Published:Updated:

''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்!''

''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்!''

''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்!''
##~##
தி
ண்டிவனத்தில் பன்னீர் என்றால் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, அவருடைய குரல் குட்டிக் குழந்தைக்குக் கூடப் பரிச்சயம்.

இது ஏதோ பில்டப் என்று நினைக்கவேண்டாம். மரண அறிவிப்பிலிருந்து நகைக் கடைத் திறப்பு வரை ஆட்டோவில் மைக் செட் மூலம் விளம்பரம் செய்யும்  குரல் இவருடையது.

'பதினாலு வயசுல படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். கோயில் திருவிழா, கட்சி மீட்டிங்னு ஊர் ஊராப் போய் மைக் செட் போட்டுக்கிட்டு ஜாலியா சுத்திக்கிட்டு இருப்போம். ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா தருவாங்க. நான் சொல்றது நாப்பது வருஷத்துக்கு முன்ன. அப்போ ஒரு தடவை கம்யூனிஸ்ட் கட்சி,  ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கூட்டம் நடக்கறதைப் பத்தி ஊரா ஊராப் போய்ச் சொல்லணும். மைக்ல சொல்லிக்கிட்டுப் போற ஆள் வராததால என்னைப் பேசச் சொன்னாங்க. அதுக்குக் கூலியா 10 ரூபா கொடுத்தாங்க. அஞ்சு ரூபாயைவிட பத்து ரூபாய் பெரிசுதானே?

காசும் அதிகமாக் கிடைச்சுது. இந்த வேலை  யும் பிடிச்சுப்போச்சு. அதையே முழு நேரத் தொழிலாப் பண்ண ஆரம்பிச்சேன். ஒரு  விஷயத்தை வெறும் தகவலாச் சொன்னா கவனிக்கமாட்டாங்க. அதனால் கொஞ்சம் கற்பனை கலந்து ஜாலியாச் சொல்வேன். நிறைய விளம்பர வாய்ப்புகள் வந்தன.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் நிறைய வாய்ப்புகள் வரும். மத்த மாசங்கள்ல சுமாரா பத்து விளம்பரமாவது கிடைக்கும். திண்டிவனம் மட்டும் இல்லை, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், வானூர் வரைக் கும்  நம்ம குரல் பிரபலம்!' என்கிறார் பெரு மிதம் பொங்க.

அ.அச்சனந்தி

அடுத்த கட்டுரைக்கு