Published:Updated:

இளமை இதோ...இதோ !

பக்குவமே பண்பட்ட அழகு !வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி

இளமை இதோ...இதோ !

பக்குவமே பண்பட்ட அழகு !வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி

Published:Updated:

உங்களை மெருகேற்றும் மேக்னெட் தொடர்

##~##

அனுபவங்கள் நிறைய சம்பாதித்துச் சேர்த்திருக்கும் வயது... 55. இந்த வயதில் அழகு என்பது... பக்குவமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரோக்கியம் இந்த வயதில் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகமுக்கியம். மாரடைப்பு, மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஞாபகமறதி என பிரச்னைகள் வரிசை கட்டும். 'மஸிள் மாஸ்’ எனப்படும் தசைச் சுருக்கங்கள் அதிகம் ஏற்படும். எலும்புகள் வளைந்து கூன் விழும். ரிட்டயர்மென்ட் நெருங்கும் இந்த வயதில் பணரீதியான, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் குறித்த மனரீதியான அழுத்தங்களும் ஏற்படும்.

சர்க்கரை நோய் காரணமாக... பாதத்துக்கு சரியான ரத்த ஓட்டம் இல்லாமல் போகும். இதனால் டயாபடிக் ஃபுட் அல்சர் ஏற்படும். பாதத்தில் ஏதேனும் காயம் ஏற்படும்பட்சத்தில், அது ஆறுவதற்கு நாளாகும். எனவே, காலணிகளைத் தேர்ந்தெடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் கவனமாக இருக்க வேண்டும். வெறும் காலில் நடப்பது, மற்றவர்கள் பயன்படுத்திய காலணியைப் பயன்படுத்துவது, நைலான் சாக்ஸ்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வெளியில் சென்று வந்ததும் பாதத்தை நன்றாகத் தண்ணீரில் சுத்தப்படுத்த வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் பாதத்தை மிதமான வெந்நீரில் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, மாய்ச்சரைஸர் கிரீமை அப்ளை செய்து, காட்டன் சாக்ஸ் போட்டுக் கொண்டு தூங்கலாம். இப்படி தினமும் செய்வதால் பாதத்துக்கு ரத்த ஓட்டம் சீராகக் கிடைப்பதுடன், நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

இந்த வயதில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து கொண்டே வரும். எனவே சளி, இருமல், காய்ச்சல் என்று ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், 'நம்ம உடம்பு இதையெல்லாம் தாங்கிடும்' என்று முன்னைப் போல் நம்பிக்கொண்டு இருக்காமல், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்யலாம்.

செரிமான சக்தி குறையும் என்பதால், உணவுக் கட்டுப்பாடு மிகமுக்கியம். கூன் விழாமல் இருக்க, உணவில் தேவையான அளவு கால்சியத்தையும், வைட்டமின் 'டி’ உள்ள உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 'ஆஸ்டியோபெரோசிஸ்' எனப்படும் எலும்பு நுண்துளை நோயுள்ளவர்கள், தலை, கால், கைகளுக்கு அதிக பிரஷர் கொடுக்கக்கூடிய மசாஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நடப்பதற்கு சிரமப்படுபவர்கள், கீழே ஊன்று முனைகள் கொண்ட வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தலாம். நல்ல கிரிப் கிடைக்கும்.

இளமை இதோ...இதோ !

இதோடு மிகமுக்கியமானது... கழிவறை மற்றும் குளியல் அறை பாதுகாப்பு. இந்த இரண்டு இடங்களிலும் நீர்த்தேக்கம் இல்லாமல், சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் டைல்ஸைவிட சிமென்ட் தளமே சிறந்தது.

இந்த வயதில் வாழ்க்கையின் மீதான அலுப்பை விரட்டி, ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். 'பிரச்னைகளை இழுத்துக் கொண்டும், உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டும் வீட்டுக்குச் சுமையாக ஏன் இருக்க வேண்டும்? இனி என்ன இருக்கு..?’ என்று சோர்வாகாமல், வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக்கு தன்னுடைய அனுபவத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது... பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்வது... என்று நம்முடைய இருப்பு... குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் தரக்கூடிய, சந்தோஷம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பிறகு பாருங்களேன்... உங்கள் வீட்டின் அன்பு, அழகுப் பாட்டி எல்லாமே நீங்கள்தான்!  

             நிறைவடைந்தது

எப்போதும் இளமையாக இருக்க... !

வயதைக் கூட்டிக் காட்டும் ஆபத்து... தாழ்வு மனப் பான்மை. வயதை குறைத்துக் காட்டக்கூடிய ஓர் மந்திரம்... தன்னம்பிக்கை! எனவே, எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருங்கள்!

ஏதேனும் விசேஷம், திருவிழா என்றால் மட்டும் அழகு மேல் அக்கறைப்பட்டு பார்லரைத் தேடி ஓடாமல், எப்போதும் அழகுப் பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்!

ஆரோக்கியம்தான் அழகை வெளிப்படுத்தும். எனவே, வெளிப்பூச்சுகளில் மட்டும் நம்பிக்கை வைக்காமல், உள் ஊட்டச்சத்துகளில் கவனம் செலுத்துங்கள்!

இளமை இதோ...இதோ !

'ஏஜிங்’ என்பது இயற்கையான விஷயம் என்பதால், அதை இயல்பாக எதிர்கொள்ளும் சூட்சமத்தை கற்றுக் கொள்ளுங்கள்!

குடும்பத்துக்கும் சுற்றத்துக்கும் என்றும் அன்பானவளாக இருந்தால், எப்போதும் அழகி நீங்கள்தான் !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism