Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:

மண்கவுச்சி

வலையோசை

ஆயிரம் காலத்துப் பயிர்!

வலையோசை
##~##
மிழர் திருமணங்களில் இன்றும் சில சடங்குகள் தொடர்கின்றன. நாட்டுப்புறத் மக்களிடம் இன்றுவரை தொடரும் சடங்கு பாலி விடுவது. இது வேளாண்மைத் தொழிலின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. நவதானியங்களை முளைக்கவைத்துத் திருமணம் நடக்கும் நாளன்று நீர் நிலைகளில் விடுவதே இந்தச் சடங்கு. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முதுமொழி. வேளாண்மையோடு தொடர்பு உடைய சமூகத்தின் வெளிப்பாடுகளாக இந்தப் பழமொழியும் இந்தச் சடங்கும் தோன்றியிருக்கின்றன.

நேற்று என் அக்காள் மகன் திருமணத்தில் இந்தச் சடங்குக்காக திருமுதுகுன்றம் தெப்பக்குளத்துக்குச் சென்றோம். அங்கு குடிமகன்களின் நற்செயலால் உடைந்து கிடந்த மதுபாட்டில்களுக்கு இடையே நடனம் ஆடியபடி சென்று ஒருவழியாக முளைப்பாரியைக் குளத்தில் கரைத்தோம். பின்பு  அரசாணிக் கழி நடும் சடங்கினையும் செய்தோம். தானியங்களை முளைக்கவைப்பதும் அரசங் குச்சியை நட்டுவைப்பதும் இயற்கைக்குச்  செய்யும் மரியாதையாக இருக்கலாம்!

அம்புலி விளையாட்டு!

வலையோசை

ழும் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவது உண்டு. குழந்தையைக் காலில் கிடத்தி விளையாட்டு காட்டுவதுதான் அம்புலி என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் என்ற பகுதியில் அம்புலி என்பது குழந்தையின் 15 ஆம் மாதத்துக்கு உரியது. இப்பருவத்தில் குழந்தையுடன் விளையாட வரும்படி நிலாவை அழைப்பது மரபு. கிராமத்தில் குழந்தையைப் படத்தில் உள்ளவாறு அமர்த்தி பாட்டுப்பாடி விளையாட்டுக் காட்டுவார்கள். பெரியவர் பாடலைப்பாட குழந்தையும் பின்பற்றிக்கூறுவதாக விளையாட்டுத் தொடரும்.

அம்புலி அம்புலி எங்க போன?
ஆவாரங்காட்டுக்கு
ஏன் போன?
குச்சி ஒடிக்க...
என்று நீளும் அந்தப் பாடல்.

தெம்பூட்ட வேண்டும் தெருக் கூத்துக்கு!

வலையோசை

மிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக் கூத்துக்கலை நலிவடைந்துவருவது ஒரு வரலாற்றுச் சோகம். கிராமங்களில் அறுவடை முடிந்து உழவர்கள் ஓய்வாக இருக்கும் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படும். கூத்து நிகழ்த்துவதற்குத் என்றே ஒவ்வொரு ஊரிலும் திடல் உண்டு. ஊரே திரண்டுவந்து இந்தக் கூத்துகளைக் கண்டுகளிப்பது வழக்கம். தமிழிசைக் கருவிகள் முழங்க முன் இரவில் தொடங்கி விடிய விடிய ஆடலும் பாடலுமாகக் கூத்து களைகட்டும். கூத்து தொடங்கியதும் அரங்கத்தில் முதலில் வருகின்ற கதாபாத்திரம் கட்டியக்காரன் என்கிற கோமாளி. குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருங்கே கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரமான அவர், இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணங்களை முகத்தில் பூசி ஒப்பனை செய்து இருப்பார். விளக்கொளியில் மின்னும்படியான பளபளப்பான உடையணிந்து இருப்பார்.

''பள பள பள பள பள பப்பூன் வந்தேனே... பன மரத்துல ஏறி தொப்புன்னு உழுந்தேனே'' என்று பாடியபடி அரங்கத்தை வலம் வரும்போது பார்வையாளர்களிடையே சிரிப்பொலி பரவும். பார்வையாளர்களை வரவேற்று நகைச்சுவையான பாடல்களைப் பாடி, நிகழவிருக்கும் கூத்தின் பெயரையும் கதைச் சுருக்கத்தையும் கூறுவார். அதன் பின்னர் வரக்கூடிய முதன்மைக் கதாபாத்திரங்களுக்குத் தோழனாக, தோழியாக, பணியாளராக, அமைச்சராகச் சூழலுக்கு ஏற்ப அவர் வேஷம் மாறும்.

கூத்து முடிகின்றவரை கலைஞர்களுக்கு ஊரில் விருந்தோம்பல் நடைபெறும். மக்களுக்கும் கலைஞர்களுக்குமான உறவு நெருக்கம் உடையதாக இருக்கும். இன்றைக்கும் ஒரு சில ஊர்களில் கூத்து நிகழ்த்தப்படுகிறது. ஆனால், பார்வையாளர்கள் அதிகம் இல்லாததால் கலைஞர்களின் கலை வெளிப்பாடு குறைகிறது.

அரசாங்கம் கூத்துக் கலைஞர்கள் சங்கத்துக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கி உதவினால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து அவர்கள் விடுபட முடியும். வயது முதிர்ந்த அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைப் போல் வயது முதிர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கலாம். குறவன்குப்பம் சடகோபன், கொய்யாத்தோப்பு முத்துலிங்கம், தாழம்பட்டு தணிகாசலம், வேகாக்கொல்லை சின்னதுரை, பயித்தம்பாடி சீனுவாசன், பெருமாள் நாயக்கன்பாளையம் ராமு, செட்டிச்சாவடி செல்வராசு போன்ற கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் முக்கியமானவர்கள். இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியக் கூத்துக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அரசு பொருட்காட்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் கூத்து நிகழ்த்தினால் அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்யலாம்.