Published:Updated:

ஒரு போட்டோ எடுத்துட்டு விட்டுடுறோம் !

மோ.கிஷோர்குமார் படங்கள்: பா.காளிமுத்து

ஒரு போட்டோ எடுத்துட்டு விட்டுடுறோம் !

மோ.கிஷோர்குமார் படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
##~##

இயக்குநர் சிம்புதேவனின் திருமணம்  சென்ற வாரம் மதுரை சிக்கந்தர் சாவடி, பொன்னழகர் திருமண ஹாலில் இனிதே நடைபெற்றது. இயக்குநர்கள் மகேந்திரன், ஷங்கர், பாலாஜி சக்திவேல், எஸ்.பி.ஜனநாதன், லிங்குசாமி, அமீர், வசந்தபாலன், சமுத்திரக்கனி, சசி, பிரபு சாலமன், 'ஜெயம்’ ராஜா, கரு.பழனியப்பன், பாண்டிராஜ் எனத் தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் பலர் வருகை தர, வைகைப் புயல் வடிவேலு, கவிப்பேரரசு வைரமுத்து, இளவரசு, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் போன்றவர்களும் கலந்துகொண்டு விழாவை கலர்ஃபுல் ஆக்கினார்கள். விழாவில் இருந்து சில க்ளிக்குகள்...

 சிம்பு தேவன் சமர்த்துப் பையன் போல. சினிமா உலகில் இருந்துகொண்டு அரேஞ்ச்டு மேரேஜ் செய்து உள்ளார். மணப்பெண் எஸ்.பி.கலைவாணி, எம்.பி.ஏ. பட்டதாரி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர். தங்கச் சரிகை போட்ட அரக்குக் கலர்ப் புடவையில் மணப்பெண் ஜொலிக்க, 'மிஸ்டர் க்ளீன்’ கோட் சூட் காஸ்ட்யூமில் சின்ன தாடியும், பெரிய புன்னகையுமாக வந்தவர்களை வரவேற்றார் சிம்புதேவன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழக்கமான தன் வெள்ளை ஜிப்பா பாணி காஸ்ட்யூமில் வந்திருந்தார் வைரமுத்து. நலம் விசாரிக்கும் தாய்க்குலங்களுக்கு அசராமல் ஆட்டோகிராஃப் போட்டுத் தந்தார்!  

ஒரு போட்டோ எடுத்துட்டு விட்டுடுறோம் !

வெள்ளை சட்டை, பேன்ட் காம்பினேஷ னில் கார்ப்பரேட் லுக்கில் கிட்டத்தட்ட ஹீரோ போல வந்து அசத்தினார் ஷங்கர். கையில் சின்னதாக கிஃப்ட் பேக். ''அதுல மோதிரம்தான் இருக்கும். அது தங்கமா, வைரமான்னு தெரியலை!'' ஷங்கர் கையில் இருந்த கிஃப்ட்டை பார்த்து மொத்தக் கூட்டமும் இப்படித்தான் பேசிக் கொண்டு இருந்தது!

திருமண விழாவின் சாக்லேட் பாய்  இசை யமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார்தான். வந்து இருந்த கல்லூரி மாணவிகள் அத்தனை பேரும், ஜீ.வி-யைப் பார்த்ததும் பாய்ந்து மொய்க்க, வெட்கத்தில் நெளிந்துகொண்டு இருந்தார் ஜீ.வி.  'சார் கூச்சப்படாதீங்க... ஒரு போட்டோ  எடுத் துட்டு விட்டுடுறோம்!'' என்று ஒரு பெண் சொன்ன பிறகே 'ஓ... எஸ்’ என நார்மலானவர், போட்டோவுக்குப் போஸ் கொடுக்க ஆரம்பித்தார்!

ஒரு போட்டோ எடுத்துட்டு விட்டுடுறோம் !

சரியாக 9.52 மணிக்கு மணமகள் கழுத்தில் தாலி கட்டினார் சிம்புதேவன். தாலி கட்டியதுமே  வைரமுத்து காலில் மணமக்கள் இருவரும் விழுந்து வணங்கினர். அடுத்து வந்த ஷங்கர் காலில் சிம்புதேவன் விழப் போக, பதறிவிட்டார் ஷங்கர், ''அட என்னய்யா இது... எந்திரி. நல்லா இருங்க!'' என்று வாழ்த்தினார்.

அமீரின் புதிய கெட்டப்தான் டாக்  ஆஃப் தி ஃபங்ஷன்.  கருகரு தாடி, ஜிம் பாடி  என முரட்டுத்தனமான லுக்கில் வந்து இருந்தார்!

 'ஒரு நடிகை கூட வரலையேப்பா...’ இதுதான் ஒட்டுமொத்தக் கூட்டத்தின் வருத்தம். ''மொத்தம் மூணு படம் எடுத்திருக்கிறார். அதில் ஆறு ஹீரோயின் நடிச்சிருக்காங்க. ஆனா, ஒருத்தரும் வரலையே!'' என்று புள்ளிவிவரங்களை அள்ளி வீசி வருத்தப்பட்டது கல்லூரி காளை ஒன்று!

ஒரு போட்டோ எடுத்துட்டு விட்டுடுறோம் !

சந்தன கலர் ஜிலு ஜிலு சட்டை, கூலிங் கிளாஸ் சகிதம் வடிவேலு வந்தபோது அத்தனை ஆர்ப்பரிப்பு. மணமக்களை வாழ்த்தியவர், மேடையில் இருந்த குட்டி, சுட்டிகளிடம் காமெடி பண்ணிக்கொண்டு இருந்தார். அவர் கிளம்பும்போது, ''வடிவேலு அங்கிள் எப்போ உங்களைப் படத்துல பார்க்கலாம்?'' என்று ஒரு வாண்டு கேட்க, வடிவேலு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism