் ஊர் மக்கள் எல்லாரும் குடிக்கப் பயன்படுத்துவாங்க. ஆனா, 'தலித் மக்கள் மட்டும் ஆதிக்க சாதியினர் இறைச்சுத் தர்ற தண்ணியைத்தான் வாங்கிக்கணும்’னு எழுதப்படாத விதி இருந்துச்சு. இதுக்கு  எங்க அப்பா ஒத்துக்கிட்டதே இல்லை. தலித்துகளைச் சரிசமமா நடத்தினார். ஊருக்குள்ளே எங்க வீட்டுக்கு மட்டும்தான் தலித் மக்கள் சகஜமா வந்துபோவாங்க. பின்னாட்களில் எங்க ஊர்ல தீண்டாமைக் கொடுமை நீங்குனதுக்கு அப்பாதான் முக்கியக் காரணம்.

என் ஊர் - நேரு ஆட்சிக்கு எதிராக இரண்டு சுண்டெலிகள் !

அதுக்கப்புறம் எங்க அப்பா வேலை பார்த்தப் பள்ளிக்கூடம் அரசாங்கத்தின் நேர டிப் பார்வையில வந்துடுச்சு. அப்பாவுடைய நேர்மைக்குப் பரிசா அடிக்கடி இடமாற்றம் கொடுத்தாங்க.  கம்பம், கூடலூர், புதுப்பட்டி, கருமாத்தூர், கண்ணாம்பட்டி, மாதரை, காமுக்காப்பட்டினு பல ஊர்களுக்குப் போய் வாழ்ந்துருக்கோம். ஆனா, அப்படி எந்த ஊருக்குப் போனாலும்  கோடை விடுமுறைக்கு கீழவெள்ளை மலைப்பட்டிக்கு  வந்துடுவோம்.

என் ஊர் - நேரு ஆட்சிக்கு எதிராக இரண்டு சுண்டெலிகள் !

என் அண்ணனுடைய  பெயர் செல்லப்பா. அவர் மதுரை அமெரிக்கன் காலேஜ்ல பேராசிரியரா இருந்தாரு. அவர்தான் எங்களுக்கு கம்யூனிஸத்தை அறிமுகப்படுத்திவெச்சார். ஊர் மரத்தடியில் எங்களை உட்காரவெச்சு, ரஷ்யாவைப் பத்தியும் முதல் உலகப் போரைப் பத்தியும் கதைபோல் சொல்வாரு. அதுதான் எனக்கு கம்யூனிஸத்தின் பால பாடம். இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்ப எனக்கு 15 வயசு. நான், எங்க அண்ணன் விக்டர் சீனி, மற்றும் பால்ராஜ் எனும் ஒரு நண்பர் மூணு பேரும் சேர்ந்து, 'நேரு ஆட்சியைக் கவிழ்ப்போம். இந்தியாவில் நாளை புரட்சி தொடங்குகிறது. அனைவரும் வாருங்கள்’னு எழுதி உசிலம்பட்டி முழுக்க அங்கங்கே ஒட்டிட்டோம். ஏரியாவே பரபரப்பாகிருச்சு. உடனே போஸ்டர் அடிச்சு ஒட்டின எங்களை அரெஸ்ட் செஞ்சு 'முனிசிபல் மாஜிஸ்திரேட்’ முன்னாடி ஆஜர்படுத்தினாங்க. எங்க மூணு பேரையும் பார்த்த மாஜிஸ்திரேட், 'பொடியனுங்களா இருக்கீங்க... உங்க மூணு பேரையும் விட்டுடுறேன். அதுக்கு முன்னாடி 'மகன் தந்தைக்காற்றும்...’னு ஒரு குறள் தொடங்கும் இல்லையா... அதை முழுசா சொல்லிட்டுக் கிளம்புங்க’ன்னாரு. எங்க அண்ணனும் பால்ராஜும் தடுமாறி நிற்க, நான் கடகடன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். அவர் என்னை மட்டும் விட்டுட்டு மத்த ரெண்டு பேரையும் 15  நாள் ரிமாண்ட் பண்ணிட்டார். மறுநாள் தினமணி பேப்பர்ல 'நேரு ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற இரண்டு சுண்டெலிகள் கைது’னு நியூஸ் போட்டிருந்தாங்க.  

என் ஊர் - நேரு ஆட்சிக்கு எதிராக இரண்டு சுண்டெலிகள் !

அப்போ எங்களோட கதா நாயகர் முத்துராமலிங்க தேவர். உசிலம்பட்டிக்கு அவர் வந்தாலே ஊர் மக்களும் அவரைப் பாக்க வந்திருவாங்க. உசிலம்பட்டிமைதா னம் முழுக்க மக்கள் நிரம்பி இருப் பாங்க. மைக் இல்லாமலே அங்கே இருக்கிற அத்தனை பேருக்கும் கேட்கிற மாதிரி அவர் தன் வெண்கலக் குரல்ல பேசுவார். அவர்தான் என் முதல் அரசியல் ஆசான். அவருக்குப் அப்புறம்தான் நான் காமராஜரைப் பின்பற்றினேன். எனக்கு இன்று இருக்கும் போராட்ட குணங்களுக்கு என் ஊரும், இளம் வயதில் அங்கு நான் வாழ்ந்த வாழ்க்கையும் தான்காரணம்!''

என் ஊர் - நேரு ஆட்சிக்கு எதிராக இரண்டு சுண்டெலிகள் !